Posts

Showing posts from June, 2018

என் புத்தகங்கள்: IAQs

Image
அடிக்கடி இல்லை என்றாலும் எப்போதாவது நான் எதிர்கொள்ளும் கேள்விகள் இவை. IAQs - Infrequently Asked Questions! 1) நீங்கள் புத்தகம் ஏதும் எழுதி இருக்கிறீர்களா? 2) உங்கள் புத்தகங்களை எங்கே, எப்படி வாங்கலாம்? 3) உங்கள் நூல்களை ஆன்லைனில் வாங்க முடியுமா? 4)  உங்கள் நூல்கள் மின்னூல்களாகக் கிடைக்கின்றனவா? 5) உங்கள் புத்தக‌ பிடிஎஃப் எங்கே டவுன்லோட் செய்யலாம்? அவ்வப்போது பதில் சொல்லியும் வந்திருக்கிறேன். வாசகர்கள் மற்றும் என் வசதிக்காக இங்கு தொகுத்துக் கொள்ளலாம்.   1) நீங்கள் புத்தகம் ஏதும் எழுதி இருக்கிறீர்களா? துரதிர்ஷ்டவசமாக, ஆம். ஒரு நடிகரிடமோ ஓர் இயக்குநரிடமோ போய் ஏதும் படம் செய்திருக்கிறாயா? என்று யாரும் கேட்பதில்லை. ஆனால் ஓர் எழுத்தாளனிடம் மிக எளிதாக என்ன எழுதியிருக்கிறாய் எனக் கேட்டு விட முடியும். மொத்தம் என் 9 நூல்கள் அச்சில் வந்திருக்கின்றன. ஒரு நாவல், ஒரு சிறுகதைத் தொகுதி, இரண்டு கவிதைத் தொகுதிகள், ஒரு கட்டுரைத் தொகுதி, நான்கு அபுனைவு நூல்கள். உயிர்மை, கிழக்கு, சூரியன், சிக்ஸ்த் சென்ஸ், கற்பகம் புத்தகாலயம், அம்ருதா, அகநாழிகை என வெவ்வேறு பதிப்பகங்கள். இது போக மூன்று மின்னூல்களும்

சஞ்சாயணம்

Image
படம் சுமாருக்கும் மேல். ஆனால் வழக்கம் போல் பாலிவுட் (அல்லது இந்தியா என்றும் வாசிக்கலாம்) கொண்டாடும். அப்படித்தான் முன்னாபாய், 3 இடியட்ஸ், பிகே என எல்லாச் சுமாருக்கு மேல் ரகப் படைப்புகளையும் கொண்டாடினார்கள். ஒருவன் சிறந்தவனாகவே இருக்க வேண்டும் என்பதில்லை, சராசரியாகவும் இருக்கலாம் என்ற கருத்தை அழுந்தச் சொல்லும் போது உலகில் பெரும்பான்மையினராய் இருக்கும் சராசரிகள் (தாம் சராசரி என்று உணர்ந்த சராசரிகள்) தம்மை அவ்விடத்தில் பொருத்திப் பார்த்துப் புளகாங்கிதப்படாமல் இருப்பார்களா! அது தான் சஞ்சுவின் வெற்றி. ராஜ்குமார் ஹிரானி ஃபார்முலா எப்போதும் ஒன்று தான். சராசரி பார்வையாளனின் பலவீனங்களில் தடவிக்கொடுத்து அதை வெற்றியாக அறுவடை செய்வது. உதாரணமாய் அவனது காதல், அன்பு, நட்பு, இரக்கம், குற்றவுணர்வு போன்ற‌ உணர்ச்சிகரமான‌ புள்ளிகளில் கை வைப்பார். அது மருத்துவம், கல்வி, ஆன்மீகம், சினிமா என அவனை தினம் தொட்டுச் செல்லும் துறைகளில் அவன் அன்றாடும் சந்திக்கும் சம்பவங்களைப் புனிதப்படுத்துவதாக அல்லது கேலி செய்வதாக அமைந்திருக்கும். அதை connecting to the audience என்று சொல்லிக் கொள்கிறார்

