Posts

Showing posts with the label இலக்கியம்

ஜெயமோகன் எனும் ஞானபீடம்

Image
ஃபேஸ்புக் தீவிர விஷயங்களைப் பேச‌ உகந்த இடமில்லை. ஆனால் தீவிரங்களை எளிய போர்வையில் எழுதிப் பார்க்கலாம். அப்படிச் சில தினம் முன் நான் எழுதிய குறிப்பு இது: "தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்" என்ற பிரயோகம் சமகாலச் சூழலில் இரு விதமாகப் பயன்படுத்தப்படுகிறது: 1) ஜெயமோகனைக் குறிக்க 2) ஜெயமோகனைச் சீண்ட.” பகடியாகவோ புகழுரையாகவோ தெரிந்தாலும் கவனமான ப்ரக்ஞையுடன் எழுதியதே! என் கால் நூற்றாண்டு வாசிப்பின் சிற்றெல்லைக்குள் நின்றபடி பேசும் போது தமிழில் உருவான நவீன எழுத்தாளர்களுள் ஜெயமோகனே முதன்மையானவராக‌த் தெரிகிறார். என் போல் இங்கே பலர் உணர்ந்திருந்தாலும் இலக்கிய‌ முன்னோடிகளைக் குறைத்துப் பேசலாகாது என்ற தயக்கத்திலும் அவருக்கு வயதேறட்டும் என்றெண்ணியும் அமைதி காக்கலாம். நரையும் திரையுமே அங்கீகார அளவுகோல் என்பதுதானே நம் பண்பாடு! ஒட்டுமொத்த நவீனத் தமிழிலக்கியப் பரப்பிற்குமாக‌ இந்த இடத்தை ஜெயமோகனுக்கு அளிப்பதில் சிலருக்குத் தயக்கமிருந்தாலும் இன்று வாழ்கின்ற‌ தமிழ் எழுத்தாளர்களுள் அவரே முதன்மை ஸ்தானம் என்பதை எவரும் மானசீகமானவேனும் ஒப்புக் கொள்வர். (ஆனால் அதை வெளியே சொல்வதற்கு பழ‌ம்பகை, அரசியல் சார்...

விஷ்ணுபுரம் விழா - 2018: சில குறிப்புகள்

Image
1) விஷ்ணுபுரம் விழா - 2018 கடந்த வார இறுதி இரு தினங்கள் கோவை ஆர்எஸ் புரத்தின் ராஜஸ்தானி சங் அரங்கில் (நாயுடு ஹால் அருகே) நடந்தது. எனக்கு விருந்தினராக அழைப்பு இருந்தது. எழுத்தாளர் அமர்வு ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். சென்ற முறையே கலந்து கொண்டிருக்க வேண்டியது. 'ஆப்பிளுக்கு முன்' முறித்துப் போட்டு விட்டது. அதனால் இம்முறை எதுவென்றாலும் ஒத்திப் போட்டு விட்டு இதற்குப் போய் விடலாம் என்று தீர்மானித்திருந்தேன். 2) ஆண்டாண்டுகளாய் எதிர்பார்த்திருந்த ஆசானுடனான முதல் சந்திப்பு இப்படியா இருக்க வேண்டும்! வெண்பொங்கல் நக்கிய எச்சில் கையுடன் பந்தியிலிருந்து பாதி எழுந்து நின்று அவருக்கு அரை வணக்கம் சொன்னபடி! 3) விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்த சிலர் (ஃபேஸ்புக்கில்) புகைப்படத்தில் பார்த்ததை விட நேரில் நான் இளமையாகத் தெரிவதாகச் சொன்னார்கள். புகைக்கும் நெருப்புக்கும் வித்தியாசம் உண்டல்லவா! 4) விழாவின் முதல் அமர்வில் நானும் கலைச்செல்வி என்பவரும் வாசகர் கேள்விகளை எதிர்கொண்டோம். செல்வேந்திரன் ஒருங்கிணைத்து நடத்தினார். விஷ்ணுபுரம் எழுத்தாளர் அமர்வுகள் பற்றி ஜெயமோகன் எழுதியிருந்தது: "எழுத...

