Posts

Showing posts from January, 2011

ராணா - நிஜமா?

Image
ரஜினிகாந்த் - தீபிகா படுகோன் - கே.எஸ்.ரவிக்குமார் - ஏ.ஆர்.ரஹ்மான் - ஆர்.ரத்னவேலு - ஆண்டனி - ராஜீவன் - சார்லஸ் தர்பி - சௌந்தர்யா - ஆக்கர் ப்ரொடக்ஷன்ஸ் - ஈரோஸ் இண்டர்னேஷனல் - பீரியட் ஃபிலிம் - ட்ரிபிள் ஆக்ஷன் - தமிழ் - தெலுங்கு - இந்தி - 2012 - வாலி - வைரமுத்து - தாமரை - நா.முத்துக்குமார் - மதன் கார்க்கி - எஸ்.ராமகிருஷ்ணன்

மூன்று கடிதங்கள்

கடந்து போன‌ சமீபத்தில் எனக்கு வந்த மின்னஞ்சல்கள் இவை: ******* அன்பின் சரவணகார்த்திகேயன், நலமா? சமீபத்தில்தான் உங்களின் வலைத்தள அறிமுகம் கிடைத்தது. மிகவும் ரசித்தேன். உங்களின் எழுத்து நடை சுஜாதாவை நினைவு படுத்தியது. நீங்கள் அறிமுகப்படுத்திய பல விஷயங்கள் ரசனைத் தன்மையுடன் இருந்தன. அதற்கு நன்றிகள். "கற்பதுவே கேட்பதுவே" - மிகவும் அருமை. நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள். -- கனாக்காதலன் http://kanakkadalan.blogspot.com/ ******* Hi CSK, மேலும் பல புத்தகங்களை எழுதி பல விருதுகளைப் பெற மனமார வாழ்த்துகிறேன் http://chummaaorublog.wordpress.com/2011/01/11/வாழ்த்துகள்-csk/ -Kaarthik ******* அன்புள்ள CSK, தமிழக அரசின் விருது உங்களுக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த ஆண்டும் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். -- அன்புடன், கிருஷ்ண பிரபு, சென்னை. http://www.online-tamil-books.blogspot.com ******* கனாக்காதலன், கார்த்திக், கிருஷ்ண பிரபு - நன்றியும் அன்பும்!

படித்தது / பிடித்தது - 96

பூவொன்று மழைத்துளியென மஞ்சள் மலர்களை உதிர்த்துக் கொண்டிருந்தது அம்மரம் நிழலுக்கென ஒதுங்கிய பேருந்து அதில் சில மலர்களை முன்கண்ணாடியில் ஏந்திச்சென்றது கண்ணாடி வழுக்கிய பூக்கள் சாலையில் விழுந்து நசுங்கின வைப்பர் புறக்கணித்த பூக்கள் சில ரோட்டோரம் சிதறின பெண்டுலமாக ஆடும் வைப்பரில் சிக்கிய சில பூக்கள் நைந்து கிழிந்தது பின்னும் வைப்பர் கிட்டிய பூக்களை விடாது அலைகழித்து கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது எதுவும் செய்யவியலாது பூக்கள் சிதைவுறும் காட்சி மனசுக்குள் குமைய நிறுத்தம் வந்ததும் இறங்கி நடக்கிறேன் - லாவண்யா சுந்தரராஜன் நன்றி: உயிரோடை

