படித்தது / பிடித்தது - 79

குழந்தைகளின் உலகில்..!!!

ஏழுமலையும் ஏழுகடலும் தாண்டி
மாயமாய் மறைந்து கிடக்கும் பச்சைத்தீவில்
வானம் தொட்டு உயர்ந்து நிற்கும்
ஆலமரத்தின் அடியில் புதைந்து கிடக்கிறது
ராட்சஷனின் உயிரைத் தாங்கி நிற்கும்
மரகத வீணை..
ராஜகுமாரன் அதனைத் தேடி எடுத்து
உடைக்க யத்தனித்தபோது..
எங்கிருந்தோ வந்த அப்பாவின் குரல் கேட்டு
அம்மா காணாமல் போக..
அசதியில் தூங்கி போகிறது குழந்தை..!!
இருந்தும் -
எப்போது கதை மீண்டும் தொடங்கப்படுகிறதோ
அப்போது தான் கொல்லப்படுவோம்
என்பதை அறியாதவனாக
குழந்தையின் ஆழ்மன அடுக்குகளில்
தீராத வன்மம் கொண்டவனாக
அலைந்து கொண்டே இருக்கிறான் ராட்சஷன்..!!!

- கார்த்திகைப் பாண்டியன்

நன்றி: பொன்னியின் செல்வன்

2 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

என்னுடைய கவிதை உங்களுக்கு பிடித்து இருந்தது மகிழ்ச்சியைத் தருகிறது.. அதை உங்கள் தளத்தில் வெளியிட்டமைக்கு நன்றி நண்பரே..

D.R.Ashok said...

kavithai nallairukku karthigaipandiyan