Posts

Showing posts from March, 2012

ஆழம் - புதிய மாத இதழ்

Image
ஆழம் - New Horizon Media விலிருந்து வெளிவரும் புதிய மாத இதழ். காலச்சுவடு, உயிர்மை போல் கஞ்சிபோட்ட சீரியஸ்னஸோடும் அல்லாமல் குமுதம், ஆனந்தவிகடன் போல் கடைந்தெடுத்த மசாலாவாகவும் இல்லாமல் நடுவாந்திரமாக இருக்கின்றன் இதன் உள்ளடக்கங்கள். Sort of புதிய தலைமுறை வார இதழ் என்று சொல்லலாம். சோதனை முயற்சியாக ஃபிப்ரவரி 2012ல் முதல் இதழ் வெளியானது. அதில் நான் மொழிபெயர்த்திருந்த அப்துல்காலாமின் அணுசக்தியும் எதிர்காலமும் என்ற நெடுங்கட்டுரையிலிருந்து ஒரு பகுதி வெளியாகி இருந்தது. இப்போது மார்ச் 2012 இதழ் வெளியாகி இருக்கிறது. இதில் மாலத்தீவுகளில் சமீபத்தில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு குறிந்த எனது 4 பக்க கட்டுரை வெளியாகி இருக்கிறது. என்.சொக்கன், ச.ந.கண்ணன், ஆர்.முத்துக்குமார், எஸ்.எல்.வி.மூர்த்தி, எஸ்.பி.சொக்கலிங்கம் போன்ற ஆஸ்தான கிழக்கு எழுத்தாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். பதிப்பாளர் பத்ரி; பொறுப்பாசிரியர் மருதன்.

அன்பின் விடுமுறை தினங்கள்

Image
மீனா கந்தசாமி பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன் . எனது பரத்தை கூற்று நூலுக்கு முதல் எதிர்வினை ஆற்றியது அவர் தான். மிகச்சமீபத்தில் தன் அந்தரங்க வாழ்வில் சில கசப்பான‌ சம்பவங்களைச் சந்தித்து மீண்டிருக்கிறார். அது தொடர்பாய் அவுட்லுக் இதழில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையில் ஜ்வலிக்கும் கவித்துவத்தின் வழி வ‌லி தெறிக்கிறது. அதனை அவர் அனுமதியுடன் தமிழில் நான் செய்த மொழியாக்கம் இன்றைய தமிழ் பேப்பர் இதழில் வெளியாகி இருக்கிறது: மணவாக்குமூலம் : மீனா கந்தசாமி - http://www.tamilpaper.net/?p=5684 அவர் தன் கட்டுரையின் தலைப்பை ( I Singe The Body Electric ) 1855ல் வெளியான வால்ட் விட்மனின் Leaves of Grass என்ற தொகுப்பில் இடம்பெற்ற I Sing the Body Electric என்ற கவிதையிலிருந்து பெற்றிருந்தார். நான் மொழிபெயர்ப்பு வடிவத்தின் தலைப்பை மனுஷ்ய புத்திரனின் 2009ல் வெளியான அதீதத்தின் ருசி தொகுப்பில் இடம்பெற்ற அன்பின் விடுமுறை தினங்கள் என்ற கவிதையிலிருந்து எடுத்தாண்டிருக்கிறேன். மீனாவுக்கு இந்தத் தலைப்பு மிகப் பிடித்திருக்கிறது. ******* தென்னாப்ரிக்காவின் டர்பன் நக‌ரில் நடந்த Poetry Africa நிகழ்வில் மீ

அம்ருதா - மார்ச் 2012 இதழில்

Image
அம்ருதா மார்ச் 2012 இதழில் சென்ற வருட அமைதிக்கான‌ நொபேல் பரிசு குறித்து நானெழுதிய‌ விரிவான 5 பக்க கட்டுரை ' பெண்ணுரிமை + ஜனநாயகம் = உலக அமைதி ' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

59வது தேசிய திரைப்பட விருதுகள் (தமிழ்)

2011ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. Dirty Picture படத்தில் சில்க் ஸ்மிதா பாத்திரத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகை விருதுக்கு தகுதியானவர் என்றாலும் அப்படத்தின் பாடாவதித்தன்மை காரணமாக தனிப்பட்ட முறையில் அவ்விருது எனக்கு உவப்பில்லை. சிறந்த துணை நடிகர் அப்புக்குட்டி ( அழகர்சாமியின் குதிரை ) என்பது வரை ஓக்கே; ஆனால் சிறந்த பொழுதுபோக்குப்படம் அழகர்சாமியின் குதிரை என்பது ஓவர் நக்கலாகத் தெரிகிறது (படத்தில் அப்புக்குட்டி ஏற்றிருந்தது துணை நடிகர் பாத்திரம் என்றால் நடிகர் பிரிவில் யாரைச் சேர்த்திருப்பர்கள், படத்தில் வரும் அப்பு என்ற பெயர் கொண்ட‌ அந்த குதிரையையா?). ஆரண்ய காண்டம் படத்திற்காக‌ சிறந்த முதல்பட‌ இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, சிறந்த படத்தொகுப்பாளர் பிரவீன் (ஸ்ரீகாந்த் பெயர் ஏனோ வரவில்லை) என்பதற்கு சந்தோஷ‌ப்படும் அதே வேளையில் சிறந்த பிண்ணனி இசைக்கான விருது அதே படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அளிக்கப்படவில்லை என்பது கடும் வருத்தமளிக்கிறது. தெய்வத்திருமகள் படத்திற்கு விக்ரம் சிறந்த நடிகர் விருது பெறவில்லை என்பதும் ஆச்சரியம் அளிக்கிறது (

யாக்கையின் பிணிப்போர் : மருத்துவ‌ நொபேல் 2011

Image
அம்ருதா - ஃபிப்ரவரி 2012 இதழில் வெளியான 2011 மருத்துவ‌ நொபேல் குறித்த‌ எனது கட்டுரையை இங்கே பகிர்கிறேன்: