இது ஒரு தொடர் பத்தியின் முதல் அத்தியாயம். கடந்த ஜனவரி 2011ல் ஓர் இலக்கிய சஞ்சிகைக்காக எழுதப்பட்டது. சில காரணங்களால் அதில் வெளியாகவில்லை. அதனால் இங்கே (இதில் 'தேகம்' நாவல் விமர்சனத்தை மட்டும் ஏற்கனவே தனிப்பதிவாக இட்டிருக்கிறேன்). இப்போது படித்துப் பார்க்கும் போது இதன் கலவை முக்கியமானதாகப் படுகிறது . * MAD, adj. Affected with a high degree of intellectual independence – Ambrose Bierce * பத்தி எழுத்து விஷேசமானது. இங்கு ‘பத்தி’ எனக் குறிப்பிடுவது சூடம், சாம்பிராணி வரிசையில் வரும் சைக்கிள் பிராண்ட் சங்கதியை அல்ல; எந்தவொரு விஷயத்தைக் குறித்தும் பத்தி பத்தியாக நீளுவதாக அல்லாமல் சுருக்கமாக – yet – சுவாரஸ்யமாக எழுதப்படும் Column Writing எனப்படும் பத்தி எழுத்தை. இன்றைய தேதியில் தமிழில் மிகப்பரவலாக எழுதப்படும் / வாசிக்கப்படும் வலைப்பதிவுகளுக்கு ஒரு மாதிரியான முன்னார்கள் என இவ்வகைப் பத்தி எழுத்துக்களைச் சொல்லலாம் – பித்ருக்கள் alive. பத்தி எழுத்து உலகம் முழுக்க எல்லா பத்திரிக்கைகளிலுமே பிரபலமான சமாச்சாரம். குறிப்பிட்ட பத்தியை படிப்பதற்கென்றே ஒரு தினசரியையோ, வார இதழையோ வாங்குபவர