Posts

Showing posts from January, 2015

நிகழ மறுக்கும் அற்புதம்

Image
"Being sexy comes from confidence and accepting your body and mind as a woman."  - Shruthi Haasan (in an interview to The Times of India, February 4, 2014) இன்று திகதி ஜனவரி 28. ஷ்ருதி ஹாசனின் பிறந்த நாள். ('ஷ்ருதி'யை 'ஸ்ருதி' என்று தான் எழுதிக் கொண்டிருந்தேன், சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்க்கும் வரை. அவரே குத்திக் காட்டிய பின் திருத்திக் கொண்டு தானே ஆக வேண்டும்!) கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக அவர் எனக்குப் பிடித்தமான நடிகை. ( 3 என்ற ஒரு படம் தவிர்த்து வேறு படங்களில் அவர் தன் நடிப்புத் திறனை அவ்வளவாய் வெளிப்படுத்தியதில்லை என்பதால் இங்கே நடிகை என்ற இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது சற்று நெருடலாகத் தான் இருக்கிறது. ஆனால் இன்றைய தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி வெகுஜனத் திரைப்படங்களின் நடிகைகளோடு ஒப்பிடுகையில் எவ்வகையிலும் குறைவில்லை என்பதால் அதைத் தொடர்கிறேன்) ஷ்ருதியின் வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்தால் எல்லாமே மோதிரைக் கை குட்டுக்கள். ஆறு வயதில் முதல் பாடலே இளையராஜாவிடம் ( தேவர் மகன் - போற்றிப் பாடடி பொண்ணே ...). அப்புறம் யுவதியான பின்னும் முதல் பாடல்

ஹரிதாவும் கீதனும்

Image
ஒன்றரை ஆண்டுகள் முன் நான் முன்பு பணியாற்றிய அலுவலக நண்பர் crowd funding மூலம் அவரது கல்லூரி நண்பர் ஒரு படமெடுத்திருப்பதாகச் சொல்லி அதன் ப்ரிவ்யூவுக்கு அழைப்பு விடுத்தார் (அவரும் பணம் போட்டிருந்தார்). அந்தப் படம் குறையொன்றுமில்லை . அது பற்றிய என் கருத்துக்களை இயக்குநருக்கு (ந‌ண்பரின் மூலம்) தெரியப்படுத்தி இருந்தேன். பிறகு பல  காரணங்களால் படம் தாமதமாகி நான் வேலையும் மாறி விட்டேன். சென்ற அக்டோபரில் படம் வெளியாகி இருக்கிறது. அது இப்போது தான் என் கவனத்துக்கு வந்தது. அப்போது எழுதிய அந்த‌ விமர்சனத்தை இங்கு பகிர்கிறேன். * முதலில் படத்தின் லைன். கிராம‌ங்களின் (குறிப்பாய் விவசாயிகளின்) spending potential-ஐ வெளிக்கொணர முயற்சிக்கும் ஒரு கார்ப்பரேட் இளைஞனின் கதை. ஊடுபாவாய் அவனது பிடிவாத‌, அலட்சிய‌ attitude-ம், அதனால் பாதிப்படையும் அவன் சொந்த வாழ்க்கையும் காட்டப்படுகிறது. இது தான்  குறையொன்றுமில்லை படம் பற்றிய‌ என் புரிதல். படத்தின் மையச்சரடான விஷயம் ஒரு மேலோட்டமான பொருளாதார சங்கதி பற்றியது. ஆனால் இந்த அளவிலான‌ மேலோட்டமான பொருளாதாரம் கூட தமிழில் எனக்குத் தெரிந்து எந்தப் படத்திலும் ச

