Posts

Showing posts from September, 2013

ஐ லவ் யூ மிஷ்கின்!

Image
" மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். " - பரிசுத்த வேதாகமம் [புதிய ஏற்பாடு - யோவான் : அதிகாரம் 10 வசனம் 12] * எல்லாத் திரைப்படங்களும் ஒரே நோக்குடையவை அல்ல‌. சில சினிமாக்கள் கண்களுக்கு; சில சினிமாக்கள் காதுகளுக்கு; சில சினிமாக்கள் கைகளுக்கு; சில சினிமாக்கள் கால்களுக்கு; சில சினிமாக்கள் குறிகளுக்கு. அரிதாய் சில சினிமாக்கள் மனதிற்கானவை. இந்த வருடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திரைப்படங்கள் அவ்வகையில் வெளிவந்திருக்கின்றன. பாலாவின் பரதேசி , ராமின் தங்க மீன்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் .  தமிழ் சினிமாவின் மகத்தான தனித்துவம் மிஷ்கின். சித்திரம் பேசுதடி (2006), அஞ்சாதே (2008), நந்தலாலா (2010), யுத்தம் செய் (2011), முகமூடி (2012) படங்களுக்குப் பிறகு மிஷ்கின் இயக்கி இருக்கும் ஆறாவது படம்  ஓ நாயும் ஆட்டுக்குட்டியும் . ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படம். வில்லன், பழ

கடவுளாகும் கணங்கள்

Image
தெய்யம் என்பது கேரளத்தின் வடக்கு மலபார் பிரதேசங்களில் நிகழ்த்தப்படும் ஓர் இந்து மதச்சடங்கு. தெய்யம் என்றால் மலையாளத்தில் தெய்வம் என்று பொருள். அரிதாரம் பூசி அலங்காரம் பூண்டு அவதாரம் எடுப்பதே தெய்யம் எனும் இந்த நடனச் சடங்கு. மனிதன் சில கணங்கள் தன்னைத் தானே கடவுளாக பாவித்துக் கொள்ளும் விந்தைப் பழக்கம்/ நம்பிக்கை. கிட்டத்தட்ட நம்மூர் கோயில் வழிபாடுகளின் சாமியாடுதலை ஒத்த ஒரு நிகழ்வு. ஆனால் இன்னும் கொஞ்சம் procedural. கடந்த வாரம் எங்கள் அலுவலகத்திலிருந்து குடும்ப சகிதமாய் கேரளாவின் வயநாட்டில் இருக்கும் வைத்ரி வில்லேஜ் ரெஸார்ட்டிற்கு மூன்று நாள் பயணம் போயிருந்தோம். வயநாடு வடக்கு மலபாரில் தான் இருக்கிறது. அங்கு தான் ஓர் இரவு இந்த‌ தெய்யம் சடங்கைக் காண ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் கண்டது நரசிம்ம அவதாரமாய் தன்னை உருவகித்துக் கொண்ட ஒரு நடனக்காரரை. செவ்வண்ண ஆடை தரித்து அதன் மேல் சில ஆபரணங்கள் சூடி சுற்றித் தென்னை ஓலைகள் தொங்க விட்டிருந்தார். முகத்தில் சிங்க‌ முகமூடி அணிந்து, தலைக்கு கவசம் சூடி இருந்தார். இரு கைகளிலும் தன்னைச் சுற்றியும் நெருப்பெரியும் கழிகளை வைத்த‌படி சுற்றிச் சுழன்ற

தமிழ் சினிமா: இளைஞர்கள் சித்தரிப்பு

Image
புதிய தலைமுறை இதழில் இன்றைய தமிழ் சினிமாவில் ந‌ம் இளைஞர்கள் முன்வைக்கப்படும் முறை குறித்து கருத்து கேட்டிருந்தார்கள். அது பற்றி நான் சொன்னவற்றின் சுருக்கப்பட்ட வடிவம் வெளியாகி இருக்கிறது. முழு வடிவம் இது: சினிமா என்பது இன்ன பிற‌ கலை வடிவங்களைப் போல் சமூகத்தைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாய்த் தான் இருக்க வேண்டும். பெரும்பாலும் தமிழ் சினிமா அதைச் செய்வதில்லை. எந்தவொரு நிலவியலையும் போல் தமிழ்ச் சூழலிலும் இளைஞர்களில் ரவுடிகளும் பொறுக்கிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையின் குணம் அதுவல்ல. பெரும்பான்மையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான‌ படங்களே வருகின்றன. தங்க மீன்கள் சமீபத்திய‌ உதாரணம். மற்ற அனைத்துமே வெகுஜன ரசனையைக் குறி வைத்து அல்லது அப்படி நினைத்துக் கொண்டு சில டெம்ப்ளேட் கதாநாயக பிம்பங்களை உருவாக்கி எடுக்கப்படுபவை. கற்பனை வறட்சி மற்றும் புதியவற்றை முயற்சிக்கத் தயங்கும் வணிக‌ அழுத்தம் காரணமாக இது நடக்கிறது. மசாலா படங்களில் மட்டும் அல்லாமல் யதார்த்த சினிமாக்களிலும் கூட இது நிகழ்கிறது. ஆனால் சமூகம் அதைப் பார்த்து கெடுகிறது என்றால் அத

உடல் எனும் சிலுவை

Image
ஆழம் ‍ - செப்டெம்பர் 2013 இதழில் Ship of Theseus திரைப்படம் குறித்த என் விமர்சனக் கட்டுரை வெளியாகியுள்ளது. ******* எல்லா மாறுதல்களுக்கும் நம் மனதைப் பழக்க முடிகிறது இந்த உடல்தான் ஒவ்வொன்றையும் வன்மையாக எதிர்க்கிறது. மனுஷ்ய புத்திரனின் இவ்வரிகளின் திரைவடிவம் தான் Ship of Theseus திரைப்படம்! ஒரு பொருளின் உதிரி பாகங்கள் அனைத்தையுமே மாற்றி விட்டால் இருப்பது அப்பொருளா வேறு ஒன்றா? வெளியே எடுத்த உதிரி பாகங்கள் அனைத்தையும் கொண்டு ஒரு புதுப்பொருள் உருவாக்கினால் அது அதே பொருளா? உண்மையாய் அப்பொருள் இரண்டில் எது? இது ஒரு தத்துவார்த்த கேள்வி. 1ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி ப்ளுடார்க் இச்சிந்தனையை கப்பலையும் அதன் உதிரி பாகங்களையும் வைத்து எழுப்பினார். அது தான் Ship of Theseus. இந்த வினோதப் புதிரின் அடிப்பட்டையில் அமைந்தது தான் Ship of Theseus படமும். இது ஓர் இந்தி - ஆங்கில தத்துவ திரைப்படம். இந்திய சினிமாவில் philosophical genre அரிது. நம்மூர் மிஷ்கினின் நந்தலாலா , மீரா நாயரின் Monsoon Wedding , தீபா மேத்தாவின் Midnight's Children , ப்ரயாஸ் குப்தாவின் Siddharth: The