பொச்சு

Image
“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்கிருத வேர்ச்சொ...

நவஅரசியல் நடனம்

Image
சிறுஅசம்பாவிதத்தின் பலனாய் இன்று முழுக்க‌ கணிணி தொடாது வீட்டிலிருக்க நேர்ந்ததால் கனமற்ற‌தொரு வாசிப்புக்கு ஏதேனும் வேண்டுமென ஷான் எழுதிய‌ 'வெட்டாட்டம்' நாவலைத் தேர்ந்தெடுத்து ஓரமர்வில் வாசித்து முடித்த கையோடு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். மிகச் சுவாரஸ்யமான நாவல். நாவல் என்று சொல்வதை விட ஷான் இதை ஒரு சினிமாவாகவே எழுதி இருக்கிறார் என்பேன். பெரும்பாலும் காட்சிரூபம் மற்றும் வசன வடிவம் தான். (ஓபனிங்கில் - அதாவது முதல் அத்தியாயத்தில் - உயரக் கட்டிடத்தின் மாடி மதில் மேல் குடித்து விட்டு வருண் மேலேறி நிற்பது முதல் க்ளைமேக்ஸில் - அதாவது இறுதி அத்தியாயத்தில் - வருண் தலைமைச்செயலக வாசலில் அமர்ந்திருப்பது வரை ஏராள உதாரணங்கள்.) சினிமாவாக்கும் ப்ரக்ஞையுடன் நாவலாக எழுதியிருந்தார் என்றால் அதில் பெருவெற்றி கண்டிருக்கிறார். தெளிவாக இது ஒரு வெகுஜன நாவல் என்பதால் அந்த அடிப்படையிலேயே நாவல் பற்றிய என் மதிப்பீட்டை முன்வைக்க விரும்புகிறேன். பனாமாலீக்ஸ் சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்டிருக்கும் நவஅரசியல் நாவல் 'வெட்டாட்டம்'. தமிழில் ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை போன்றோர் ஏராள அரசியல் சார்ந்த த்...

வெற்றி - வெற்றி

Image
ஒரு சிறுகதையை முன்வைத்து மட்டும் ஒரு கட்டுரை எழுதுவேன் என்று எண்ணியதில்லை. ஆனால் இப்போது அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதையான வெற்றி தான் அது. பெண்களை மலினப்படுத்தும் கதை என்றும் பிற்போக்குத்தனமான கருத்தாக்கத்தை முன்வைக்கிறது என்றும் சமூக வலைதளைங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி பேசுபொருளாகும் நோக்கம் என்றும் சிலபல வசைகளை இடைப்பட்ட தினங்களில் கண்ட பின் சற்று முன் தான் கதையை வாசித்தேன். வெற்றிச் சிறுகதையா எனப் பார்க்கும் முன் வெற்றி சிறுகதையா? தலைப்பு சேர்க்காமல் துல்லியமாய் 7,458 சொற்கள் வருகின்றன. (சொற்களை எண்ணுவது என்பது உண்மையில் அவற்றுக்கிடையேயான இடைவெளியை எண்ணுவது தானே!) பொதுவாய் தமிழில் இன்று 1,000 முதல் 3,000 சொற்களில் இலக்கியச் சிறுகதைகள் எழுதப்படுகின்றன என்ற அவதானிப்பை வைத்துப் பார்க்கும் போது இது மிக மிக நீளம் தான். ஆனந்த விகடன் பத்தாண்டுகள் முன் சுஜாதாவின் நீளமான‌ சிறுகதைகளை 'சற்றே பெரிய சிறுகதை' என வெளியிட்டது. அவற்றை விடவும் இது மூன்று மடங்கு நீளம். ஆங்கிலத்தில் சிறுகதையின் நீளம் குறித்துப் பேசும் போது எட்கர் ஆலன் போவின் ...

சுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்

Image
டியர் ஜெயமோகன், நலம் தானே? சுஜாதா விருது பற்றிய - குறிப்பாய் இணைய விருது குறித்த‌ - உங்கள் கருத்து கண்டேன் ( http://www.jeyamohan.in/98187 ): " இணைய விருதுகள் குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை. ஷான்கருப்பசாமி, சரவணக்கார்த்திகேயன் ஆகியோர் இணையதளங்களை நடத்துகிறார்களா, தொடர்ந்து எழுதுகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. சமூக வலைத்தளப் பங்களிப்புக்காக இருக்கலாம். அது என் இடமல்ல என நினைக்கிறேன். " அது பற்றிய சில விளக்கங்கள் தர விழைகிறேன். 1) " சமூக வலைத்தளப் பங்களிப்புக்காக இருக்கலாம் "   எனக்கு அளிக்கப்பட்ட விருது எனது வலைதளத்துக்காகவே; சமூக வலைதளங்களில் எழுதியதற்காக அல்ல. நீங்கள் பகிர்ந்திருக்கும் விருது விழா அழைப்பிலிருக்கும் பட்டியலிலேயே வலைதளச் சுட்டி சுட்டப்பட்டிருப்பதைக் காணலாம். 2) " இணையதளங்களை நடத்துகிறார்களா " 2007ல் தொடங்கிய வலைதளத்தை இன்று வரை தொடர்ந்து நடத்துகிறேன். தொடர்ந்து எழுதவும் செய்கிறேன். 2010க்குப் பிறகு ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களின் வருகையினால் பொதுவாய் வலைதளங்கள், வலைப்பூக்கள் போன்றவற்றில் எழுதுவதில் உலக அ...

ராஜேஷ் குமாரின் இடம்

Image
எல்லோருக்கும் வாசிப்பு என்பது ராஜேஷ் குமார் வழியாகவே தொடங்கி பிறகு தான் சீரிய(ஸ்) இலக்கியத்தின் பக்கம் திரும்பி இருக்கும், ஆனால் அதை மறந்து விட்டு ஜெயமோகன் போன்ற மதவாதிகளுடன் ஒப்பிட்டு "சில அறிவுஜீவிகள்" அவரை இழிவுபடுத்திக் கொண்டிருப்பதாக என் பெயர் குறிப்பிடாமல் அன்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் சினந்தெழுதியுள்ளார். நான் ஒருபோதும் என் வாசிப்புப் பரிணாம வளர்ச்சியை மறைத்தவனில்லை. குமுதத்தில் வந்த காமிக்ஸ் பக்கங்களான ப்ளாண்டி, ஃப்ளாஷ் கார்டனில் தொடங்கி, நாளிதழ்களின் சிறுவர் இணைப்புகள் (சிறுவர் மலர், தங்க மலர், லேசாய் சிறுவர் மணி), சிறுவர் இதழ்கள் (பூந்தளிர், அம்புலி மாமா), காமிக்ஸ் இதழ்கள் (ராணி காமிக்ஸ் அப்புறம் சில‌ லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ்), நாளிதழ்களின் பிற‌ இணைப்புகள் (வார மலர், குடும்ப மலர், கொஞ்சம் தினமணிக் கதிர்), மாத நாவல்கள் (மாலைமதி, கண்மணி, ராணி முத்து), ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல்கள் (உடன் சுபா, பிகேபி), லக்ஷ்மி + ரமணிச் சந்திரன், கல்கி + சாண்டில்யன், பாலகுமாரன் + சுஜாதா என்று தான் ஏழெட்டு வயது முதல் பதின்மங்கள் வரை என் வாசிப்பு உயர்ந்தது. பிறகு குமுதம் வெளிய...

அசோகமித்திரன் பிராமண வெறியரா?