மீனம்மாவின் அணங்கு

எனது ' அணங்கு ' சிறுகதைக்கு மீனம்மா கயல் ஒரு மாற்று முடிவு எழுதியிருந்தார்: தேர்வறை நோக்கி நடந்தவள் சட்டெனத் திரும்பிச்சென்று, கேலிசெய்து சிரித்தவர்கள் கண்களைப் பார்த்தாள்.. அலட்சியப் புன்னகை அரும்ப சுடிதார் டாப்சினை கழட்டினாள்.. அவள் பெருத்த முலைகள் கனம் தாளாது தாழ்ந்திருந்தன.. அவளுக்கு அங்கு வெட்கங்கள் இல்லை யாரையோ பழிவாங்குகிறோம் என்றுபட்டது.. அது ஒரு வெறி, மருத்துவப் படிப்பின் மீதான வெறி.. தன்னை அலைக்கழிப்பவர்கள் மீதான வெறி.. தன்னை ஆய்வு செய்தவர்களை திரும்பிப் பார்த்தாள் அவர்களிடம் ஒரு குற்றஉணர்ச்சியை கண்டாள், மிக மிக ஆழமான குரலில் எல்லாருக்குமாக ஒன்றைச் சொல்லியபடி சுடிதாரை மீண்டும் அணிந்தாள்., ஒரு தேவதைப் போல் தேர்வறை நோக்கி நடந்தாள். அவள் சொன்னது ஒரு கேள்வி, ஒரு திறப்பு, ''இந்த உடலைப் பற்றி படிக்கும் ஆசையில்தான் நான் நீங்கள் நாம் பரிக்ஷா தேர்வு எழுதவே வந்திருக்கிறோம் அல்லவா?!'' இந்த முடிவு - நடை தவிர‌ - எனக்குப் பிடித்திருந்தது. அணங்கு கதையின் நோக்கமானது நங்கேலியின் வரலாற்றை எடுத்துக் கொண்டு சமகால மீட்டுருவாக்கம் செய்வ‌தாக மட்டும் இருந்திருந்தால் அவர

அணங்கு [சிறுகதை]

Image
தன் கரிய, பெரிய கண்ணைக் கசக்கிக்கொண்டே சிவந்த, சிறுவாயில் கொட்டாவி உதிர்த்தபடி சேர்த்தலை இருப்பூர்தி நிலையத்தில் வலப்பாதம் பதித்தாள் கண்ணகி. கூரையில் தொங்கிக்கொண்டிருந்த மின்னணு கடிகாரம் 07:35 எனச்செம்மையாய்த் துடித்தது. கண்ணகியின் இருதயம் அதைவிட வேகமாய்த்துடித்து ரத்தந்துப்பியது. அவள் அப்பா அழுக்கேறிய வெள்ளை வேட்டியை மடித்துக்கட்டியபடி ரீபாக் என்று ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்ட கருப்புப்பையைத் தூக்கிக்கொண்டு பின்னாலேயே அவசரமாக இறங்கித்தடுமாறினார். அங்கு ரயில் ஒரு நிமிடம்தான் நிற்கும் என்றிருந்தார்கள். கண்ணகி அவர் கையைப்பிடித்து ஆசுவாசப்படுத்தினாள். ஐந்து மணி நேரம் தாமதமாக ரயில் வந்து சேர்ந்திருப்பதைப்பதிவு செய்யப்பட்ட பெண் குரல் மலையாளத்தில் அறிவித்து அசௌகர்யத்துக்கு வருத்தம் மொழிந்தது. கொஞ்சமும் இங்கிதமின்றி அதைச்சட்டை செய்யாமல் ரயில் நகரத்தொடங்கியது. “ஒரு நிமிஷம்னா ஒரே நிமிஷமேதான் நிக்கறான், பாப்பா.” ஆச்சரியமாய் அலுத்துக்கொண்டபடி அப்பா நடந்தார். கண்ணகி புன்னகைத்தாள். நேற்று மாலை நான்கு மணிக்கு மதுரையில் ரயிலேறியது. இன்று பத்து மணிக்கு கண்ணகிக்கு ‘பரிக்ஷ