தமிழ் மின்னிதழ் - ஒரு கடிதம்

தமிழ் மின்னிதழ் குறித்த ஓர் அனுபவ / அறிமுகப் பதிவை என் தளத்தில் எழுத வேண்டும். நேரம் கிட்டியபாடில்லை. இடையே இதழ் குறித்து வந்த ஒரு கடிதத்தை இங்கே பகிர்கிறேன். அஷோக்  கமல் ரசிகர். ட்விட்டரில் எழுதி வருபவர் ( @ashoker_UHKH ). அசோகர் என்ற  பெயரில் தமிழ் மின்னிதழிலும் எழுதி இருக்கிறார். இதழ் குறித்த அவர் எழுதியிருந்த ஒரு நீண்ட விமர்சனக் கடிதம் அவர் அனுமதியுடன் சற்று எடிட் செய்யப்பட்டு இங்கே. அவரது கருத்துக்களுக்கு நன்றி. * டியர் சிஎஸ்கே, வணக்கமும், வாழ்த்துக்களும்! ஒரு இதழ் துவங்க வேண்டும் என்ற எண்ணம் அல்ல, அதை செயல்படுத்துவதுதான் பெரிய சவால் என்பது ஏற்கனவே அரைகுறையாய் முயன்று தோற்றவன் என்ற முறையில் நன்கறிவேன். நீங்கள் சாத்தியம் ஆக்கியதற்கு பாராட்டுக்கள். :-) முழுவதும் படித்துவிட்டு எழுதுவதுதான் சரியாக இருக்கும் என்பதால் இவ்வளவு தாமதமாக இக்கடிதம். இதை விமர்சனக் கடிதம் எனக் கொள்ளாமல் முழுத் தொகுப்புக்கான நீ...ண்ட பின்னூட்டம் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமென்றே விரும்புகிறேன். எனது வழமையை மீறி மிகப் பெரிதாக இதை எழுதுகிறேன். நீளமான கட்டுரைகள் எழுத நீங்கள் சளைத்தவரில்லை என்பதால், படிக்க

தமிழ் சினிமா 2014 : தரவரிசை

மிகச் சிறப்பானது எனச் சிலாகிக்குமளவு சென்ற‌ ஆண்டு ஒரு படம் கூட இல்லை. ஆனால் முக்கியமான விஷயம் பல சுவாரஸ்யமான வித்தியாசமான முயற்சிகள். எந்த நட்சத்திரத்தையும் நம்பாமல் கதையை அல்லது திரைக்கதையை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட படங்கள். அதுவே சென்ற வருடத்தைய தமிழ் சினிமாவின் பிரதான‌ அடையாளம் எனலாம். சிறந்த படங்கள் பூவரசம் பீப்பீ ஜிகர்தண்டா மெட்ராஸ் பண்ணையாரும் பத்மினியும் சதுரங்க வேட்டை மீகாமன் ஜீவா கோலி சோடா முண்டாசுப்பட்டி நல்ல படங்கள் அரிமாநம்பி கோச்சடையான் 3D சரபம் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் மஞ்சப்பை வாயை மூடிப் பேசவும் வல்லினம் கதை திரைக்கதை வசனம் இயக்கம் நாய்கள் ஜாக்கிரதை சுமாரான படங்கள் லிங்கா வேலையில்லாப் பட்டதாரி தெகிடி பிசாசு கத்தி நீ எங்கே என் அன்பே மோசமான படங்கள் காவியத் தலைவன் குக்கூ நான் சிகப்பு மனிதன் பூஜை வீரம் ஜில்லா

சென்னை புத்தகக் காட்சி - 2015

Image
பாரம்பரியம் மிக்க‌ சென்னை புத்தகக் காட்சி நாளை துவங்குகிறது. மாதொருபாகன் மன்னிப்பு என்ற துன்பியல் நிகழ்வு தவிர‌ என்னவோ இம்முறை அத்தனை பரபரப்பு இல்லாதது போல் தோற்றம் - பொதுவாகவும் சரி, என் வரையிலும் கூட! புத்தகக் காட்சி பற்றிய தகவல்கள்: இடம்: YMCA மைதானம், நந்தனம் | நாள்: 09 ஜனவரி 2015 – 21 ஜனவரி 2015 நேரம்: விடுமுறை நாட்களில்: காலை 11:00 - இரவு 9:00 / வேலை நாட்களில்: மதியம் 2:00 - இரவு 9:00 என் புத்தகம் கிடைக்கும் ஸ்டால்களின் விபரங்கள்: சிக்ஸ்த் சென்ஸ் [ஸ்டால் எண்: 343, 344, 411, 412 ] - வெட்கம் விட்டுப் பேசலாம் (NEW) கிழக்கு பதிப்பகம் [ஸ்டால் எண்: 634, 635 ] - குஜராத் 2002 கலவரம் & சந்திரயான் அம்ருதா பதிப்பகம் [ஸ்டால் எண்: 111 ] - கிட்டதட்ட கடவுள் கற்பகம் புத்தகாலயம் [ஸ்டால் எண்: 38, 39 ] - தேவதை புராணம் அகநாழிகை பதிப்பகம்   [ஸ்டால் எண்: 304 ] - பரத்தை கூற்று இந்த நூல்கள் பற்றிய விபரங்களை இங்கே காணலாம்: http://www.writercsk.com/p/blog-page_1.html ஸ்டால் லேஅவுட்டை இங்கே பார்க்கலாம்: http://bapasi.com/wp-content/uploads/2014/01/CBF-2015-Layout.pdf கண்காட்