Posts

Showing posts from March, 2017

அசோகமித்திரன் பிராமண வெறியரா?

Image
அசோகமித்திரன் தமிழின் மிகச் சிறந்த நான்கைந்து எழுத்தாளர்களுள் ஒருவர் என்பதில் ஏதும் சந்தேகமில்லை. தமிழ் மின்னிதழின் 3ம் இதழை அவருக்குத் தான் சமர்ப்பித்திருந்தேன். (ஆனால் என் தனிப்பட்ட ரசனையில் சுந்தர ராமசாமியை அவருக்கு மேலாக வைத்திருக்கிறேன்.) அதனால் அவர் பிராமணர் என்பதாலேயே கொண்டாடப்படுகிறார் என்பது அயோக்கியத்தனமான வாதம். ஆனால் அதே சமயம் பிராமணர் என்பதாலேயே அவரைத் தூக்கிப் பிடிக்கும் சாதிய வாசகர்களும் உண்டு என்பதை நாம் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். எப்படி சாதியை வைத்து அவரைத் தூற்றுபவர்கள் அவரை இழிவு செய்கிறார்களோ அதை விட ஒரு படி அதிகமாகவே இவர்கள் அவரைக் கேவலப்படுத்துகிறார்கள் என்று தான் சொல்வேன். போயும் போயும் சாதியா அவரது இலக்கிய ஸ்தானத்தை தாழ்ச்சி / உயர்ச்சி எனத் தீர்மானிப்பது! அடுத்த குற்றச்சாட்டு அவர் பிராமணர்களைப் பற்றியே எழுதினார் என்ற சித்தரிப்பது. நான் அவரை முழுக்க வாசித்தவன் அல்லன். ஆனால் வாசித்த வரை அவர் அப்படி எழுதியிருப்பது போல் தோன்றவில்லை. அப்படியே இருந்தாலும் ஒருவர் தீவிர இலக்கியம் மேற்கொள்கையில் தன் அனுபவத்திலிருந்து எழுதும் வாய்ப்பு அதிகம் என்பதால் அவர் தன்னைச

விமர்சனம் அல்லது ஒரு புனைவின் கதை

Image
இதில்தான் ஆட்டுக்குக் காடு மீனுக்கு நீர் பறவைக்கு வானம் தராத உலகம் இதில்தான் வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. - பெருமாள்முருகன் ('கோழையின் பாடல்கள்' தொகுப்பிலிருந்து) ஆங்கிலத்தில் ஜார்ஜ் ஆர்வெல்லின் Animal Farm முதலான‌ பல உதாரணங்கள் உண்டு, ஆனால் நானறிந்த வரை நவீனத் தமிழிலக்கியத்தில் விலங்குகளே பாத்திரங்களாய் உலவும் ஒரு நாவலுக்கு முன்மாதிரி இல்லை. பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை தான் முதலாவது. ஒரு முக்கியமான வித்தியாசம் பொதுவாய் இந்த வகை நாவல்களில் விலங்குக் கதாபாத்திரங்களை நிஜ உலகின் மனிதர்கள், அமைப்புகள் அல்லது நிகழ்வுகளின் (குறிப்பாய் சர்வாதிகாரிகள், மக்களுக்கு எதிரான அரசுகள், இன ஒழிப்பு போன்ற வன்முறைகள்) உருவகமாக்கி காத்திரமான சமகால அரசியல் விமர்சனத்தை முன்வைப்பார்கள். இதை Allegory என்பார்கள். ஆனால் பூனாச்சி நாவல் அப்படி அல்ல. இது அசலாகவே ஓர் ஆட்டின் கதை தான். (ஆனால் இன்னொரு பக்கம் முழுக்க அப்படியான விமர்சனங்கள் ஏதுமே இல்லை என்றும் சொல்ல முடியாது.) 2015ல் தமிழ் மின்னிதழுக்கு அளித்த நேர்காணலில் யுவன் சந்திரசேகர் தமிழகத்தில் எழுத்தாளர்கள் படைப்புகளுக்காக பி