Posts

Showing posts from May, 2012

குமுதம் இதழில்

Image
குமுதம் 6.6.2012 தேதியிட்ட இதழில் (அட்டையில் சகுனி கார்த்தி + அழகி ப்ரணீதா) டைட்டானிக் நூற்றாண்டையொட்டி நானெழுதிய ஐந்து பக்க‌ கட்டுரையான‌ மூழ்கவே மூழ்காத கப்பல் வெளியாகி உள்ளது. தவிர‌, எனது சமீப வெளியீடான தேவதை புராணம் கவிதைத் தொகுப்பு குறித்த சுருக்கமான‌ நூல் அறிமுகம் பு(து)த்தகம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.


குமுதம் போன்ற ஓர் உச்சபட்ச‌ வெகுஜன பத்திரிக்கையில் வெளியாகும் என் முதல் பெரிய படைப்பு என்ற வகையில் எனக்கு முக்கியமானதொரு நிகழ்வு இது. வசதியும் வாய்ப்பும் வாய்த்தவர்கள் வாங்கி வாசித்து வாயார வாழ்த்தலாம்.

ஐந்தாம் கவிதை

*

முதல் வரி
அடுத்த வரி
கடைசி வரி.

*

குட்டிப்பெண் நீ
குட்டிப்பெண் நீ
குட்டிப்பெண் நீ.

*

காற்றிலலையும்
காந்தப் புலமென‌
காதலில் திரியும்
காத்திரம் - மனசு.

*

பெரிய குழந்தைக்கு
சிறிய குழந்தை
அரிய பொம்மை -
அவ்வளவு தான்.

*

பாலினக்கவர்ச்சியற்ற‌
ஆண் பெண் சினேகிதம்
சாத்தியமில்லையென‌
நீ புரிந்து கொண்டால்
நீயும் என் தோழியே.

*

ப்ரியங்களின் பரிணாமம்

நாயைக் கண்டால்
கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால்
நாயைக் காணோம்
அப்போது ‍- இப்போது
நாயை அடிப்பானேன்
பீயை சுமப்பானேன்.

சொற்களைத் தின்பவள்

உனக்கு
"ம்" பிடிக்காது
"OK" பிடிக்காது
"அப்புறம்" பிடிக்காது
அப்புறம் என்னென்னவோ பிடிக்காது.

நிதமொரு சொல்லை உனக்காக 
ஞாபகங்களின் சிடுக்குகளிலிருந்து
சிறகென‌ உதிர்க்கின்றது மனம்.

வெறும் சொற்களை மட்டுமே
ஊன்றுகோலாய்க் கொண்டவனை
சொல்லற்றவனாக்கிப் பார்ப்பதில்
நீ அடையும் சந்தோஷத்தை
வியந்தபடி நொண்டுகிறேன்.

செல்பூக்கள்

ஒற்றைக் கையிலுனக்கு
SMS விடுத்துக் கொண்டே
விடுபூக்கள் தொடுத்ததில்
விடுபட்டுப் போயிருந்த‌ன‌
மனசோரம் மொட்டுவிட்ட‌
சில புத்துதிரிப் புஷ்பங்கள்.

*

மழைப்பேச்சு

"இங்கே மழை வருவது போல் இருக்கிறது"
என்கிறாள் அவள்;
"இங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது"
என்கிறான் அவன்;
இடைப்பட்ட 350 கிமீ தேசிய நெடுஞ்சாலை
புன்னகைக்கிறது.

*

போலி புத்திஜீவிகள் மீதான‌ வழக்கு

Image
மறுபடியும் ஒருமுறை மிகத் தெளியாய் மிக‌ வலுவாய் ஏமாற்றி இருக்கிறார் காதல் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

வழக்கு எண் : 18/9 என்ற வித்தியாசப் பெயர் கொண்ட இப்படத்தை நான் எதிர்பார்த்திருக்க நிறையக் காரணங்கள் இருந்தன. முக்கியமாய் இரண்டு - கல்லூரி என்கிற அபார மொக்கைக்குப் பின் பாலாஜி சக்திவேல் போன்ற ஒரு திறமைசாலி அதிஜாக்கிரதை உணர்வுடன் நான்கு வருடங்களாக செதுக்கிக் கொண்டிருந்த படம் என்பது ஒன்று; படம் பார்த்த அத்தனை பேருமே இது ஏதோ தமிழ் சினிமாவில் அபூர்வமாய்ப் பூக்கும் குறிஞ்சி என்ற ரீதியில் கொடுத்த பில்டப் மற்றொன்று. இந்தப் பின்புலத்துடன் பார்த்தால் எனக்கு படம் பலத்த ஏமாற்றத்தினை அளித்தது என்பது மிகையில்லை.


கல்லூரி படமே சிறந்த படம் தான்; எனக்கு மிகப் பிடிக்கும் என கண்ணீர் மல்க நிற்பவர்கள் தயவு செய்து இந்த வரியுடன் இந்த விமர்சனத்திலிருந்து விலகிவிடலாம். உங்களிடம் பேச விஷயமேதுமில்லை. நாம் பேசும் பாஷைகள் வேறு வேறு.

ஓர் ஆசிட் வீச்சு வழக்கில் விளிம்பு நிலை மனிதர்கள் எவ்வாறு அதிகாரத்தின் மற்றும் பணத்தின் கொடுஞ்சதியால் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது படம். கதை நன்று. ஆனால் இந்த பொட்டன்ஷியல் …