Posts

Showing posts from January, 2023

ஓர் அழகியைக் கொண்டாடுவது எப்படி?

Image
பெண் என்கிற‌வள் ஆணுக்குச் சமமான உயிர்த்திரள்; வெறும் நுகர்வுப் பண்டம் அல்ல. அவள் திறமையை அங்கீகரித்து, வாய்ப்புகளை உறுதி செய்து, ஆளுமையை மதிக்கும் அதே சமயம் அவளது அழகினைக் கொண்டாடவும் தவறக்கூடாது. அழகு ஒருத்தியிடம் அதீதமாகக் கொட்டிக் கிடக்கையில் அது ஆராதனைக்கு உரியது. குறிப்பாக நடிகைகள், மாடலிங் செய்வோர் தம் அழகு ரசிக்கப்படவும், பரப்பப்படவுமே மிக‌ விரும்புகிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் திறமை என முன்வைப்பது பெரும்பாலும் அழகைத்தான். மலை உள்ளிட்ட இயற்கைக் கொடைகளோடும் இசை போன்ற‌ கலைச் சரக்குகளோடும் இணை வைத்துக் கொண்டாடத்தக்கது பெண்ணழகு. பலர் அதை ரகசியமாகவும் சிலர் பகிரங்கமாகவும் செய்கிறார்கள். ரசிக்கப்படுவதால் வெட்கப்படலாம்; ரசிப்பதற்கே கூட‌ வெட்கப்படுவதா! எப்படியோ பெண் ரசிப்புத் தொழில் சிற‌ப்பாகவே நடந்து வருகிறது. அழகென்றால் அன்னை தெரசா, பிடித்தவரே பேரழகு என்கிற உணர்ச்சிவசங்களைக் கடந்து பார்த்தால் அழகு என்பது ஒருவர‌து புறத் தோற்றம் மற்றும் உடல் மொழியினால் ஈர்க்கப்படுவதே. புறத்தோற்றம் என்பதில் ஒருவரது முகம், உடல் வடிவு எல்லாம் சேர்ந்து கொள்ளும். உடல் மொழியில் அசைவுகள, நகர்வுகள், குரலினிம

பீத்தோவனின் சிம்ஃபொனி [சிறுகதை]

Image
புத்தாண்டின் பின்னிரவில் குறுமின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மஹாஷ‌ரண மடிவாளா மசிதேவா மேம்பாலத்தின் புராதனக் குண்டுக் குழிகளில் ஆக்டிவா நூற்று இருபத்தைந்தில் தத்தளித்துக் கொண்டிருந்த போதுதான் அவர்களால் தூக்கப்பட்டேன். அவர்கள் என்றால் ஒரு வித வினோதர்கள். மூன்று பேர். என்னை விட உயரம் குறைவாக இருந்ததும், முகத்தில் ஒரே அகலக் கண் இருந்ததும், மூன்று சன்ன‌ வாய்கள் இருந்ததும், கைகள் மனிதர்கள் போல் ஒரு ஜோடி இருந்தாலும் அவற்றில் தலா ஒரே விரல் இருந்ததும் மட்டுமே அந்த இருளில் புலனானது. நிச்சயம் மானிடர் அல்லர். அயலார்கள். ஏதிலிகள்! புதிதாய்ப் பிரசவித்த பெண்களிடம் வேர்வையின் வீச்சமும் பாலின் மணமும் கலந்து வீசும் வாசனை அவர்களிடம் இருந்தது. பெண்களாக இருக்குமோ என எண்ணம் வந்து மார்புகளைக் கவனித்து ஏமாந்தேன். ஒரு ரோமமும் விளைந்திடாத‌ வழுக்கைத் தேகம். நடுவில் நின்ற‌வள் என் நெற்றி மத்தியில் தனது இடது கை ஒற்றை விரலால் தொட்டாள். அதிலிருந்து ஒரு நீல‌ ஒளி கிளம்பி என் மண்டைக்குள் புகுவதைப் பாராமலேயே உணர முடிந்தது. தமிழின் முக்கிய இளம் எழுத்தாளனான நான் எதிர்காலத்தில் இந்தச் சம்பவம் பற்றி எழுதுகையில் மடிவாளா மசி