Posts

Showing posts from December, 2019

இரு பாடல்கள்

2014 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதியவரும் இளைஞருமான பிஎஸ் அர்ஜுன் இயக்க முயன்றிருந்த படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். (1) (Situation: தம் 6 வயது மகள் குறித்து தந்தையும் தாயும் பாடும் ஜனனத்தையும் மரணத்தையும் முன்வைத்த பாடல். 90களில் நடக்கும் கதை.) பல்லவி: (அப்பா) பன்னிரு பாட்டியல்* சொல்லும் இவள் பேதை என்னிரு கண்கள் சொல்லும் இவள் தேவதை தேநீர் கோப்பையின் இறுதித்துளி இனிப்பாய் ஒரு புன்னகையில் சிறுசுவர்க்கம் பரிசளிப்பாள். (அம்மா) வெண்துகில்* பொம்மைகள் இவளைக் கொஞ்சும் விண்மிதக்கும் பறவைகள் இவளைக் கெஞ்சும் முகில்கள் உடைந்து மழையாய் முகிழ்த்தலாய் முலைகள் இன்னும் சுரந்திடும் இவளுக்காய். அனுபல்லவி: (இருவரும்) ஜனனத்தின் ஸ்பரிசத்தை ஆன்மாவில் தூவி மரணத்தின் வாசனையை துரத்துவாள் தூர இவள் குழந்தை இவள் எஜமானி இவள் குரு இவள் அன்னை இவள் தெய்வம் இவள் ஊழ். சரணம் 1: (அம்மா) அதிகாலைத் துயிலெழுந்து குறும்புகள் செய்கிறாள் சேவலையும் சூரியனையும் குழப்பத்தில் மீட்டுகிறாள் பல் துலக்க, குளிப்பாட்ட தந்தையைத் தேடுகிறாள் சொல்லூட்டி சோறூட்ட அம்மையிடம் ஓடுகிறாள். (அப்பா) இடக்கான கேள்விகளில் ஆசிரிய

எழுத்தாளக் குற்றவாளிகள்

இது ஆண்டிறுதி. புத்தகக்காட்சி சீசன். ஏராளமான புத்தக அறிவிப்புகளைப் பார்க்க முடியும். எழுத்தாளர்களுக்கென ஏதேனும் கொண்டாட்ட காலம் இருக்குமானால் அது இது தான். சமூக வலைதளங்கள் கிளை பரப்பி விரிந்த கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு விதமான குற்றச்சாட்டுகள் அல்லது கேலிகளைத் தவறாமல் காண முடியும்: 1) எல்லோரும் எழுத்தாளர்கள் ஆகி விட்டார்கள் (கவுண்டமணியின் தொழிலதிபர் காமெடியைச் சேர்த்துக் கொண்டு). இம்முறை என்னைத் தவிர எல்லோரும் புத்தகம் கொண்டு வருகிறார்கள் போலிருக்கிறது. வாசகர்களை விட எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள், யார் தான் வாசிப்பார்கள்? 2) ஒருவரே ஒரு சமயத்தில் ஏன் இத்தனை ‍புத்தகங்கள் கொண்டு வருகிறார்? ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் ஏதும் சாமி குத்தம் ஆகி விடுமா? என் புரிதலில் இவ்விரண்டிற்கும் அறிவீனமோ அல்லது பொறாமையோ தான் மூலக்காரணம் எனப்படுகிறது. மற்றபடி, இலக்கியம் அல்லது எழுத்தாளன் மீதான அக்கறை என்பதெல்லாம் பூச்சு. அதை எந்த முறையும் ரசிக்க முடிந்ததில்லை. அதனால் இவை இரண்டுக்கும் என் தரப்பைச் சொல்கிறேன். (1) ஆம், இன்றைய யுகத்தில் அச்சுப் புத்தகம் போடுவது அவ்வளவு சி

சூரிய கிரஹணம் - FAQs

1) சூரிய கிரஹணம் என்றால் என்ன? பூமி நிலா சூரியன் மூன்றும் நேர்க்கோட்டில் வரும் போது சூரியனை நிலா மறைத்து விடுகிறது. அதனால் சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பூமியின் பக்கம் இருள் சூழ்கிறது. இது தான் சூரிய கிரஹணம். 2) சூரிய கிரஹணத்தின் போது என்ன செய்யக்கூடாது? சூரியனைப் பார்க்கக் கூடாது. கறுப்புக் கண்ணாடி அணிந்து கூடப் பார்க்கக்கூடாது; கேமெரா, ஸ்மார்ட்ஃபோன், பைனாகுலர், டெலஸ்கோப் வழியும் பார்க்கக்கக்கூடாது; நிலைக்கண்ணாடியின் பிரதிபலிப்பையும் பார்க்கக்கூடாது. 3) ஏன் அப்படி? சூரியனின் கதிர்கள் கண்களில் விழுந்தால் ரெட்டினா (விழித்திரை) பாதிக்கப்படும். தற்காலிக அல்லது நிரந்தரப் பார்வையிழப்பு ஏற்படலாம். 4) இக்கதிர்கள் கிரஹணத்தின் போது மட்டும் தான் வருகின்றனவா? இல்லை. ஒவ்வொரு கணமும் சூரியனின் ஃபோட்டோஸ்பியரிலிருந்து (ஒளி மண்டலம்) இக்கதிர்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. நம் மீது விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. 5) பிறகேன் கிரஹணத்தின் போது மட்டும் கண்ணுக்குப் பிரச்சனை? சாதாரண வேளைகளில் நம் கண்களால் சூரியனை நேரடியாய்ப் பார்க்க முடியாது. அதீத வெளிச்சம். அதனால் நம் ப்

பிராமணர் Vs பறையர்

Image
வரும் 2020 சென்னை புத்தகக் காட்சிக்கு வெளியாகவிருக்கும் பேராசிரியர் டி. தருமராஜ் அவர்களின் 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. அதன் மூன்றாம் பகுதியான 'பூர்வ பௌத்தனின் கல்லறை'யை (36 அத்தியாயங்கள் - சுமார் 100 பக்கங்கள்) வாசிக்க அனுப்பியிருந்தார். கவனமான வாசிப்பைக் கோரும் கனமான நூல். ஆனால் அவ்வடர்த்தி வாசகனைச் சோர்வுக்கு உள்ளாக்காத வண்ணம் சில சித்து வேலைகளை முயன்றிருக்கிறார். நான் வாசித்த பகுதி "அயோத்திதாசர் ஏன் மறக்கப்பட்டார்?" என்ற கேள்விக்கு ஆழமாக விடை தேட முயல்கிறது. (தொடர்புடைய ஞாபகம் மற்றும் மறதி பற்றிய அடிப்படைப் புரிதலை வாசகனுக்கு ஏற்படுத்த சுமார் 30 பக்கங்கள் பேசுகிறார். அதில் ஒரு வரி: "உங்களின் அதிகப்படியான ஞாபகமே என் மறதி.") தருமராஜ் தமிழின் முக்கியச் சமகாலச் சிந்தனையாளர்களுள் ஒருவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர். உயர்கல்விப் புலத்தில் இருந்தாலும் சிந்தனை தேயாதவர். சில ஆண்டுகள் முன் கோடையில் குளிரில் அவரது நான்கு நாள் பின்நவீனத்துவப் பயிற்சி வகுப்புகளில் கலந்து க