Posts

Showing posts from February, 2020

‪அனு சித்தாரம்

Image
மலையாளப் பெண்கள் மீது எப்போதும் எனக்கு தனித்த பிரேமையும் மயக்கமும் உண்டு. இதைப் பற்றி சில ஆண்டுகள் முன் விரிவாய்ப் பதிவு செய்திருக்கிறேன்: http://www.writercsk.com/2017/12/blog-post.html 'யட்சி' என்ற சிறுகதையில் ஜெயமோகன் இப்படி எழுதி இருப்பார்: " எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக்கணங்களையே நீட்டிக் காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி. " இந்த அளவுகோலின்படி பார்த்தால் மலையாளத் திரைப்பட‌ நடிகை அனு சித்தாரா ஓர் யட்சி; ஒரே யட்சி. அதிரூபசுந்தரி, பெரும்பேரழகி என்பதெல்லாம் தாண்டி இன்றைய தேதியில் இந்த நீலப்பந்தில் வாழும் பெண்டிருள் மிக அழகு யாரெனக் கேட்டால் இந்த வயநாட்டுக்காரியையே கைகாட்ட முடிகிறது. அப்படியானவருடன் தினமொரு இனிப்புத் தின்பண்டத்தை ஒப்பீடு செய்த