Posts

Showing posts from October, 2013

துன்பியல் த்ரில்லர்

Image
ஆழம் ‍ - அக்டோபர் 2013 இதழில் Madras Cafe திரைப்படம் குறித்த என் விமர்சனக் கட்டுரை வெளியாகியுள்ளது. ******* ஈழத்தில் பிரச்சனை எனில் தமிழ் நடிகநடிகையர் திரண்டு கறுப்புச்சட்டையணிந்து இராமேஸ்வத்தில் கூடிக்குரல் கொடுப்பது பழக்கம் தான் என்றாலும் தமிழில் ஈழப் போரின் பின்புலத்தை வைத்து எடுக்கப்பட்ட தீவிரமான படங்கள் மிகக்குறைவே. ஆர்கே செல்வமணியின் குற்றப்பத்திரிக்கை , சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட் , மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் , ஏஎம்ஆர் ரமேஷின் குப்பி ஆகியவற்றைச் சொல்லலாம். மெயின்ஸ்ட்ரீம் சினிமா அல்லாமல் லீனா மணிமேகலை செங்கடல் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். சுப்ரமணியம் சிவா தற்போது ஜெயமோகனின் உலோகம் நாவலை படமாக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பிரச்சனையை மேலோட்டமாய்ப் பேசும் தெனாலி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், நந்தா, ஆயிரத்தில் ஒருவன், பில்லா - 2, நீர்ப்பறவை, கடல், மரியான் போன்றவற்றை விடுத்துப் பார்த்தால் இது தான் உருப்படியான பட்டியல். தற்போது இந்தியில் சூஜித் சர்க்கார் Madras Cafe படத்தில் இதைத் தொட்டிருக்கிறார். * பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட க

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் : என் புரிதல்

Image
இன்று ரோஸா வச‌ந்தின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பற்றிய ஒரு பதிவை வாசிக்க நேரிட்டது. அதன் ஒன்லைன் என்னவென்றால் (அவரது வார்த்தைகளிலேயே) "தர்க்கரீதியான அடித்தளம் என்று ஒன்று இல்லவே இல்லாமல், அந்தரத்தில் சீட்டுமாளிகையாக கதை கட்டப்பட்டுள்ளது". அவர் நான் மிக மதிக்கும் சிந்தனையாளர்களுள் ஒருவர் என்பதாலும் படம் எனக்கு வேறு விதமான அனுபவத்தை அளித்தது என்பதாலும் நான் சில விஷயங்களைப் பேச விரும்புகிறேன். அவர் பாயிண்ட்களை உடைத்து சவால் விடும் நோக்கில் அல்லாமல் என் புரிதலை சுயபரிசீலனை செய்து கொள்ளும் பொருட்டு மட்டுமே இதை எழுதுகிறேன் (ஒருவேளை மிஷ்கினே இதிலிருந்து வேறுபடக்கூடும்). படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகி விட்டது என்பதால் படத்தின் கதையை இங்கே பகிர்கிறேன். ஆனால் படம் பார்த்திராதவர்கள் (ஆனால் பார்க்கும் உத்தேசம் இருப்பவர்கள்) தயவு செய்து இதை முன்பே வாசித்து படம் பார்க்கும் அனுபவத்தை, சஸ்பென்ஸை இழக்க வேண்டாம். படம் பார்த்த பின் உங்கள் புரிதலோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். வுல்ஃப் என்பவன் தம்பா என்ற க்ரிமினலிடம் வேலை பார்க்கும் பெய்ட் கில்லர். காசுக்கு கொலை செய்பவன். அவன் நரிகள

தோட்டா எனும் சரண் பட டைட்டில்

Image
சூரியன் பதிப்பக‌த்திலிருந்து வெளியாகி இருக்கும் 'ஆல்தோட்ட பூபதி' ஜெகனின் ( @thoatta ) ட்வீட்களின் தொகுப்பான ட்விட்டர் மொழி நூலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை இது (சில மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்டது): ******* அடிப்படையில் ட்விட்டர் ஒரு சமூக வலைதளம். நட்புக்காக, ரசனைக்காக, பகிரலுக்காக‌, இன்னும் என்ன‌ என்னமோவிற்காக நவீனத் தொழில்நுட்பத்தின் குழந்தைகளான‌ கணிப்பொறி / செல்பேசி ஸ்பரிசம் கொண்ட உலகம் ட்விட்டரில் குழுமி இருக்கிறது. இன்றைய தேதியில் இவர்களின் எண்ணிக்கை 20 கோடி. ட்விட்டர் என்பது விஞ்ஞானம் வரைந்த கலை. அது ஒரு சுவாரஸ்ய சவால்; அலுக்காத விளையாட்டு; ஆபத்தற்ற போதை. 140 கேரக்டர்கள் மட்டுமே அனுமதி. அதற்குள் வாசிப்பவனை ஈர்க்க வேண்டும். முடிந்தால் மயக்க வேண்டும். அடுத்த 140-ஐத் தேடச் செய்ய வேண்டும். தன்னைப் போல் அவனையும் அதில் ஆர்வத்துடன் கரையச் செய்ய வேண்டும். ரசனையின் வழி வாசகனை எழுத்தாளன் ஆகத் தூண்டும் ஊடகம் ட்விட்டர். நுகர்வோன் வியாபாரி ஆகும் விசித்திரம்! திரைப்படம் போல், தொடர்கதை போல், புதுக்கவிதை போல் ட்வீட்களும் வெகுஜன இலக்கிய வடிவமாக உருவாகி வருகிறது. தமிழில்