புத்தகக்காட்சி 2011 : A POST-MORTEM

புத்தகக்காட்சிக்கு செல்வது இப்போதெல்லாம் சடங்காகி விட்டது - மறுக்கவே இயலாத ஆனால் விருப்பத்துக்குக‌ந்ததொரு பழஞ்சடங்கு. ‌பத்தாயிரம் ரூபாய்க்குப் புத்தகங்களைப் பெருங்கட்டாய் வாங்கி திட்டுக்கள் வரவேற்க பெருமிதத்துடன் வீடேகிய காலமெல்லாம் மலையேறிப் போய் விட்டது. ராட்சசப்பை கொள்ளாப் புத்தகங்களை ‌மிகத்தனியனாய்த் தோளில் சுமந்தலைவது கடந்த போன‌ சமீபங்களில் மிகுந்த அலுப்பினையே தருகிறது. பொதுவாகவே புத்தகக்காட்சி செல்வது ஓர் உணர்வு. வாசிக்கும் பழக்கமுடைய ஒரு சிந்த‌னையாளனுக்கு அதைக் காட்டிலும் கொண்டாட்டமான சங்கதி வேறு ஏதேனும் இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான். புத்த‌கம் வாங்குவது என்பது இதில் இர‌ண்டாம் பட்சம் தான். அத்தனை புத்தகங்களையும் ஒரே இடத்தில் பார்க்கையில் வரும் அந்தப் பரவசம் ஒரு சம்போக உச்சத்துக்கு இணையானது. செல்வது அந்த உணர்வுக்காகவே. இம்முறையின் அசூயைக்கு கலவையாய்க் கார‌ணங்கள் துருத்தி நிற்கின்றன. பிரதான காரணம் - எல்லோரும் சொல்வது தான் எனினும் உணர்ந்தால் மிக உண்மையானதும் கூட‌ - ஏற்கனவே வாங்கிய புத்தகங்களையே இன்னும் படித்த பாடில்லை (அதுவும் கடந்த ஆண்டு வாங்கியவற்றில் ஒரு பத்து சதவிகி

கலைஞர் - பேராசிரியர் - அடியேன்

Image

மற்றுமொரு விருது

Image
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை நேற்று சில விருதுகளை அறிவித்துள்ளது - ஜெயகாந்தனுக்கு பாரதி விருது, இளையராஜாவுக்கு M.S.சுப்புலட்சுமி விருது, பத்மா சுப்பிரமணியத்துக்கு பாலசரஸ்வதி விருது. இதில் இளையராஜா விஷயத்தில் மட்டும் வழக்கம் போல் மற்றுமொரு விருது தன்னை கௌரவித்துக்கொள்கிறது என்று தான் சொல்வேன் - அதே போல் அவ்விருதை இனி வாங்கவிருப்பவர்களையும் சேர்த்து. 2009‍ம் ஆண்டு சட்டப் பேரவையில் நடந்த சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது போல் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற கலைஞர்களுக்கு தனி விருது வழங்கப்படும் என அரசு அறிவித்த‌து. அதன் தொடர்ச்சியாக இப்போது முதல் முறையாக இவ்விருதுகள் (ரூபாய் ஒரு லட்சம் பொற்கிழி) அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு விஷயம் மட்டும் இதில் உறுத்துகிறது. அது இளையராஜாவுக்குத் தரப்பட்டிருக்கும் விருதின் பெயர். கமல்ஹாசனுக்கு 'சூர்யா விருது' கொடுத்தது போல் இருக்கிறது இது.

பரத்தை கூற்று : லதாமகன்

பரத்தை கூற்று புத்தகம் பற்றிய கவிஞர் லதாமகன் அவர்களின் விமர்சனம் இது: ******* http://silarojakkal.wordpress.com/2011/01/17/paraththaikootru-csk/ ******* Posted on ஜனவரி 17, 2011 by லதாமகன் பரத்தை கூற்று – சரவணகார்த்திகேயன் "களைத்துறங்குபவன் குறட்டையொலியொக்கும் ஓயாது மனதிசைக்கும் சிருங்கார ஒலிக்கும் இடையே இழைக்கப்பட்டவை இக்கவிதையனைத்தும். அழுக்காய் அசிங்கமாய் நாசி பெயர்த்தெறியும் துர்வீச்சத்துடன் இருக்கலாம் பிசிபிசுத்த ஈரச்சீழ் வடிந்த இந்த யோனியெழுத்து- அது படிப்பவர் மனசு பொறுத்தது." - சரவணகார்த்திகேயன் முன்னுரையிலிருந்து மகுடேஸ்வரனின் காமக்கடும்புனல் படித்திருக்கிறேன். அதைப்பற்றி சில மாதங்களுக்கு முன் நண்பரிடம் சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருந்தபோது சரவண கார்த்திகேயனின் பரத்தைகூற்று வெளியீடு பற்றிய அறிவிப்பைச் சொன்னார். சில அலுவல் காரணங்களால் வெளியீட்டுக்குச் செல்லமுடியவில்லை. சாரு பேச்சு குறித்த கதைகள் கட்டுகள் எல்லாம் மறந்து ஒரு வழியாய் புத்தகக் கண்காட்சியில்தான் தொகுப்பை வாங்க முடிந்தது. ஒரு 15லிருந்து 30 நிமிடங்கள் போதும் இந்த தொகுப்பை வாசித்துமுடிக்க.