காலா - மேலும் சில

Image
A) காலா என்ற சொல்லுக்குத் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்! 1) கரிகாலன் என்பதன் சுருக்க விளி 2) ஒரு குலதெய்வப் பெயர் 3) தமிழில் எமன் 4) இந்தியில் கருப்பு 5) தமிழிலும் சமஸ்கிருதத்திலும் காலம். (கடைசி தவிர‌) இவற்றில் எல்லாமே "எது வேணுமோ எடுத்துகோ" என்பது மாதிரி படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன‌ என்பது தான் ஆச்சரியம்! B) 90 ஃபீட்டில் விஷ்ணு பாயிடம் காலா பேசும் போது (தாய் சொல்றது தான்.. என்ற வசனத்துக்கு முன்) மாரி தனுஷ் தெரிந்தார். போலீஸ் ஸ்டேஷனில் காலா ஹரி தாதாவைப் பார்த்ததும் பேசும் போது (ஆவோ ஆவோ.. என்ற வசனத்துக்குப் பின்) பாபா ரஜினி தெரிந்தார். சமுத்திரக்கனி செல்ஃபோனைக் காட்டி எட்டு வருஷமா ஒரே மெசேஜை ஃபார்வார்ட் பண்ணிட்டு இருக்கானுக மச்சான் என்று சொல்லும் - கதைக்குத் தொடர்பற்ற எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் - காட்சியில் கூட - அதைப் பார்த்தும் கொண்டு ஆனால் அதில் பெரிதாய் ஆர்வங்காட்டாதது போன்ற - ரஜினியின் நடிப்பு அபாரம் என்பது தான் ஆச்சரியம். C) மணிரத்னம் பம்பாய் படத்தில் ஒரு முஸ்லிமான நாசரை தீவிர இந்துவாகவும் ஒரு இந்துவான கிட்டியை தீவிர முஸ்லிமாகவும் நடிக்க வைத்திருப்பார். ரஞ்சித்த

ஓர் அறிவுஜீவியின் குழந்தைத்தனங்கள்

சில அறிவுஜீவிகள் கூட ஏன் காவி நிறம் கொள்கிறார்கள்? என தம்பி ஒருவர் கேட்டார். அடிப்படையான விஷயம் வாசிப்பு மட்டுமே ஒருவரைத் தலைகீழாக மாற்றி விடாது. என்ன தான் நாம் வாசிப்பு, சூழல் என நகர்ந்து வந்தாலும் நம் வளர்ப்பு, சூழல் மற்றும் சுற்றத்தின் தாக்கம், சிறுவயது நம்பிக்கைகள், திரும்பத் திரும்ப காட்சி ரூபத்திலோ பேச்சாகவோ முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங்கள் எனச் சில விஷயங்கள் நம் ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. நாம் பிறவி நடுநிலையாளர்கள் அல்ல. அதற்கு நாம் அடிமைப்பெண் எம்ஜிஆர் மாதிரி பிறந்ததிலிருந்தே சிறையில் இருந்திருந்தால் தான் சாத்தியம். நாம் எல்லோருமே ஏதோ ஒரு சார்போடு தான் இருப்போம். இதை ஒரு மாதிரி மரபார்ந்த முன்முடிவு எனலாம். அது சார்ந்த விஷயங்களில் மட்டும் நம்மையறியாமலேயே நம்மை தடுமாறச் செய்யும். அதனால் சிந்தனையைச் சிதறடிக்கும். அதனால் ஒருபக்கச் சார்பெடுக்க வைக்கும். அது தான் இந்த அறிவுஜீவிகளின் காவி நிறச் சார்பில் நிகழ்கிறதென நினைக்கிறேன். நான் மதிக்கும் சில சிந்தனையாளர்கள் எதிர்தரப்பில் இருப்பதை இப்படித் தான் புரிந்து கொள்கிறேன். நம் வாசிப்பும் அனுபவங்களும் தர்க்க புத்தியும் தொடந்து அந

மு.க.நூல் - 3

நெஞ்சுக்கு நீதி – 1 5. என்னுடைய அரசியல் அரிச்சுவடி திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் முதலில் இரண்டாம் படிவப் பரிட்சை எழுதினேன். தேறவில்லை. பிறகு முதல் படிவம். அதிலும் நிராகரித்தார்கள். கிராமத்து ஆசிரியரின் பயிற்சி அப்படி. பள்ளியில் சேராமல் ஊர் போனால் சிரிப்பார்கள். தலைமையாசிரியர் அறைக்குப் போனேன். நடந்தது சொல்லிக்கெஞ்சினேன். அவர் மறுக்க, எதிரே இருந்த தெப்பக்குளத்தில் விழுந்து சாகப் போவதாய்ச் சொன்னேன். அதிர்ந்தார். யோசித்தார். ஏற்கனவே பலரை தெரிந்தும் தெரியாமலும் பலி கொண்ட குளம். என்னை ஐந்தாம் வகுப்பில் எடுத்துக்கொண்டார். கூத்தாடினேன். முதன்மை மதிப்பெண்ணில்தேறினேன். ஐந்தாம் வகுப்பில் பனகல் அரசர் பற்றிய சிறுதுணைப்பாட நூல் உண்டு. அதை அப்படியே மனனம் செய்து சொல்வேன். அதுதான் எனக்கு அரசியல் அரிச்சுவடி. திராவிடர்கள் அரசியல், சமூக இடம்பெற பி தியாகராயர், டிஎம் நாயர், பனகல் அரசர், நடேச முதலியார் 1916ல் தென்னிந்திய நலஉரிமைச்சங்கம் என்ற கட்சி தொடங்கினர். ஜஸ்டில் என்ற ஆங்கில நாளேடு கட்சி சார்பில் வந்து, பின் ஜஸ்டிஸ் கட்சி என்றே பெயரானது. 1917ல் செம்ஸ்ஃபோர்டு, மாண்டேகு பிரபுக்கள் வந்த போது நீதி

