ஒரு புளித்த மாவின் கதை
சமூக வலைதளங்களில் ஜூன் 15 அன்று இப்படித் தான் ப்ரேக்கிங் ந்யூஸ் வந்தபடி இருந்தன. அதையொட்டி ஜெயமோகன் மீதான வசைகளும் பெருகியபடி இருந்தன. அதிகாலை 6: “ ஜெயமோகன் மாவைக் கடையில் திருப்பிக் கொடுத்தார்.” காலை 9: “ஜெயமோகன் மாவைக் கடையில் வீசி எறிந்தார். ” முற்பகல் 11: “ ஜெயமோகன் மாவைக் கடைக்காரப் பெண்ணின் மீது விட்டெறிந்தார். ” நண்பகல் 12: “ ஜெயமோகன் மாவைக் கடைக்காரப் பெண்ணின் முகத்தில் எறிந்தார். ” பிற்பகல் 2: “ ஜெயமோகன் கடைக்காரப் பெண்ணை மாவாலேயே நையப் புடைத்தார். ” மாலை 4: “ ஜெயமோகன் கடைக்காரப் பெண்ணை மாவாலேயே அடித்துக் கொன்றார். ” இரவு 7: “ ஜெயமோகன் மாவாலேயே நாகர்கோயிலை எரித்தார். ” அதாவது புளித்த மாவை கடையில் திருப்பிக் கொடுத்தது என்ற செயல் ஒருவரைத் திட்டப் போதுமானதாக இல்லை என்றதும் குற்றத்தைப்பெரிதாக்கத் தம் கற்பனையில் உதித்ததை எல்லாம் போட்டு செய்தியைத் திரித்துக் கொண்டிருந்தனர். ஜெயமோகன் மீது சமூக வலைதளவாசிகள் இத்தனை பிரியங்கொண்டிருப்பது பேரதிர்ச்சி தான்! ஜெயமோகன் இது பற்றி எழுதியது இது: “ அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புள