தமிழக அரசின் விருது

Image
நேற்றைய மாலையில் தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசினை வாங்கியாயிற்று. விருதினைத் தந்தவர் டாக்டர் கலைஞர் அல்ல; இனமானப் பேராசிரியர். விழா பற்றிய விரிவான பதிவு (சாத்தியமெனில்) பிறிதொரு சமயம். இப்போதைக்கு பகிர‌ ஒரு சேதி - ரூ. 20,000ஆக இருந்த‌ சிறந்த நூலாசிரியருக்கான பரிசுத்தொகையை ரூ.30,000ஆகவும், ரூ. 5,000ஆக இருந்த‌ சிறந்த பதிப்பகங்களுக்கான பரிசுத்தொகையை ரூ.10,000ஆகவும் நேற்றைய விழாவில் உயர்த்தி அறிவித்தார் கலைஞர். விருதாளிகளுக்கு வாழ்த்துகள். விழாவின் நிக‌ழ்படம் ( ந‌ன்றி - பத்ரி ) : (இப்படத்தில் 12:20 முதல் 12:32 வரை  13 விநாடிகளுக்கு அடியேனின் தரிசனம் கிட்டும்) விழா குறித்த தினமணி செய்தி : விருது பற்றி தினமணி செய்தி :

தப்பு விகடன் - 3

Image
இம்முறை வலைபாயுதே (19.01.2011 இதழ்) அப்படியே உல்டா. அடியேனின் ட்வீட் ஒன்று அதிஷாவின் (@ athisha ) பெயரில் வெளியாகியிருக்கிறது. கொஞ்சம் ஆறுதலாயிருக்கிறது.

பரத்தை கூற்று : சில கருத்துக்கள்

பரத்தை கூற்று வெளியீடு பற்றி போகிற போக்கில் தொட்டுச் செல்லும் ஒரு பதிவு: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_9.php கதை சொல்லி - சாரு நிவேதிதா (Charu Nivedita) Posted by லிவி முன்னர் ஒருமுறை சென்னை கே.கே நகரில் உள்ள "டிஸ்கவரி புக் பாலஸில்"(Discovery book palace) புத்தக வெளியீட்டு விழாவுக்கு சாரு வந்திருந்தார். அங்கு பள்ளி நாட்களின் வகுப்பறைத் தோழனை எதிர்பாராத விதமாக சந்தித்தேன்."பரத்தை கூற்று" புத்தகத்தை வெளியிட்டு சாரு பேசத் தொடங்கினார். அது வரையில் என்னிடம் கதைத்துக் கொண்டு இருந்தவன், திடீரென முழு கவனமும் சாரு பக்கம் திரும்பியது. சாரு பேச்சைக் கேட்க தொடங்கியதும் அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியும் பிரகாசமும்.சாருவின் ஒவ்வொரு அசைவையும் அவன் ரசிப்பவனாக இருந்தான். சாரு கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சமர்பணம் என்பதில் தொடங்கி அவர் நடையில் விமர்சித்துக் கொண்டே போனார் (அவர் பேரரசு என்றால் மற்றவர்கள் எல்லாம் சாதாரண குடிமக்களா?). என்னைப் புறந்தள்ளியவனாக அவரின் பேச்சிலே அத்தனை ஆனந்தத்தைக் கண்டான். அவன் எனக்குத் தெரிந்த வரையில் ஒரு தீவிர நவீன இலக்கிய