கருப்பின் அழகு

Image
காலா சுமார் எனப் பார்த்த முதல் நாளே சொல்லி இருந்தேன். அது எவற்றை ஒட்டி எழுந்தது என்பதைப் பார்ப்போம். 1) காலாவின் பாத்திர வார்ப்பு (பெரும்பாலும்) இயல்பான‌தாக இருந்தது. ரஜினி படம் என்பதை வைத்துப் பார்க்கும் போது இது அரிதினும் அரிய நிகழ்வு. (மனைவியை மீண்டும் சந்திக்கும் இடம் தவிர கபாலி இயல்பாய்க் கட்டமைக்கப்பட்ட‌ கதாபாத்திரம் அல்ல. ஆனால் அதை நம் மக்கள் யதார்த்தமெனக் கொண்டாடினார்கள். அவ்வளவு பஞ்சம்.) நீரில் ஒன்று, நெருப்பில் ஒன்று என்று வரும் அந்த இரு சண்டைக் காட்சிகளையும் காலாவுக்கு இருக்கும் காரணமற்ற பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கையும் கத்தரித்து விட்டால் எந்த ஹீரோயிசமும் இல்லாத‌ சாதாரணன் காலா. இன்னும் சரியாய்ச் சொன்னால் சாதாரணக் குடும்பஸ்தன். அவனது அறிமுகக் காட்சியே சிறுவர்களுடனான ஸ்ட்ரீட் க்ரிக்கெட்டில் க்ளீன் போல்ட் ஆவது தான். (சூப்பர் ஸ்டார் அந்தஸ்து, அரசியல் பிரவேச முடிவு என்றெல்லாம் கமிட்மெண்ட்கள் உள்ள சூழலில் இப்படிக் காட்சி வைக்கவும் ஒப்புக் கொண்டு நடிக்கவும் அசாத்தியத் திமிர் வேண்டும்.) அவன‌து அன்பு, காதல், நட்பு, பிரியம், பாசம் எல்லாமே மிகையற்ற அழகு. அப்படியான பாத்திரத்தை ர

மு.க.நூல் - 2

நெஞ்சுக்கு நீதி – 1 2. பிறந்த ஆண்டு எல்லா மனிதர்களுக்கும் வரலாறு இருக்கிறது. ஆனால் சிலருக்கு மட்டுமே அதை எழுத வாய்க்கிறது. போலவே எல்லோர் வாழ்க்கையும் சமூக மாற்றங்களுக்குக் காரணமாக இருப்பதில்லை. ஆனால் எல்லோருக்கும் அதில் சிறுபங்கேனும் உண்டு. “பெரிய மனிதர்களுக்குத்தான் வாழ்க்கையும் வரலாறும் சொந்தமா? சின்னவர்கட்குக் கிடையாதா?” - இக்கேள்விதான் என் நெஞ்சுக்கு நீதி வழங்கும் தெம்பைத் தந்தது. நாம் பிறந்த நாளில் என் குடும்பம் செல்வச் செழிப்பில் இல்லை; வறுமையிலும் வாடவில்லை. நாடும் அப்படித்தான். சுதந்திரம் பெறவில்லையெனினும் அழிவினை நோக்கி ஓடிக் கொண்டிருக்கவில்லை. ஆருடங்களில் எனக்கு நம்பிக்கையில்லை எனினும் நான் பிறந்த 1924ல் உலகம் பல நல்லது கெட்டதுகளை அனுபவித்தது. ஈவெராவின் வைக்கம் திட்டம் உருவானது. அண்ணா உயர்நிலைப்பள்ளி மாணவன். ஈராண்டாண்டுச் சிறைக்குப் பின் உடல்நிலை காரணமாக காந்தி விடுவிக்கப்பட்டார். காங்கிரஸுக்கு காந்தி அதிகாரப்பூர்வமாகத் தலைமையேற்றார்; பொதுசெயலாளராக நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸின் இன்றைய கொள்கைகட்கு அடித்தளமிட்ட பெல்காம் மாநாடு நடந்தது. சௌரிசௌரா சம்பவம் நடந்த

