Posts

Showing posts from March, 2019

தண்டனையும் குற்றமும்

Image
நரேந்திர மோடியின் ஐந்தாண்டு சாதனைகளுள் ஒன்று முற்போக்கு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இந்துத்துவ உதிரி அமைப்புகளால் தயக்கமின்றி கொல்லப்படும் நிலையை உருவாக்கி வைத்திருப்பது. பல மரணங்கள் ஒரே மாதிரி இவ்வகையில் நடத்தப்பட்டாலும் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்எம் கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலைகள் தேசத்தின் ஆன்மாவையும் அரசியல் சாசனத்தையும் உலுக்கிக் கேள்வி கேட்டவை. இந்த நால்வரும் எப்படி இறந்தார்கள்? சாகுமளவு அப்படி என்ன பிழை செய்தார்கள்? * நீதிபரிபாலனம் 1 தண்டனை: நரேந்திர தபோல்கர் 20 ஆகஸ்ட் 2013 அன்று காலை 7:20 மணிக்கு தன் காலை நடைப்பயிற்சியில் இருந்த போது பைக்கில் வந்த “அடையாளம் தெரியாத இருவரால்” மிக அருகிலிருந்து நான்கு முறை சுடப்பட்டார். அதில் இரு குண்டுகள் அவர் தலையிலும் மார்பிலும் துளைக்க, அந்த இடத்திலேயே உயிரை விட்டார். குற்றம்: இரு முக்கியப் பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியது ஒன்று. அடுத்தது சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து நின்றது. 1989ல் மஹாராஷ்ட்ரா அந்தஷ்ரத்தா நிர்ம

இளையராஜாவும் மனுஷ்ய புத்திரனும்

‘96' படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தியது போல் இப்புத்தகத்தில்* மனுஷ்ய புத்திரன் கவிதைகளை ஆங்காங்கே பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால் உள்ளடக்க ஆற்றொழுக்கு குலைந்து விடக்கூடாதென்பதற்காக தனியே தருகிறேன். 1. வரும்வரை போய் வா எவ்வளவு நேரமானாலும் இங்கேயேதான் இருந்துகொண்டிருப்பேன் 2. இருப்பு காணாமல் போய்விட்டேன் என்பதற்காக இல்லாமலேயே போய்விட்டேன் என்றாகி விடுமா சொல்? 3. வேறெங்கோ நினைப்புகளில் துருவேறிவிட்டது வெற்று ஏக்கங்களில் பெருமூச்சுகள் காலத்தை அரித்துத் தின்னுகின்றன வாழ்க்கை வேறெங்கோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது 4. ஒரு பாதை, ஒரு பிரார்த்தனை இருப்பதிலேயே கடினமான பாதையைத் தேர்வு செய்கிறேன் இந்தப் பயணம் எந்தவிதத்திலும் இலகுவாகிவிடக் கூடாது என்பதற்காக கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்கிறேன் இவ்வளவு பிரயாசையுடன் உன்னைத் தேடி வரும் நாளில் நீ அங்கே இருக்கக் கூடாது என்பதற்காக 5. கேட்காததும் சொல்லாததும் கேட்பாய் கேட்பாய் என சொல்லாதிருந்தவை சொல்வாய் சொல்வாய் என கேட்காதிருந்தவை வேறொன்றுமில்லை இரகசியமென்றும் இடைவெளியென்றும் 6. மீன

Let the cat out of the bag

Image
இது என் இரண்டாம் சிறுகதைத் தொகுதி. ஒன்பதென்பது போதுமான எண்ணிக்கையா எனத் தெரியவில்லை. போன தொகுப்பில் பதினோரு கதைகளிருந்தன. எண்ணிக்கை பொருட்டில்லை என எண்ணிக் கொள்கிறேன். (இதில் பல கதைகள் நீளமானவை.) இவற்றில் முதலிரண்டு கதைகளும் நெடுங்காலம் முன் எழுதியவை. ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ என் முதல் சிறுகதை. சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன் எழுதியது. அப்போது குமுதம் நடத்திய ஒரு சிறுகதைப்போட்டிக்கும் பின் ஆனந்த விகடனுக்கும் அனுப்பிய நினைவு. குமுதத்தில் ஜெயிக்கவில்லை. ‘தொடர்ந்து எழுதவும்’ என்று ஒரு துண்டுச் சீட்டு விகடனிலிருந்து வந்தது. அக்கதையைத் திருத்திச் சேர்த்திருக்கிறேன். ‘மியாவ்’ சிறுகதை ‘சகா: சில குறிப்புகள்’ என்ற தலைப்பில் சுமார் பத்தாண்டுகள் முன் சாரு நிவேதிதாவின் ‘ராஸலீலா’, ‘காமரூபக் கதைகள்’ நாவல்களின் உந்துதலில் அதே பாணியில் என் வலைதளத்தில் எழுதிய குறுங்கதைகளின் செம்மையூட்டிய வடிவம். மற்ற ஏழு கதைகளும் 2017 மத்தி முதல் 2018 மத்தி வரையிலான ஓராண்டில் எழுதப் பெற்றவை. இதே காலகட்டத்தில் தான் ‘ஆப்பிளுக்கு முன்’ நாவலையும் எழுதினேன். அந்த ஒரு வருட இடைவெளியை படைப்பூக்கம் வெடித்துப்பொங்கிய