ம்டப ப்ழ்மித
Parody film என்பார்கள் ஆங்கிலத்தில். கொஞ்சம் dilute செய்தால் spoof movie எனலாம். ஏற்கனவே வந்திருக்கும் படம் / படங்களின் கதை, திரைக்கதை, வசனம் முதற்கொண்டு சகலத்தையும் சகட்டு மேனிக்கு நையாண்டியாய் இமிட்டேட் செய்து படம் எடுப்பது. நகைச்சுவை தான் அதன் ஆதார ஸ்ருதி. அதாவது அங்கதச்சுவை. காட்சிக்குக் காட்சி முழுப்படமே இப்படித் தான். காலவரிசைப்படி முதலாவது அல்ல என்ற போதிலும், ஹாலிவுட்டைப் பொறுத்தவரை 1948ல் வெளியான Abbot and Costello முக்கியமான முயற்சியாக கருதப்படுகிறது (1947ல் வெளிவந்த My Favorite Brunette முதலாவதாக இருக்கக்கூடும்). ஆங்கிலத்தில் 1940களில் தொடங்கி இதுவரை இது போல் குறைந்தபட்சம் நூறு ஸ்பூஃப் படங்களாவது வெளிவந்திருக்கும். அவற்றில் நான் பார்த்திருக்கும் ஒரே படம் ஜேம்ஸ் பாண்ட் படங்களை நக்கலடித்து Rowan Atkinson நடிப்பில் (இந்த Mr.Beanஆக நடிப்பாரே ஒரு முட்டைக்கண் ஆசாமி அவரே தான்) 2003ம் ஆண்டு வெளிவந்த Johnny English . அடுத்த வருடம் இதன் இரண்டாம் பாகம் வரும் எனத் தெரிகிறது. தமிழில்? இதுவரை ஸ்பூஃப் படமே வந்ததில்லை என்று தான் சொல்வேன். அதாவது முழுமையான ஸ்பூஃப் படம். நடிகர் விவேக் நி