Posts

Showing posts from December, 2011

அடுத்த வெளியீடு

Image

முல்லைப்பெரியாறு - ஒரு முக்கியக்கருத்து

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் பற்றி மலையாள எழுத்தாளர் பால் ஸக்கரியா இந்த வார ஆனந்த விகடன் இதழில் அளித்திருக்கும் நேர்காணல் இது. இதில் கிட்டதட்ட எல்லாக் கருத்துக்களுடனுமே நான் ஒத்துப்போகிறேன். சொந்த இனம் தவறு செய்வதைச் சுட்டிக் காட்ட தனி மனோதிடமும் நேர்மையுணர்வும் வேண்டும் - ஸக்கரியா போல். முக்கியமாய், எதிர்ப்படும் எல்லோருமே அணை வேண்டும் / வேண்டாம் என்பது பற்றி ஒரு கருத்து கொண்டிருக்கும் போது ஒட்டு மொத்த தமிழகத்திலும் / கேரளத்திலும் நான் ஒருவன் மட்டும் தான் சிவில் எஞ்சினியராக இல்லாமல் போய்விட்டேனோ என்ற குழப்பமும் சங்கடமும் வந்து விட்டது. என்னை ஆறுதல் படுத்தும் விதம் "ஓர் எழுத்தாளன் அதைப் பற்றி அறிவியல்பூர்வமாகச் சொல்ல முடியாது" என்று ஒப்புக் கொண்ட ஸக்கரியாவுக்கு சிறப்பு நன்றிகள். ******* கேரளத்தை ஆளும் மாஸ் ஹிஸ்டீரியா! சமஸ் பால் சக்கரியா. மலையாளத்தின் மகத்தான எழுத்தாளர். துணிச்சலான கருத்துகளுக்காகப் பெயர் பெற்றவர். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழர்கள் - மலையாளிகள் உறவில் பிளவை உருவாக்கி இருக்கும் நிலையில் சக்கரியாவிடம் பேசினேன்.

விமர்சனமா? அவதூறா?

எக்ஸைல் பற்றிய என் விமர்சனத்துக்கு எதிர்வினையாய் சில பதிவுகளை சாரு தன் வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்து சற்று முன் நான் அவருக்கு அனுப்பிய மின்னஞ்சல் இது : ******* from: Saravanakarthikeyan C. <c.saravanakarthikeyan@gmail.com> to: Charu Nivedita <charu.nivedita.india@gmail.com> date: Wed, Dec 14, 2011 at 10:12 AM subject: விமர்சனமா? அவதூறா? mailed-by: gmail.com டியர் சாரு, சாரு நிவேதிதா என்ற ஒருவருக்கு மட்டும் தான் மரியாதை. அல்லக்கைகளோடெல்லாம் மாரடிக்க விருப்பமில்லை. அதனால் உரையாடலை உங்களோடு மட்டும் மட்டறுத்திக் கொள்ள‌ விரும்புகிறேன். ஒருவரின் படைப்பை விமர்சிக்க அவரை விட உயர்ந்த படைப்பாளியாய் இருக்க வேண்டும் என்று சொல்வதே அராஜகமாகப் படவில்லையா? (அப்படியென்றால் ராகுல் டிராவிடைத் தவிர இவ்வுலகில் வேறு யாருமே சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை விமர்சிக்க முடியாது). நான் உங்கள் பிரதியை அணுகியது ஒரு வாசகனாகவே; படைப்பாளியாக அல்ல. அதனால் உங்கள் படைப்பை நான் குறை சொன்னால் பதிலுக்கு "நீ என்ன பெரிய படைப்புப் புடுங்கியா?" எனக் கேட்பது அர்த்த

