Posts

Showing posts from October, 2009

படித்தது / பிடித்தது - 80

சாதி... சில குறிப்புகள்! - ஆழியூரான் நன்றி : நடைவண்டி

படித்தது / பிடித்தது - 79

குழந்தைகளின் உலகில்..!!! ஏழுமலையும் ஏழுகடலும் தாண்டி மாயமாய் மறைந்து கிடக்கும் பச்சைத்தீவில் வானம் தொட்டு உயர்ந்து நிற்கும் ஆலமரத்தின் அடியில் புதைந்து கிடக்கிறது ராட்சஷனின் உயிரைத் தாங்கி நிற்கும் மரகத வீணை.. ராஜகுமாரன் அதனைத் தேடி எடுத்து உடைக்க யத்தனித்தபோது.. எங்கிருந்தோ வந்த அப்பாவின் குரல் கேட்டு அம்மா காணாமல் போக.. அசதியில் தூங்கி போகிறது குழந்தை..!! இருந்தும் - எப்போது கதை மீண்டும் தொடங்கப்படுகிறதோ அப்போது தான் கொல்லப்படுவோம் என்பதை அறியாதவனாக குழந்தையின் ஆழ்மன அடுக்குகளில் தீராத வன்மம் கொண்டவனாக அலைந்து கொண்டே இருக்கிறான் ராட்சஷன்..!!! - கார்த்திகைப் பாண்டியன் நன்றி : பொன்னியின் செல்வன்

படித்தது / பிடித்தது - 78

என் ஜன்னலின் வழியே... எப்போதும் திறந்திருக்கும் என் ஜன்னலின் வழியே வெளிச்சத்தைத் தவிரவும் வேறு சில வந்து செல்கின்றன வீட்டுக்கார கிழவியின் சப்தம் கிழவியின் வெள்ளைப் பூனை பூனையின் குட்டிகள் புதிதாக புற்றமைத்திருக்கும் எறும்புக் கூட்டம் கரையான் பூரான் தவிர அவ்வப்போது காற்று கூட வந்து செல்கிறது. ஆனால், ஒரு போதும் வரவேயில்லை என் தனிமையை உடைக்கும் ஒரு பலசாலி! - கிருஷ்ணமூர்த்தி நன்றி : பெயரற்ற யாத்ரீகன்.

படித்தது / பிடித்தது - 77

தகப்பனாக இருப்பது "அப்பா இன்னும் வரலை" எனக்கூறும் மகனின் பொய்யை கேட்டுக்கொண்டிருக்கிறேன். வீட்டினுள் இருந்தபடி. "போயிட்டாருப்பா" என திரும்பும் மகனின் முகம் காண இயலாததாய் இருக்கிறது. கடன்காரனாக இருப்பதையும் விட கொடுமையானது சில நேரம்... தகப்பனாய் இருப்பது. - பா.ராஜாராம் நன்றி : கருவேல நிழல்.....

படித்தது / பிடித்தது - 76

அறை கலவியில் முந்திய விந்துக்கு நடிக்கத் தெரியாத மனைவியை உப்புக் கரையாத தோசைக்கு அறைவேன் அழகாய் இருக்கும் மாணவியை அடிக்கடி அழ வைக்க கையெழுத்து நல்ல காரணம் முதலையின் பற்கள் குறித்த கேள்விக்கு அவளை நான் கடைசியாய் அறைந்தேன் முத்தமிடும் வேட்கை மிக முத்தமும் சிலுவையும் இணை பிரியாதவை முத்தமிட்டு சிலுவையில் அறைந்தாலும் சிலுவையிட்டு முத்தம் பறந்தாலும் பேரறிவாளன் நான் நாடகங்களில் நீண்ட வசனம் பேசும் ஷைலக்கின் பாத்திரம் எனதே கடைசி விருந்து நாடகத்திற்கு உங்களுக்கு அனுமதி இலவசம் ஆண்டோனியோ - நேசமித்ரன் நன்றி : நேசமித்ரன் கவிதைகள்

