பொக்கிஷம் - ஒரு கடிதம்
ப்ரிய லெனினுக்கு, நலம். 'நலமறிய ஆவல்' என்று கூட நான் உங்களை அன்புடன் விசாரிக்க இயலாத தூரத்திலிருக்கிறீர்கள். உங்களுக்கென்ன, நீங்கள் நிம்மதியாய்ப் போய்ச் சேர்ந்து விட்டீர்கள். இங்கே மலேசியாவில் உட்கார்ந்து கொண்டு நாற்பது வருடங்களுக்கு முன்பு நாம் பரிமாறிக் கொண்ட காதல் கடிதங்களை வைத்து சேரன் எடுத்திருக்கும் ' பொக்கிஷம் ' போன்ற திரைப்படங்களை தனிமையில் பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் அபாக்யவதி நான் தானே. இயக்குநர் சேரனை எனக்கு மிகப்பிடிக்கும் தான். அவருடைய ஆட்டோகிராஃப், தவமாய்த் தவமிருந்து போன்ற படங்களின் இயல்பான கலை வெளிப்பாட்டிலிருந்த அழகியலை நான் நினைத்து நினைத்து மெய் மறந்து நெஞ்சுருகி லயித்திருக்கிறேன். ஆனால் அப்புறம் மாயக்கண்ணாடி யில் சரிய ஆரம்பித்த அவர் மீதான நம்பிக்கை இப்போது இந்த பொக்கிஷம் படத்தில் பரிதி முன் பனியே போல முழுவதும் காணாமல் போய்விட்டது. இந்த படத்தில் கூட இயக்குநர் சேரனாக அவர் நிச்சயம் ஜெயித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 1970களின் கல்கத்தா செட் (ஆங்காங்கே துருத்திக் கொண்டிருக்கும் சில உறுத்தல்களை மன்னிக்கலாம்), சில காட்சிகளின் அழகான ஒ