பரத்தை கூற்று : கவிஞர் மதன்

பரத்தை கூற்று புத்தகம் பற்றிய கவிஞர் மதன் அவர்களின் விமர்சனம் இது: ******* http://azhagiyalkadhaigal.blogspot.com/2011/01/blog-post.html ******* Posted on January 10, 2011 at 12:38 AM by மதன் நசுக்கப்பட்ட யோனி மலர்களின் திரவப் பிசுக்கார்ந்த தரை! (பரத்தை கூற்று ஒரு பார்வை) உலகின் ஆதித் தொழில் பரத்தைமை என்ற கூற்று ஒரு புனைவோ என்ற ஐயப்பாடு அவ்வப்போது எனக்கெழுவதுண்டு என்றபோதும், அது உண்மையாக இருக்கக் கூடிய சாத்தியப்பாடுகளின் நீட்சி காரணமாக சற்று ஆற்றிக் கொள்வதுண்டு. பரத்தைமை என்ற தளத்தில் பேசத் துவங்கின், அது ஆண், பெண் என்றவிரு பாலருக்குமான உறவின் வலிமை, இருபாலரும் பரஸ்பரம் மற்றும் தத்தம் மீது கொண்டிருக்கும் மதிப்பு, கற்பு, காமம், ஆணாதிக்கம், பெண்ணியம் என்று பல்வேறுபட்ட விளிம்புகளைக் கடந்தும், விரிந்தும், சென்று கொண்டேதானிருக்கும். இந்தளவுக்கு வலிமையான தளத்தைக் கையிலெடுத்து, அதன் பொருட்டு எழுதிக் குவித்த ஐந்நூறு குறுங்கவிதைகளுள், நூற்றைம்பதைக் கூர்தீட்டி, தன் முதல் கவிதைத் தொகுப்பாக வெளிக் கொண்டு வந்திருக்கும் நண்பர் சரவண கார்த்திகேயனுக்கு முதலில் என் வாழ்த்துகள். 26 வயதி

ஒரு நற்செய்தி

தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் சிறந்த நூல்களுக்கான விருதுகளின் 2009க்கான பட்டியலில் அடியேனின் கன்னி முயற்சியான சந்திரயான் இடம்பெற்றுள்ளது (வகைமை அறிவியல் என நினைக்கிறேன்). வரும் ஜனவரி 16, 2010 அன்று - திருவள்ளுவர் தினம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கவிருக்கும் (பிரம்மாண்ட?) விழாவில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி இப்பரிசினை வழங்குவார் எனத் தெரிகிறது. எழுத்தாளர் சுஜாதா என்ற ஒருவர் இல்லாது போயிருந்தால் இப்படியொரு புத்தகத்தினை எழுத எனக்கோ, பதிப்பிக்க கிழக்குக்கோ, படிக்க வாசகர்களுக்கோ திராணியிருந்திருக்கும் என்று தோன்றவில்லை. புத்தகத்தினை அவருக்குத் தான் சமர்ப்பணம் செய்திருந்தேன்; இப்போது இந்த விருதினையும் அவருக்கே சமர்ப்பிக்கிறேன்.  புத்தகத்தினை எடிட் செய்த பத்ரி சேஷாத்ரிக்கும், விருதுக்கனுப்பி வைத்த பாலு சத்யாவுக்கும் பிரத்யேக அன்புகள். வாழ்த்திய, வாழ்த்தும், வாழ்த்தவிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிக‌ள்! ******* 2009 - விருது குறித்த செய்திகள் : தினமணி.காம் பத்ரி சேஷாத்ரி தெனாலி.காம் ******* முந்தைய ஆண்டுகளுக்கானவை : தமிழக அரசின் பரிசு பெறும் புத

ஸ்டால் எண் : 274

Image
சென்னைப் புத்தகக் காட்சி - 2011யில் எனது பரத்தை கூற்று கவிதைத்தொகுதி கிடைக்கும் நிவேதிதா புத்தகப் பூங்கா ( ஸ்டால் எண் : 274) நிழற்படங்களாக‌ : படங்கள் உதவி : அகநாழிகை பொன்.வாசுதேவன்

தப்பு விகடன் - 2

Image
இந்த‌ வாரமும் ஆ.வி.யில் (12.01.2011) எனது பெயரில் ஒரு ட்வீட் இடம் பெற்றுள்ளது. இம்முறையும் அது என்னுடைய ட்வீட் அல்ல‌; ரீட்வீட்டியது. சாரு கேள்வி - பதில் புகழ் அராத்துவின் (@araathu) ட்வீட்டினை அடியேன் ரீட்வீட் செய்திருந்தேன். அதைத் தான் விகடன் வலைபாயுதேவில் என் பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு வேளை நல்ல வாசகன் அவன் விரும்பும் எழுத்தாளனுக்குச் சமானம் என்று நினைத்து விட்டார்களோ! தகவல் + படம் உதவி : (வழமை போல்) சான் பிரான்சிஸ்கோ ஆனந்த்