ஒரு குட்டி பூர்ஷ்வாவின் எண்ணங்கள்

சம்பவம் நிகழ்ந்து சரியாய் இரு வாரங்களுக்குப் பிறகு ரோசா வசந்த் தன் தரப்பை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார். அவற்றில் வெளிப்படும் அவரது எழுத்தின் நடையும், கருத்துக்களின் தீவிரமும், விஷயத்தில் நேரடியாய் சம்மந்தப்படாத என் போன்ற ஒரு மூன்றாம் நபரை மிகவும் வசீகரிக்கக் கூடியவை (தொகுத்து கீழே தந்திருக்கிறேன்). கிட்டதட்ட விருமாண்டி படம் பார்ப்பது போல் இருக்கிறது. அது ரோஷாமன் ; இது 'ரோசா'மன் . காலவரிசைப்படுத்தப்பட்ட ரோசாவின் இடுகைகள் : ஜ்யோவராமிற்கு! முடிவுரை. விவாதம் - 1 சென்ற பதிவு. `தண்ணீ'. நடந்தவை-2. பிண்ணணி. நடந்தவை-1 கொலைகாரக் கும்பல்-1 (title unknown) பின்குறிப்புகள் : தலைப்பில் இருக்கும் 'குட்டி பூர்ஷ்வா' என்பது என்னையே குறிக்கிறது என்று சொல்லி இம்முறை தப்பிக்க விரும்பவில்லை; அது ரோசா தான். வழக்கம் போல் ஜ்யோவ்ராம் / ரோசாவுக்கு ஆதரவாய் / எதிராய் எழுதப்பட்டதல்ல இது. ரோசா தரப்பை தொகுப்பதே பிரதான‌ நோக்கம். முன்பு போலவே, 'ஒரு குட்டி பூர்ஷ்வாவின் எண்ணங்கள்' என்ற இத்தலைப்பும் ரோசா பதிவின் பெயரிலிருந்தே எடுத்தாளப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நான் எழுதுவது 'ஒர

படித்தது / பிடித்தது - 75

உதிரும் மலர்கள் முறைகளை ஒருங்கிணைப்பவர்கள் ஒவ்வொன்றாக ஞாபகமூட்ட பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள் முடிந்ததும் கூடத்திற்கு அழைத்துவரப்பட்டார்கள் வாழ்த்துச் சொல்ல மேடையேறியவர்கள் சோடியம் விளக்கொளியில் மலர்ந்து உதிர்ந்து கொண்டிருந்தார்கள் புதிய மலர்களைத் தேடித் தேடி பகிர்ந்து கொண்டிருந்த இளைஞர்கள் தாம் ரசித்த தாமரை மொட்டை பாதுகாப்பான அடுக்கில் கனவுக்கென சேமித்துக் கொண்டார்கள் ஒலிப் பெருக்கியின் இரைச்சல் கூடத்தின் சப்தத்தோடு பிணக்கு கொண்டிருந்தது புகைப்படமெடுக்க அழைக்காத கோபத்தில் சாப்பிட மறுத்து ஒரு உறவு முறை வெளிநடப்பு செய்து கொண்டிருந்தது மணம் கொண்டவர்களுடான நெருக்கத்தைக் காட்டிக் கொள்ள முனைந்த நிகழ்வுகள் திரையோடான வாழ்க்கையை நிதர்சனப் படுத்தியது புனைவின் இறுதிக் காட்சியாக மணம்கொண்டவர்களுக்கு ஒரு கூட்டம் திகட்ட திகட்ட பந்தி பரிமாறியது கடைசிப் பந்தியில் அமர்ந்த விழா அமைப்பாளர்கள் விழாவின் கூட்டத்தையும் விருந்தின் சுவையையும் சிலாகித்துக் கொண்டிருந்தார் தூர் நெளிந்த ஈயப்பாத்திரத்தில் மீந்த உணவெடுக்க வந்திருந்த மேலாடையில்லாத பாவாடைச் சிறுமி ஐஸ்கிரீம் மறுக்கப்பட்ட புறக்கணிப்பின் வலியை அ

