Posts

Showing posts from March, 2013

கள்ளிச்செடி வளர்ப்பவன் - சில கருத்துக்கள்

Image
அழகியசிங்கர் நடத்தி வரும் நவீன விருட்சம் இணையதளம் எனக்கு பல இளம் நவீன கவிஞர்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஒருவர் லதாமகன் . அதில் வந்த அவர் கவிதை ஒன்றினை படித்தது / பிடித்தது தொடரில் குறிப்பிட்டிருந்தேன் . பின் ஆனந்த விகடனில் அவரது கவிதைகள் வெளியான போதும் கவனித்திருந்தேன். இடையில் என் பரத்தை கூற்று நூலிற்கு ஒரு விமர்சனம் எழுதிய வகையில் மற்றுமொரு தொடுகை. பிற்பாடு ட்விட்டர் மூலமும் ஓரளவு பழக்கமானார். பிறகு அரட்டைக்குத் திரட்டையவை போட்ட போது விடுபட்டதற்காக நான் வருந்திய இருவரில் லதாமகனும் ஒருவர். லதாமகன் கள்ளிச்செடி வளர்ப்பவன் என்ற தன் முதல் கவிதைத் தொகுப்பை அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் இலவச மென்னூலாக வெளியிட்டிருக்கிறார்: http://issuu.com/lathamagan/docs/poems-1?mode=window&viewMode=doublePage மொத்தம் 54 பக்கங்கள். 50 கவிதைகள். உட்கார்ந்தால் ஒரே மூச்சில் 15 நிமிடத்தில் படித்து முடித்து விடலாம் என்றாலும் அது கவிதைக்கு செய்யும் மரியாதையாகா என்பதால் நேற்றிரவும் இன்றும் மூன்று முறை முழுக்க வாசித்து விட்டு சில‌ கருத்துக்கள் பகிரத் தோன்றியதால் இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

முதல் குறும்படம்

Image
LIFE OF A PI - இது தான் நான் எடுத்திருக்கும் என் முதல் குறும்படத்தின் பெயர் (தலைப்பு நன்றி : ஆங் லீ / யான் மார்டெல்). 6 மணி நேர ஸ்க்ரிப்ட்வொர்க்; 6 மணி நேர ப்ளானிங்; 12 மணி நேர ஷூட்டிங்; 12 மணி நேர எடிட்டிங் - இவை metadata. சுருங்கச் சொன்னால் ஆறு நாட்களில் பதினோரு ஆட்களின் உழைப்பில் முகிழ்த்திருக்கிறது இந்த நான்கு நிமிடப்படம். இது ஓர் ஆங்கிலக் குறும்படம். நான் பணிபுரியும் நிறுவனத்திற்காக எடுத்திருக்கிறேன். ஆனால் முழுக்க‌ டாகுமெண்டரி போலாகி விடாமல் ஒரு கதை சொல்லி இருக்கிறேன். மொத்தம் பன்னிரு காட்சிகளில் மூன்று வேறுபட்ட மனிதர்களின் வாழ்க்கையை என் நிறுவனம் தொடர்புடைய தொழில்நுட்பத்தின் சர‌டு கொண்டு இணைக்கும் dramatic-ஆன திரைக்கதை. ஒன்லைன் கேட்டால் Amores Perros, 21 Grams, ஆய்த எழுத்து, David படங்கள் நினைவுக்கு வரக்கூடும். ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு படத்தின் திரைக்கதை உத்தி வெற்றிகரமானதாகத் தோன்றுகிறது. நல்ல‌ நம்பிக்கையைத் தருகிறது. தவிர‌, படத்தின் மைய நோக்கைச் சிதைக்காத வண்ணம் உறுத்தாத மெல்லிய குறியீடுகள் சில முயற்சித்திருக்கிறேன். இது என் முதல் திரைக்கதை முயற்சி அல்ல.