Image
அசோகமித்திரன் தமிழின் மிகச் சிறந்த நான்கைந்து எழுத்தாளர்களுள் ஒருவர் என்பதில் ஏதும் சந்தேகமில்லை. தமிழ் மின்னிதழின் 3ம் இதழை அவருக்குத் தான் சமர்ப்பித்திருந்தேன். (ஆனால் என் தனிப்பட்ட ரசனையில் சுந்தர ராமசாமியை அவருக்கு மேலாக வைத்திருக்கிறேன்.) அதனால் அவர் பிராமணர் என்பதாலேயே கொண்டாடப்படுகிறார் என்பது அயோக்கியத்தனமான வாதம். ஆனால் அதே சமயம் பிராமணர் என்பதாலேயே அவரைத் தூக்கிப் பிடிக்கும் சாதிய வாசகர்களும் உண்டு என்பதை நாம் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். எப்படி சாதியை வைத்து அவரைத் தூற்றுபவர்கள் அவரை இழிவு செய்கிறார்களோ அதை விட ஒரு படி அதிகமாகவே இவர்கள் அவரைக் கேவலப்படுத்துகிறார்கள் என்று தான் சொல்வேன். போயும் போயும் சாதியா அவரது இலக்கிய ஸ்தானத்தை தாழ்ச்சி / உயர்ச்சி எனத் தீர்மானிப்பது! அடுத்த குற்றச்சாட்டு அவர் பிராமணர்களைப் பற்றியே எழுதினார் என்ற சித்தரிப்பது. நான் அவரை முழுக்க வாசித்தவன் அல்லன். ஆனால் வாசித்த வரை அவர் அப்படி எழுதியிருப்பது போல் தோன்றவில்லை. அப்படியே இருந்தாலும் ஒருவர் தீவிர இலக்கியம் மேற்கொள்கையில் தன் அனுபவத்திலிருந்து எழுதும் வாய்ப்பு அதிகம் என்பதால் அவர் தன்னைச...

விமர்சனம் அல்லது ஒரு புனைவின் கதை

Image
இதில்தான் ஆட்டுக்குக் காடு மீனுக்கு நீர் பறவைக்கு வானம் தராத உலகம் இதில்தான் வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. - பெருமாள்முருகன் ('கோழையின் பாடல்கள்' தொகுப்பிலிருந்து) ஆங்கிலத்தில் ஜார்ஜ் ஆர்வெல்லின் Animal Farm முதலான‌ பல உதாரணங்கள் உண்டு, ஆனால் நானறிந்த வரை நவீனத் தமிழிலக்கியத்தில் விலங்குகளே பாத்திரங்களாய் உலவும் ஒரு நாவலுக்கு முன்மாதிரி இல்லை. பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை தான் முதலாவது. ஒரு முக்கியமான வித்தியாசம் பொதுவாய் இந்த வகை நாவல்களில் விலங்குக் கதாபாத்திரங்களை நிஜ உலகின் மனிதர்கள், அமைப்புகள் அல்லது நிகழ்வுகளின் (குறிப்பாய் சர்வாதிகாரிகள், மக்களுக்கு எதிரான அரசுகள், இன ஒழிப்பு போன்ற வன்முறைகள்) உருவகமாக்கி காத்திரமான சமகால அரசியல் விமர்சனத்தை முன்வைப்பார்கள். இதை Allegory என்பார்கள். ஆனால் பூனாச்சி நாவல் அப்படி அல்ல. இது அசலாகவே ஓர் ஆட்டின் கதை தான். (ஆனால் இன்னொரு பக்கம் முழுக்க அப்படியான விமர்சனங்கள் ஏதுமே இல்லை என்றும் சொல்ல முடியாது.) 2015ல் தமிழ் மின்னிதழுக்கு அளித்த நேர்காணலில் யுவன் சந்திரசேகர் தமிழகத்தில் எழுத்தாளர்கள் படைப்புகளுக்காக பி...