சில‌ சிந்தனைகள் - 6

அருண் வைத்யநாதனின் அச்சமுண்டு! அச்சமுண்டு! படம் பரவாயில்லை. குறிப்பிடத்தகுந்த விஷயங்கள் என்றால் ப்ரசன்னா, சினேகா இருவரின் தேர்ந்த நடிப்பு, கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை, மற்றும் அருணின் இயல்பான வசனங்கள். Neat and Clean. ^^^^^^^^^^^^^^^^^ நந்தினியின் திருதிரு துறுதுறு படம் சுவராசியமானதொரு முய‌ற்சி. பெண்களால் மட்டுமே எடுக்க முடிந்த மிகுந்த ரசனைக்குரிய சாஃப்ட் ரொமான்ஸ் இதன் ஸ்பெஷாலிட்டி. அதிலும் ரூபா மிக அழகாக இருக்கிறார். அப்புறம் மெளலி மற்றும் வசன‌ங்கள். ^^^^^^^^^^^^^^^^^ கே.எஸ்.ரவிக்குமாரின் ஆதவன் ஏதோ தேறுகிறது. சூர்யாவுக்கு இது வேண்டாத வேலை. வடிவேலு பரவாயில்லை. தசாவதாரம் போன்ற வித்தியாசங்களுக்குப் பிறகும் தன்னுடைய பழைய மூத்திரத்தை - மன்னிக்கவும் சூத்திரத்தை - மாற்ற மறுக்கிறார் இயக்குநர். ^^^^^^^^^^^^^^^^^ எஸ்.பி.ஜனநாதனின் பேராண்மை நன்றாக இருந்தது. குறிப்பாய் அதன் திரைக்கதை, வசனம் மற்றும் ஒளிப்பதிவு. ஜெயம் ரவியும் அந்த அழகான ஐந்து பெண்டுகளும் கூட நன்றாக நடித்திருந்தனர். இந்த வருடத்தின் குறிப்பிடத் தகுந்ததொரு முயற்சி. ^^^^^^^^^^^^^^^^^ பேராண்மை படத்தில் தலித் கதாநாயகனை மற்ற‌வர்

படித்தது / பிடித்தது - 74

" காலம் பல நேரங்களில் சிலர் மூலமாக பரீட்சை வைத்து விட்டு பின் பாடத்தை நடத்துகிறது. " - அம்பி (' புடவை ' என்ற இடுகையில்). நன்றி : அம்மாஞ்சி

ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கம்

" நமக்கு தொழில் முடிந்தவரை கலகம். கலகிய பின் எண்ணுதலும், பரிசீலித்தலும். அதற்கு பின்னும் சூழல் சாதகமாயிருந்தால் சில நல்லிணக்க முயற்சிகளை அவ்யப்போதாவது முன் வைப்பதுவும். " - ரோசா வசந்த் அவர்களின் வலைப்பதிவான‌ ' ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்...! ' என்பதிலிருந்து ************** ஜ்யோவ்ராம் சுந்தரின் பதிவு மற்றும் பைத்தியகாரனின் ivansivan ட்வீட்கள் வாயிலாக‌ நடந்த அசம்பாவிதங்கள் பற்றிய‌ புகை படர்ந்ததோர் அறிமுகம் கிடைக்கிறது. யார் பக்கம் நியாயம் என்கிற கத்தி மேல் நடக்கிற சங்கதிக்கே நான் வரவில்லை. அதில் எனக்கு ஆர்வமுமில்லை. ஆனாலும் சர்ச்சையில் குளிர்காய்வது என்பதைத் தாண்டி இது சம்பந்தமாக எனக்கு சில பொதுவான பகிரல்கள் இருக்கின்றன. அதற்கு மேல் அதிகப்பிரசங்கித்த‌னம் ஏதுமில்லை. என்ன காரணம் என்றாலும் அடித்தது தவறு தான். அதில் எவ்வித சந்தேகமோ மாற்றுக்கருத்தோ நிச்சயம் இருக்க முடியாது. ஆனாலும் என் சொந்த அனுபவம் மற்றும் மனப்போக்கின் அடிப்படையில் அப்படி அடித்ததைப் என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது . என் வாழ்க்கையில் மிக நெருங்

படித்தது / பிடித்தது - 73

காற்று அந்தரங்கத்தை அறிய அறைக்குள் நுழைந்த காற்று மின்விசிறியால் துண்டுதுண்டாகி என்மேல் விழுகிறது. - Karthikeyan G நன்றி : வேடிக்கை

