Posts

Showing posts from June, 2015

காசு பணம் துட்டு மொபைல் மொபைல்

Image
சென்ற வார‌ குங்குமம் இதழில் (8.6.2015) வெளியான மொபைல் பேமெண்ட் பற்றிய என் கட்டுரை யின் முழு வடிவம். * மதுமிதா. வயது 25. பெங்களூரில் கார்பரேட் ஊழியை. பெருநகரங்களில் தூவிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு துகள். அதே சமயம் நவீனத்தின் பிரதிநிதி. ஆட்டோ சவாரி, தள்ளு வண்டி, பெட்டிக் கடை போன்றவற்றிற்குத் தவிர அவர் கடைசியாய் எப்போது கரன்சி நோட்டை, செக் புக்கை, டெபிட் / க்ரெடிட் கார்டைப் பயன்படுத்தினார் எனக் கேட்டால் புருவம் சுருக்கித் தீவிரமாய் யோசிக்கிறார்.  தினமும் பயணிக்கும் மெட்ரோ ரயில் டிக்கெட், வார இறுதியில் போகும் சினிமா டிக்கெட், மாதா மாதம் எலக்ட்ரிசிட்டி பில், அவ்வப்போது பயணிக்கும் டேக்ஸி, தீரும் போதெல்லாம் மொபைல் ரீசார்ஜ், சொந்த ஊருக்குப் பஸ் டிக்கெட், ஆன்லைன் ஷாப்பிங் செலவுகள், சென்னையில் கல்லூரி பயிலும் தம்பிக்கு அனுப்பும் பணம் என எல்லாமே இன்று அவர் செய்வது மொபைல் பேமெண்ட்டாகவே. அதாவது தன் ஸ்மார்ட்ஃபோனின் வழியாக இந்தப் பணப் பரிவர்த்தனைகளைச் செய்து கொள்கிறார். இவர் ஓர் உதாரணம். ஸ்மார்ட்ஃபோன் வருகைக்குப் பிறகு கடந்த ஐந்தாண்டுகளில் உலகம் முழுக்க பாரம்பரிய பணப்பரிவர்த்தனை