நீலப்படம்

Image
Blue Planet II - குழந்தைகளுக்காகப் போனது. அவர்களை விட எனக்குப் பிடித்திருந்தது. இது உண்மையில் ஒரு தொலைக்காட்சித் தொடர். ஆவணப்படம். ஏழு பகுதிகள் கொண்டது. பிபிசி எர்த் தயாரிப்பு. அதன் முதலிரு பாகங்களை மட்டும் இங்கே திரையரங்குகளில் பிவிஆர்காரர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். One Ocean மற்றும் The Deep ஆகிய முதலிரு பகுதிகள் மட்டும் இதில் இருக்கிறது. மற்றவை பிற்பாடு தனித் திரைப்படங்களாக வரக்கூடும். One Ocean பகுதியில் வெப்ப மண்டச் சமுத்திரங்களிலிருந்து துருவக் கடல்கள் வரை வெவ்வேறு மீன்கள் அல்லது கடல்வாழ் உயிரினங்களின் பழக்க வழக்கங்கள் குறித்து ஒவ்வொன்றாகச் சொல்கிறார்கள். நமக்கு நன்கு தெரிந்த போத்தல் மூக்கு டால்ஃபின்கள் முதல் நமக்குப் புதிதான பாதி வாழ்வில் ஆணாய் மாறி விடும் பெண் மீன் வரை காட்டுகிறார்கள். உணவு, வேட்டை, கலவி இன்னும் சில வினோதப் பழக்கங்கள் என அவற்றின் வாழ்வு நம்முன் நீலமாய் விரிகிறது. அற்புதமான ஒளிப்பதிவும் ஒரு கதைசொல்லல் போன்ற அமைப்பும் இப்பகுதியை சுவாரஸ்யம் ஆக்குகிறது. நீரை விட்டு வெளியே துள்ளி எழுந்து பறக்கும் பறவையைக் கவ்வி உண்ணும் மீன் பற்றிய பகுதியில் ஒரு பறவைக்குஞ்சு

நெஞ்சுக்கு நீதி (Abridged)

Image
#HBDKalaignar95 இன்று கலைஞருக்கு 95 அகவை பூர்த்தியாகிறது. உடல் நலத்தை முன்னிட்டு அரசியல் களத்தில் செயல்பட முடியாத ஓய்வில் இருக்கிறார். இந்தத் தற்காலிக முடக்கத்திலிருந்து மீண்டு வருவார் என என் போல் நம்பும் கோடிப் பேர் உண்டு. 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியின் மீதான கடும் அதிருப்தியையும் தாண்டி திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாததற்கு பல விளக்கங்கள் இருக்கலாம். இன்றைய தமிழக இளைஞர்கள் மத்தியில் சமீபத்தில் மறைந்த ஜெயலலிதா பற்றி இருக்கும் நல்லபிப்பிராயம் கூட கலைஞர் பற்றி இல்லை என்கிற கசப்பான உண்மையும் அதிலொன்று. அதற்குக் காரணமாய் விமர்சனத்துக்குரிய சில பிழைகள் கலைஞர் பக்கம் உண்டு என்ற போதிலும் அதை விட அவரது நெடிய அரசியல் வரலாற்றைப் புதியவர்கள் அதிகம் அறிந்து கொள்ளாததே பிரதானப் பிரச்சனை என நினைக்கிறேன். இந்தியாவில் இதுகாறும் எழுதப்பட்டதிலேயே ஆக நீளமான சுயசரிதை கலைஞர் மு. கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதியாகவே இருக்கும். ஆறு பாகங்களில் சுமார் 4,000 பக்கங்களில் நீளும் இந்நூற்தொகை 2006 வரையிலான கலைஞரின் வாழ்க்கையைப் பேசுகிறது. அதற்குப் பிறகு நடந்தவைகளை ஏழாம் பாகமாக அவர் எழுதக்கூடும்.