உலகப் பொது மொழி
8.6.2015 தேதியிட்ட குங்குமம் வார இதழில் வெளியான எமோஜி (Emoji) பற்றிய என் கட்டுரை யின் முழு வடிவம். * "அந்த நடனம் எனக்கு பிடித்திருக்கிறது" என்பதை இன்று நீங்கள் குறுந்தகவலாகப் பகிரவோ சமூக வலைதளங்களில் கருத்தாகப் பதியவோ ஐந்தாறு வார்த்தைகளை விரயம் செய்ய வேண்டியதில்லை. மேலிருக்கும் படங்களைப் பயன்படுத்தி விடலாம். இவை எமோஜி (Emoji). எஸ்எம்எஸ், சாட் உரையாடல்கள், சோஷியல் நெட்வொர்க் பதிவுகள் என எல்லாவற்றிலும் பரவலாய் இது புழக்கத்தில் இருக்கிறது. இது ஒரு காட்சிப்பூர்வ மொழி. எமோஜி என்ற ஜப்பானிய மூலச்சொல்லுக்கே படத்தின் மூலம் ஒரு விஷயத்தை எழுதிக்காட்டுவது என்பது தான் பொருள் (E - படம்; Moji – எழுத்து). இதை எமோட்டிகான் (Emoticon) உடன் குழப்பிக் கொள்ளலாகா. அது எழுத்துக்களைக் கொண்டு படத்தோற்றத்தை உண்டாக்குவது. இது படங்களையே எழுத்து போல் பயன்படுத்துவது. உதாரணமாய், சிரிக்க எமோட்டிக்கானில் :-). எமோஜியில் . ஒருவகையில் எமோஜியின் தாத்தா எமோட்டிகான் என வைத்துக் கொள்ளலாம். எமோஜி முதன் முறையாக 1998 வாக்கில் ஜப்பானில் அறிமுகமானது. என்டிடி டொகோமோ என்ற நிறுவனம் தன் மொபைல்களில் இதைக் கொண்