CSK - சில குறிப்புகள்


சி.சரவணகார்த்திகேயன் கோவை சிங்காநல்லூரில் 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் நாள் பிறந்தார். ஈரோட்டில் பள்ளிப் படிப்பை மேற்கொண்ட இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் (கிண்டி பொறியியல் கல்லூரி) கணிப்பொறி இயல் படிப்பை முடித்தார். தற்போது பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக‌ப் பணியாற்றுகிறார். தந்தை சின்னதுரை. தாயார் தெய்வாத்தாள். காதல் மணம் - மனைவி பார்வதி யமுனா. குழந்தைகள் ஞானி & போதி.

விருதுகள்:
 1. சுஜாதா இணைய விருது (உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை) - 2017
 2. தமிழக அரசின் சிறந்த நூல் விருது (தமிழ் வளர்ச்சித்துறை) - 2009
 3. குங்குமம் முத்திரைக்கவிதை பரிசு (கவிஞர் வைரமுத்து) - 2007 
 4. ‘ஞயம் பட வரை’ கட்டுரைப் போட்டி முதல் பரிசு (பிரதிலிபி - அகம்) - 2016
முனைவர் ஆய்வு:

சுகன்யா தேவி என்பவர் கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் 'சமகாலக் கவிதைகளில் சமூகக் கருத்துக்கள்' என்ற தலைப்பில் செய்த தமிழ் முனைவர் பட்ட ஆய்வில் எடுத்துக் கொண்ட நூல்களில் இவரது பரத்தை கூற்றும் ஒன்று.
  புத்த‌கங்கள்:
  1. ஆப்பிளுக்கு முன் (உயிர்மை பதிப்பகம்) - 2017 [நாவல்]
  2. இறுதி இரவு (உயிர்மை பதிப்பகம்) - 2016 [சிறுகதைத் தொகுப்பு]
  3. ஆகாயம் கனவு அப்துல் கலாம் (சூரியன் பதிப்பகம்) - 2016 [குங்குமம் இதழ் தொடர்]
  4. வெட்கம் விட்டுப் பேசலாம் (சிக்ஸ்த் சென்ஸ்) - 2014 [குங்குமம் இதழ் 'ச்சீய் பக்கங்கள்' தொடர்]
  5. குஜராத் 2002 கலவரம் (கிழக்கு பதிப்பகம்) - 2014 [அரசியல் / வரலாறு]
  6. கிட்டதட்ட கடவுள் (அம்ருதா பதிப்பகம்) - 2013 [அம்ருதா இதழ் நொபேல் தொடர் + கட்டுரைகள்]
  7. தேவதை புராணம் (கற்பகம் புத்தகாலயம்) - 2012 [தமிழ் பேப்பர் இணைய‌ இதழ் தொடர்]
  8. பரத்தை கூற்று (அகநாழிகை பதிப்பகம்) - 2010 [கவிதை]
  9. சந்திரயான் (கிழக்கு பதிப்பகம்) - 2009 [அறிவியல்]
  மின்னூல்கள்:
  1. வானவில் (தமிழ் மின்பதிப்பகம்) -2018 [குங்குமம் 'ச்சீய் பக்கங்கள்' தொடர் / LGBT பற்றிய‌ பகுதிகள்]
  2. பிரியத்தின் துன்பியல் (தமிழ் மின்பதிப்பகம்) - 2018 [தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கிய‌ விமர்சனங்களின் தொகுப்பு]
  3. கமல் ஹாசனின் அரசியல் (தமிழ் மின்பதிப்பகம்) - 2017 [தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு]
  4. ஐ லவ் யூ மிஷ்கின் (தமிழ் மின்பதிப்பகம்) - 2015 [தேர்ந்தெடுக்கப்பட்ட சினிமா விமர்சனங்களின் தொகுப்பு]
  5. ச்சீய்... (தமிழ் மின்பதிப்பகம்) - 2015 [குங்குமம் 'ச்சீய் பக்கங்கள்' தொடர் / நூலாக்கம் பெறாத பகுதிகள்]
  மின்னிதழ்:
  1. தமிழ் (காலாண்டிதழ்)
    தொடர்க‌ள்:
    1. காதல் அணுக்கள் (தமிழ்பேப்பர்) - 2014 [கவிதை] 
      புனைவு:
      1.  அணங்கு
      2.  பெட்டை
      3. அழியாக்கோலம் (குங்குமம்)
      4.  மோகினியாட்ட‌ம் (காமதேனு)
      5.  காமத் தாழி
      6.  நான்காம் தோட்டா (ஆனந்த விகடன்)
      7. நீதிக்கதை
      8. நதியின் பிழை
      9. கருப்பு மாளிகை
      10. வெண்குடை
      11. பார்பி
      12. ஒரே ரத்தம்
      13. இறுதி இரவு
      14. அகல்யா - 2
      15. மதுமிதா - சில குறிப்புகள் (தமிழ்பேப்பர்)
      16. மயிரு (குமுதம்)
      17. மண்மகள்
      18. E=mc2 (தமிழ்பேப்பர்)
      19. சகா குறுங்கதைகள்
      கவிதை:
      1. ஒருத்தி நினைக்கையிலே (குங்குமம்)
      2. முதல் நரை (ஆனந்த விகடன்)
      3. இன்ன பிற‌
      13 வயதில் எழுத ஆரம்பித்து 2007ல் எழுத்துலகில் பிரவேசித்த‌ இவர் இதுவரை 6 புத்தகங்கள் எழுதியுள்ளார். மேலும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு என‌ தன் பங்களிப்பைச்‌ செய்திருக்கிறார்.