The Nobel Peace Prize 2009

Barack Obama , USA, b. 1961 44th President of the United States of America " for his extraordinary efforts to strengthen international diplomacy and cooperation between peoples " ஒருவேளை, அவரது தன்னிகரில்லா மெளன‌த்தின் மூலம் தமிழீழ மண்ணில் நிரந்தர‌ அமைதி ஏற்பட வழிவகுத்ததற்காய் தரப்பட்டிருக்கலாம். மயான அமைதி . ************** பிற்சேர்க்கை-1 : (09 அக்டோபர் 2009, மாலை 04:15 மணிக்கு எழுதப்படுகிறது) சில விநாடிகளுக்கு முன்பு வந்த ஒரு ட்வீட்: Barack Obama for peace prize? WTF?! ************** பிற்சேர்க்கை-2 : (09 அக்டோபர் 2009, மாலை 05:05 மணிக்கு எழுதப்படுகிறது) இதைப்பற்றி படிக்கக் கிடைத்த ஒரு நல்ல பதிவு: ஒபாமாவுக்கு நோபெல் அமைதிப் பரிசு - வெங்கட் ( உள்ளும் புறமும் )

'கோலம்' இணையதளம்

எழுத்தாளர் ஞாநி அவர்களின் ' கோலம் ' இயக்கம் தொடர்பாக சில வாரங்கள் முன்பு, கோலம் - சில கேள்விகள் என்ற பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம். அப்பதிவில் MSK என்பவர் இன்று இட்டிருந்த பின்னூட்டத்தின் மூலம் 'கோலம்' இயக்கத்துக்கென தனி இணையதளம் சமீபத்தில் தொடங்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். அதன் முகவரி - http://www.kolamcinema.org/ எனது கணிசமான கேள்விகளுக்கு அதில் பதிலிருக்கிறது. மற்றவை?

படித்தது / பிடித்தது - 72

வாழும் கலை கடலின் மடியில் கட்டிவைத்திருந்த காற்று அவிழ்ந்து சுழன்றதில் பூமி நின்று சூரியன் சுற்றத் தொடங்குகிறது அந்த ராத்திரியின் ரகசியங்கள் பீறிட்டுத் தெளித்த‌ பயத்தில் நனைந்துகொன்டிருக்கிறது அவ்விஞ்ஞானியின் டைரி எல்லாம் க‌லைந்துகிட‌க்கும் அந்த‌ இட‌ம்தான் தான் ச‌னித்த‌ இட‌ம் என்கிறான் ஹிட்ல‌ர் சூட்சுமம் புரியாத வெளியொன்றில் பசியால் தவித்த கர்ப்பிணி பிள்ளையைப் பிரசவித்துத் தின்னத் துணிகிறாள். - செல்வநாயகி நன்றி : நிறங்கள்

படித்தது / பிடித்தது - 71

முக நக... கண்கள் வழி கரு நாகங்கள் நெளிந்து விழுந்தன நாசித்துவாரங்களில் இரு பூரான்கள் உள்வெளியாடின இடக்கையின் ஆட்காட்டிவிரலில் அரணையும் வலக்கையின் விரலிடுக்குகளில் தேள்கள் நான்கும் சிரம் தூக்கி மெல்லப் புறம் பார்த்தன வெண் பாதங்களில் விஷ வண்டுகள் சுருண்டுருண்டன உதடுகளுக்கிடையில் மட்டும் மென் இதழ்கள் முட்களே இன்றி... - நர்சிம் நன்றி : யாவரும் கேளிர்

மூன்றாம் தமிழன்

Image
சந்திரசேகர வெங்கட்ராமன் மற்றும் சுப்ரமண்யன் சந்திரசேகருக்கு பின் நோபல் பரிசு வாங்கும் மூன்றாவது தமிழன் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் . இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரசாயனத்துக்கான நோபல் பரிசை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விஞ்ஞானிகள் இருவருடன் இணைந்து பெறுகிறார் இவர். உடல் செல்களிலுள்ள‌ ரிபோஸோம்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆராய்ச்சி செய்ததற்காக (" for studies of the structure and function of the ribosome ") இவ்விருது என நோபல் கமிட்டியின் அதிகாரப்பூர்வ‌ செய்தி வெளியீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சந்தோஷம், வாழ்த்துக்கள்! இவர் ஒரு அமெரிக்க குடிமகன். நமக்கெல்லாம் வேறு வழியில்லை .

