எரிச்சல் தொடர்கிறது
பெங்களூரில் என் வீட்டு வேலைக்காரப்பெண் செய்யும் ஒழுங்கீனச் செயல்கள் குறித்து நான் எழுதியிருந்த பதிவுக்கு எழுத்தாளர் தோட்டா அவர்கள் இட்ட கேள்விகள் கொண்ட ஒரு நீண்ட பின்னூட்டத்துக்கு பதிலான எதிர்வினை இது: ******* அன்புள்ள சி.எஸ்.கே ( @writercsk ) டியர் ஜெகன் (@thoatta) முதல நீங்கள் அவங்கள எந்த எந்த வீட்டு வேலைக்காக சேர்த்தி இருக்கீங்கனே தெரியல. பொதுவா வீட்டு வேலைன்னா என்னன்னு புரிஞ்சுக்கிறது? அத சொல்லுங்க. சமையல் வேலையுமா? சமையல் எப்படியும் நாம தான் செஞ்சாகனும். குழந்தைகளைக் கவனித்துக் கொள்தல் (சோறு ஊட்டுதல், குளிக்கச் செய்தல், குண்டி கழுவுதல், தூங்க வைத்தல், துணி துவைத்தல் - இதில் குழந்தைகள் துணி மட்டும் அடங்கும். இவற்றில் துவைத்தல் தவிர மற்ற எல்லாவற்றிலும் என் மனைவியும் அம்மாவும் உடன் பங்கெடுப்பார்கள். இரு குழந்தைகளில் ஒருவன் அவரது வேலை நேரத்தில் 5 மணி நேரம் இருக்கமாட்டான் ப்ளேஸ்கூல் போய் விடுவான். அதனால் முக்கால்வாசி நேரம் கவனிக்க வேண்டியது ஒரு குழந்தையை மட்டும் தான்) மற்றும் காலையும், மதியமும் உண்ணும் பாத்திரங்கள் கழுவுதல் மட்டுமே அந்தப் பெண்ணுக்குத் தந்திருக்கும் வேலை.