Posts

Showing posts from January, 2020

கன்னித்தீவு - முன்னுரை

மீகாமன் குறிப்பு “For the nation to live, the tribe must die.” -    Samora Machel (First President of Mozambique) நாவல் எழுதுவது சமகால நவீனத் தமிழிலக்கியச் சூழலில் ஒரு மோஸ்தர். கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என்றாலும் கூட நாவல் எழுதி அவரது இலக்கிய அந்தஸ்தை நிரூபிக்க வேண்டும் என்று எழுதப்படாத, ஏற்கப்பட்ட விதி இருப்பதாய்த் தெரிகிறது. அதுவும் சென்னைப் புத்தகக்காட்சிக்கு புதிய நாவல் கொணர்வது தவிர்க்கவியலாத சடங்காகி விட்டது. “இம்முறை நாவல் ஏதும் எழுதவில்லை” என்று தயக்கமாய்ச் சொன்னால் “உடம்பு கிடம்பு சரியில்லையா?” என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு துக்கம் விசாரிக்கிறார்கள். தன் மொத்த ஆயுளிலும் இரண்டே நாவல்கள் எழுதிய ப.சிங்காரத்தையும், ஆதவனையும், மூன்றே நாவல்கள் படைத்துள்ள சுந்தர ராமசாமியையும், கி.ராஜநாராயணனையும் அப்போதெல்லாம் எண்ணிக் கொள்வேன். எனக்கு மோஸ்தரில் நம்பிக்கை இல்லை; அதனால் ஆர்வமும் இல்லை. ஆனால் கடந்த ஈராண்டுக்கு மேலாக நாவல் மனநிலை என்னைப் பீடித்திருக்கிறது. அதாவது சிறுகதைக்குரிய கருக்களாக அல்லாமல் பெருங்கதைகளே மனதில் மேலெழும்பி வருகின்றன. அது இன்னும் கொஞ்சம் காலம் தொடரு