கோடுகளின் ரகசியம்

Image
சரியாய் ஐம்பத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நார்மன் உட்லேண்ட், பெர்னார்ட் சில்வர், ஜோர்டின் ஜோஹன்சன் ஆகியோருக்கு அவர்கள் கண்டுபிடித்த பார் கோட் (Bar Code) என்ற அற்புதத்துக்கு அமெரிக்க பேடண்ட் வழங்கப்பட்டது. அதன் நினைவாக இன்று கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் பார்கோட் மாடலில் doodle வைத்திருக்கிறார்கள் (மேலேயிருப்பது). பார்கோட் ரீடரில் படித்துப் பார்த்தால் "Google" என்று வருகிறது (Code 128 முறையில் text வடிவ‌த்தில் பார்கோட் செய்திருக்கிறார்கள்). கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது அதே போல் நமது தளத்துக்கான பார்கோட். கூகுள் பயன்படுத்தியிருக்கும் அதே முறை; அதே வடிவம். அதில் ஒளிந்திருக்கும் text என்னவென்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். It's simple!

படித்தது / பிடித்தது - 70

பெயரெச்சமானவள்… நதியில் உன் பெயர் எழுதி முடிக்கும்முன்பே நகர்ந்துவிட்டிருந்தது நதியும் பெயரும் விரல்களில் உன் பெயரெச்சம்… - தமிழ்ப்பறவை நன்றி : வானம் வசப்படும்

இருளில் ஒளிரும் கவிதை

Image
i was a helpless girl against the brutal world of bottom-patting-and-breast-pinching. -Meena Kandasamy, Apologies for living on. . . ( Touch ) ********************* தமிழகத்தின் இளைய தலைமுறை தலித்திய‌, பெண்ணிய இலக்கியப் படைப்பாளுமைகளுள் மிக முக்கியமானவராகத் தென்படுகிறார் மீனா கந்தசாமி . கிண்டி பொறியியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையில் பி.ஹெச்.டி. செய்து கொண்டே கற்பிக்கும் இணை ஆராய்ச்சியாளயாக பணிபுரியும் மீனா எழுதுவது ஆங்கிலத்தில் தான் என்றாலும் அவற்றில் தமிழ்ச்சூழலின் ஆதாரக்கூறுகள் ஊடு பாவாய் இழையோடி நிற்கின்றன. கவிதைகள், மொழிபெயர்ப்புகள், புனைவிலக்கியம், வாழ்க்கை வரலாறு என்று பரந்த தளங்களில் பரவியிருக்கும் இவர் எழுத்துக்கள் தலித் மற்றும் பெண்களின் பிர‌ச்சனைகளை மையமாகக் கொண்டு மெல்லிய அங்கதத்துடன் அவை முன்வைக்கும் அரசியலை நோக்கி கேள்வி யெழுப்புபவை. மீனாவின் படைப்புகளுள் முக்கியமானதாக நான் கருதுவது அவரது முதல் புத்தகமான Touch என்கிற கவிதைத் தொகுப்பைத்தான். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் உரைகள் மற்றும் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அதே போல்

கமலுக்கு மூன்று கேள்விகள்

கலைஞர் தொலைக்காட்சியில் இன்றிரவு ஒன்பதரை மணி முதல் ஒளிபரப்பான கமல்ஹாசனுடனான நேரலைத் தொலைபேசி உரையாடலில் அவருடன் பேச கொடுக்கப்பட்ட 044-224307999 என்கிற எண்ணை கடந்த ஒன்றரை மணி நேரமாக நூறு தடவைக்கு மேல் அடித்துப் பார்த்து தோல்வியுற்று ஓய்ந்த கையுடன் இதை எழுதுகிறேன். பேசியிருந்தால் இத்தனை கோர்வையாக வந்திருக்காது எனினும் நான் பேச நினைத்ததன் சாரம் இது தான்: ############################# வணக்கம், நான் பெங்களூரிலிருந்து சரவணகார்த்திகேயன் பேசுகிறேன். கமல்ஹாசன், செளக்கியமாக இருக்கிறீர்களா? நான் உங்கள் ரசிகன் அல்ல; வெறியன். அதாவது fan அல்ல fanatic. முதலில் உங்களின் உன்னைப்போல் ஒருவன் படத்தின் வியாபார வெற்றிக்கு என் வாழ்த்துகள். வலைதளத்தில் பதிவராய் எழுதிக் கொண்டிருக்கும் முளை விடும் ஓர் எழுத்தாளன் மற்றும் தீவிர வாசிப்பாளன் என்கிற முறையில், என்னிடம் உங்களுக்கு கேட்க மூன்று கேள்விகள் இருக்கின்றன: உங்களுக்குள் இருக்கும் கவிஞன் அவ்வப்போது திரைப்பட பாடலாகவும், வார இதழ் கவிதையாகவும் வெளியே தலைகாட்டுகிறான். சில வருடங்கள் முன்பு கூட உங்கள் கவிதைகள் தொகுப்பாக வெளி வருகிறது என செய்திகள் வந்தன. எப்போது அவ