எக்ஸைல் : ஏமாற்றம்

சாரு நிவேதிதா வின் ஆறாவது நாவலான எக்ஸைல் குறித்த எனது கட்டுரை இன்றைய தமிழ்பேப்பர்.நெட் இதழில் வெளியாகி உள்ளது. நாவலைப் பற்றி ஒற்றை வார்த்தையில் என் கருத்து கேட்டால் "disappointing" என்று சொல்வேன். காசும், நேரமும், சிந்தனையும் விரயம் செய்து படிக்கும் வாசகனை சாரு மதிக்கவில்லையே என்பதே எனது ஆதங்கம். சாரு நிவேதிதாவின் எக்ஸைல் – ஒரு பின்நவீனத்துவ விமர்சனம் : http://www.tamilpaper.net/?p=5024 எனது வாழ்வின் ஆகச்சிறந்த வசவுச்சொற்களை பெற்றுத்தரும் வல்லமை வாய்ந்தது இக்கட்டுரை எனத்தோன்றுகிறது!

7ஆம் அறிவு - விமர்சனம்

மெல்லினம் இதழில் (நவம்பர் 2011) வெளியான 7ஆம் அறிவு பற்றிய எனது திரைவிமர்சனத்தின் முழு வடிவம் இது: ******* ஏ.ஆர்.முருகதாஸ் முதல் சூர்யா வரை தமிழனின் பெருமையைச் சொல்கிறதென கூவியறிவித்த படம்; சன் டிவி முதல் விஜய் டிவி வரை ப்ரோமோ நிகழ்ச்சிகளின் மூலமாக உயரத் தூக்கிப் பிடித்த படம்; மல்ட்டிப்ளெக்ஸ் முதல் கீற்றுக்கொட்டகை வரை போட்டிபோட்டு வாங்கித் திரையிட்டிருக்கும் தீபாவளிப்படம் - 7ஆம் அறிவு . இந்தப்பின்புலங்களோடு சேர்த்துப்பார்க்கையில் படம் ஏமாற்றத்தையே அளிக்கிறது. 7ஆம் அறிவு படத்தின் கதை என்ன? ஆரம்பத்தில் சொல்லப்பட்டது போல் இது ஹாலிவுட்டின் இன்செப்ஷனோ , பாலிவுட்டின் சாந்தினி சௌக் டூ சைனா வோ அல்ல. ஆனால் கொஞ்சமாய் தசாவதாரம் படத்தின் சாயல் மட்டும் இருக்கிறது. 6ம் நூற்றாண்டு போதி தர்மன், சீனா சென்று, மக்களை கொடிய நோயிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றி பின் மருத்துவத்தையும் தற்காப்புக்கலையையும் கற்றுத்தருகிறார். 21ம் நூற்றாண்டில் இந்தியா மேல் கிருமி யுத்தம் நிகழ்த்த வரும் சீனஉளவாளிக்கு போதிதர்மரை genetics மூலம் மறுபடி உருவாக்க முயலும் பெண் விஞ்ஞானி தடையாக வர, எந்த நூற்றாண்டு

பெருங்கூத்து : இயற்பியல் நொபேல் 2011

Image
அம்ருதா - நவம்பர் 2011 இதழில் வெளியான 2011 இயற்பியல் நொபேல் குறித்த‌ எனது கட்டுரையை இங்கே பகிர்கிறேன்:

அம்ருதா ‍ - டிசம்பர் 2011 இதழில்

Image
அம்ருதா டிசம்பர் 2011 இதழில் இவ்வருட வேதியியல் நொபேல் குறித்து நானெழுதிய‌ விரிவான 6 பக்க கட்டுரை வெளியாகியுள்ளது. இம்முறை கட்டுரைத்தலைப்பை பிரமிளின் கவிதையிலிருந்து எடுக்கவில்லை; சுஜாதாவின் ' ஏறக்குறைய சொர்க்கம் ' என்ற நாவல் தலைப்பின் பாதிப்பில் தான் ' ஏறக்குறைய படிகம் ' என்று வைத்திருக்கிறேன்.