மோகினியாட்டம் [சிறுகதை]
“பொம்பளைன்னா நாணிக் கோணனும். போத்திக்கிட்டு நிக்கனும். பொத்திக்கிட்டு இருக்கனும். அதானே? யூ மேல்ஷாவனிஸ்ட் பிக்!” ஃபேஸ்புக் மெஸெஞ்சரில் அனற்பொறி பறக்காத குறையாகக் கோபப்பட்டாள் சுஜா. “திட்டு எதுக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு வாங்கினா ஆறுதலா இருக்கும்!” ரமணியின் வாக்கியத்தில் மிதந்த கேலி அவளை மேலும் ரௌத்திரமாக்கியது. “உலகமயமாக்கலில் காணாமல் போனவர்கள் வெட்கப்படும் பெண்டிரும் வேதனைப்படும் ஆண்களும். - இது என்னடா ஸ்டேட்டஸ்?” “உண்மைதானே!” “கையில் பால்சொம்போட தலை குனிஞ்சுக்கிட்டே பெண்கள் ஃபேஸ்புக் வரனுமோ!” “ஏய், அந்த ஸ்டேட்டஸில் ஆம்பிளைகளையும்தானே கேலி பண்ணி இருக்கேன்!” “பொய். ஆம்பிளை எப்போ வேதனைப்படுவான்? பொம்பளை ஏமாத்தினா. ஆனா இப்ப இருக்கறவனுக அதைக் கடந்துடறாங்கன்னு பாஸிடிவ்வாச் சொல்றே.” “பொம்பளைக இப்பலாம் அப்படி ஏமாத்தறதில்லன்னும் எடுத்துக்கலாம்ல?” “ஒரு தறுதலை எப்படி யோசிப்பான்னு தெரியாதா!” “:-)))” “என்ன இளிப்பு?” “நீ ஆம்பிளையாப் பொறந்திருக்கனும்னு நினைச்சேன்.” “பொறந்திருக்கலாம்தான். நீ பொம்பளையாப் பொறந்திருந்தா!” “என்ன மேடம் சட்டுனு ரொமான்டிக் ஆயிட்டீங்க!” “ஆனா ப