அது அப்படித்தான்

ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான் படம் டிவிடியில் பார்க்க வாய்த்தது. மிகச் சிறந்த படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் குறிப்பிடத்தகுந்த படமாகத் தோன்றுகிறது. வசனகர்த்தாக்களில் ஒருவர் எழுத்தாளர் வண்ணநிலவன். அவள் அப்படித்தான் படத்தில் குறிப்பிடத்தகுந்த மூன்று விஷயங்கள் : 1. கமல் எடுக்கும் குறும்படம் சம்பந்தப்பட்ட பேட்டிகள் 2.ரஜினி கதாபாத்திரம் பேசும் வசன‌ங்கள் 3." உறவுகள் தொடர்கதை " பாடல் (இசை: இளையராஜா). படத்தின் driving force ஸ்ரீப்ரியாவின் நடிப்பு தான். ட்விட்டரில் ட்வீட் செய்வது போல் சுருக்கமான ஆனால் அபாரமான நடிப்பு. இப்படத்தை இப்போது எடுத்தால் என் சாய்ஸ் இந்தியில் ப்ரியங்கா சோப்ரா; தமிழில் அசின் தோட்டும்க‌ல்.

ராசி பலன்கள்

Image
ஆஷுதோஷ் கோவாரிகரின் மூன்றரை மணி நேரப் படமான What's Your Rashee? நேற்று பார்த்தேன். அமெரிக்க என்.ஆர்.ஐ. இளைஞன் தன் குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக குறுகிய காலத்துக்குள் (இருபது நாட்கள்!) திருமணம் செய்யத் தீர்மானித்து, பன்னிரண்டு ராசிகளிலிருந்தும் ஒவ்வொரு பெண்ணைப் பார்த்து இறுதியில் யாரைத் தேர்ந்தெடுக்கிறான் என்பது கதை. திரைக்கதை அவ்வளவு திறமையானதென்று சொல்ல இயலாது. Madhu Rye என்பவர் எழுதிய Kimball Ravenswood என்ற குஜ‌ராத்தி நாவலின் தழுவல் என்று டைட்டில் காட்டிலேயே போடு விடுகிறார்கள். 1989ல் இதே கதையுடன் தூர்தர்ஷனில் ஒரு சீரியல் வந்தது என்று விக்கிபீடியா சொல்கிறது. வசன‌ங்கள் இந்தி சரியாய்ப் புரியாத எனக்கே ஆங்காங்கே புன்னகை வரவழைத்தது. அஞ்சலி (மேஷம்) அப்பாவித்தன‌ம். சஞ்சனா (கும்பம்) சந்தர்ப்பவாதம். காஜல் (மிதுனம்) நவநாகரீகம். ஹன்ஸா (கடகம்) நேர்மை. சந்திரிகா (மீனம்) பழமைவாதம். ரஜ்னி (துலாம்) வியாபாரம். மல்லிகா (சிம்மம்) முன்கோபம். நந்தினி (விருச்சிகம்) தன்னம்பிக்கை. பூஜா (கன்னி) சேவை. விஷாகா (ரிஷபம்) முதிர்ச்சியின்மை. பாவ்னா (தனுசு) மூட நம்பிக்கை. ஜங்கனா (மகரம்) குழந்தைத்தனம். இ