      2007ல் குங்குமம் வார இதழ் நடத்திய வாசகர் கவிதைத் திருவிழாவில் இவரது ‘ஒருத்தி நினைக்கையிலே…’ என்ற கவிதை வைரமுத்துவால் முத்திரைக்கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தியாவின் முதல் நிலவாராய்ச்சித் திட்டம் பற்றி‌ முழுமையான விஞ்ஞான, வரலாற்றுத் தகவல்களுடன் இவர் எழுதிய ‌‘சந்திரயான்’ நூலினை கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட‌து‌. இப்புத்தகம் தொழில்நுட்பப் பிரிவில் 2009ம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த நூல் விருதினைப் பெற்றது.

      வேசிகளின் குரலில் அமைந்த‌ 150 சிறுகவிதைகளின் தொகுப்பான ‘பரத்தை கூற்று’ என்ற‌ நூல் அகநாழிகை பதிப்பகம் மூலம் 2010ல் வெளியானது. எழுத்தாளர் சாரு நிவேதிதா இதை வெளியிட்டார். ஏழு பெண்பாற் பருவங்களிலும் ஒரு பெண் தன் காதலனைக் குறித்துப் பாடுவதாய் எழுதப்பட்ட ‘காதல் புராணம்’ (150 சிறுகவிதைகள்) தமிழ்பேப்பர்.நெட்டில் எழுத்தாளர் பா.ராகவன் தொடராக‌ வெளியிட்டார். பின் ‘தேவதை புராணம்’ என்ற பெயரில் நூலாக வெளியானது.

      அம்ருதா இதழில் 2011 நொபேல் விருதுகள் பற்றி விரிவான தொடர் கட்டுரைகள் எழுதினார். அவையும் இவரது பிற கட்டுரைகளும் தொகுப்பான ‘கிட்டத்தட்ட கடவுள்’ அம்ருதா பதிப்பகம் வழியாக வெளியானது. குங்குமம் வார இதழில் பொதுவில் பேசத்தயங்கும் விஷயங்களின் வரலாற்றை ‘ச்சீய் பக்கங்கள்’ என்ற தொடராக எழுதினார். தற்போது அது சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் மூலம் ‘வெட்கம் விட்டுப் பேசலாம்’ என்ற தலைப்பில் நூலாக வெளியாகி இருக்கிறது.