துப்பறியும் சுதா

Image
ஒரு நெடுங்கதையும் இரு சிறுகதைகளும் அடங்கிய அம்பையின் தொகைநூல் அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு . எனக்குப் பிடித்த ஒரே பெண் புனைவெழுத்தாளர் என்று அம்பையைத் தான் சொல்ல முடிகிறது. (கடந்த பத்தாண்டுகளில் எழுதத் தொடங்கி இருப்பவர்களின் கதைகளை அங்கொன்றும் இங்கொன்றும் தவிர அவ்வளவாய்ப் படித்ததில்லை.)   அவரின் வழமை போல் இக்கதைகளும் பெண்களின் பிரச்சனைகளைத் தான் பேசுகின்றன. (கவனிக்கவும். பெண்ணியம் அல்ல; பெண்களின் பிரச்சனைகள்.) அவரது மற்ற சிறுகதைத் தொகுதிகள் போல் அல்லாமல் இந்நூலின் கதைகள் ஒரே கதாபாத்திரங்களைக் கொண்டவை. சுதா குப்தா என்ற மும்பையில் வசிக்கும் ஒரு தமிழ் துப்பறியும் பெண் கையாளும் சில‌ வழக்குகளே இக்கதைகள். இவற்றில் நெடுங்கதையான மைமல் பொழுது மட்டும் அசலான துப்பறியும் கதையின் ஒழுக்கில் அமைந்துள்ளது. மற்றவை நகர்ப்புற சமூகக் கதையில் நடமாடும் துப்பறியும் கதாபாத்திரம் மட்டும் என்பேன். மைமல் பொழுது கதை மிகச் சிறப்பாக இருந்தது (மைமல் என்றால் மாலை). நல்ல த்ரில்லர் கதை. ஆனால் திகில் கதைகளுக்குரிய‌ மேலோட்டமான கதை சொல்லலாக அல்லாமல் இலக்கியப் பிரதியாக எளிதில் உயர்ந்து விடுகிறது. ஆனால்...

பூக்குழி : காதலை எரிக்கும் சாதியம்

Image
தற்காலிகமாய் நின்று போயிருக்கும் 'தமிழ்' மின் சஞ்சிகையின் கடைசி இதழ் பெருமாள் முருகன் சிறப்பிதழாக க் கடந்த ஆண்டு வெளியானது. அதில் அவரது பெரும்பாலான புத்தகங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. இதழின் ஆசிரியரான‌ நான் தலையங்கம் தவிர ஏதும் எழுதக்கூடாது, ஒரே இதழில் ஒருவரது ஒரு படைப்புக்கு மேல் இடம்பெறலாகாது என்பன மின்னிதழுக்கு நான் பின்பற்றி வந்த முக்கிய விதிகள். ஆனால் அவ்விதழில் இரண்டையும் உடைத்திருந்தேன். நான் மாதொருபாகன், ஆலவாயன் & அர்த்தநாரி நாவல்களை முன்வைத்து விரிவானதொரு கட்டுரை எழுதியிருந்தேன். வந்து சேர வேண்டிய‌ கட்டுரை ஒன்று கடைசி நேரத்தில் கிட்டாமல் போக, வேறு வழியின்றி இருந்த அவகாசத்தில் பூக்குழி நாவல் குறித்து சுருக்கமாய் நானே ஒரு கட்டுரை எழுதினேன் - என் மனைவியின் பெயரில். இதுகாறும் புனைப்பெயரில் வெளியான என் ஒரே படைப்பு இது தான். அதை இப்போது இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஓராண்டு கழித்து இதைத் தற்போது வெளியிடக் காரணம் 2016 தினகரன் தீபாவளி மலரில் வெளியாகி இருக்கும் சாரு நிவேதிதாவின் நேர்காணல் தான். அதில் அவர் பூக்குழி நாவல் பற்றி இவ்வாறு குற...