      2002ல் குஜராத்தில் நடந்த கலவரங்கள் குறித்த உண்மைகள் குறித்து ஆதாரப்பூர்வமாக இவர் தற்போது ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். 2014 சென்னை புத்தகக் காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் அதிகம் விற்பனையான முதல் 10 நூல்களுள் இது இடம்பெற்றது. 2014 மக்களவைத் தேர்தலை ஒட்டி இந்துத்துவ அரசியல் அதிகாரத்தில் அமர்வதைத் தடுக்கும் பொருட்டு இவர் தமிழ் பேப்பரில் தொடர் கட்டுரைகள் எழுதினார். ‘காதல் அணுக்கள்’ என்ற பெயரில் திருக்குறள் காமத்துப்பால் குறட்பாக்களுக்கு நவீன குறுங்கவிதை வடிவில் தமிழ் பேப்பர் இணையதளத்தில் வாரத் தொடராக‌ உரை எழுதினார்.

      சுஜாதாவும் அப்துல் கலாமும் இணைந்து எழுதத் திட்டமிட்டிருந்த இந்திய ராக்கெட் இயலின் சரித்திரத்தை ‘ஆகாயம் கனவு அப்துல் கலாம்’ என்ற தலைப்பில் குங்குமம் இதழில் தொடராக எழுதினார். பின் சூரியன் பதிப்பகம் மூலம் நூல் வடிவம் பெற்றது. அக்பர், திப்பு சுல்தான் தொடங்கி அப்துல் கலாம் காலம் வரைக்கும் ஆதியோடு அந்தமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறைகளில் ராக்கெட் தொழில்நுட்பம் எப்படி வளர்ச்சி பெற்றது என்பதை விரிவாக விவரிக்கும் இந்நூல் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்டோரின் பரவலான பாராட்டுக்களைப் பெற்றது.

      இவரது சினிமா தொடர்பான கட்டுரைகள் 'ஐ லவ் யூ மிஷ்கின்!' மின்னூலாக வெளியானது (2015). சமீபத்தில் இவரெழுதிய‌ சிறுகதைகள் உயிர்மை பதிப்பகம் மூலம் தொகுப்பாக வெளியானது ('இறுதி இரவு' - 2016).

      குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், அம்ருதா, ஆழம், அகநாழிகை, மெல்லினம் (ஆஸ்திரேலியா), விளம்பரம் (கனடா), தமிழ்பேப்பர்.நெட், அதிகாலை.காம் ஆகிய மின் / அச்சு ஊடகங்களில் இவரது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. இவரது சில அச்சுப் புத்தகங்கள் DailyHunt மொபைல் செயலியின் வழி மின்னூல்களாகவும் வாசிக்கக் கிடைக்கின்றன.

      தற்போது 'தமிழ்' என்ற இலவச மின் காலாண்டிதழைத் துவங்கி நடத்தி வருகிறார். http://tamizmagazine.blogspot.in/. பிரதிலிபி - அகம் இணைந்து நடத்திய ‘ஞயம் பட வரை’ என்ற‌ கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் (2016).

      கடந்த எட்டு வருடங்களில் www.writercsk.com என்ற த‌னது வலைப்பூவில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் சுமார் 1000 பதிவுகள் எழுதியிருக்கிறார். உயிர்மை வழங்கும் சுஜாதா விருதுகள் - 2010ல் இணையப்பிரிவில் இந்த‌ வலைப்பூ நான்காம் இடம் பிடித்தது. 2009 முதல் ட்விட்டரிலும் (@writercsk) இயங்கி வருகிறார். கடந்த ஈராண்டாக ஃபேஸ்புக்கில் குறும்பதிவுகள் எழுதுகிறார்: https://www.facebook.com/saravanakarthikeyanc. மின்னஞ்சல் : c.saravanakarthikeyan@gmail.com

      சினிமா:
      1. PS அர்ஜுன் இயக்கும் பெயரிடப்படாத தமிழ் திரைப்படத்தின் திரைக்கதை - வசனம் (2015)
      2. PS அர்ஜுன் இயக்கும் தமிழ் / மலையாளப் படத்தின் (JANANAM) திரைக்கதை, வசனம், பாடல் (2014)
      3. APIGEE நிறுவன‌த்துக்காக LIFE OF API என்ற ஆங்கிலக் குறும்படம் : எழுத்து - இயக்கம் (2013)
      4. ராஜ்மோகன் என்பவர் இயக்க முயற்சித்த போர்க்களம் என்ற படத்துக்குப் பாடல்கள் (2006)
      *