ஒரு நன்னாள்
கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 9, 2016) அன்று 'ஞயம் பட வரை' கட்டுரைப் போட்டியில் வென்றதற்கான முதல் பரிசினை புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் அவர்களிடமிருந்து சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடந்த நிகழ்வில் பெற்றுக் கொண்டேன். பரிசளிப்போடு தமிழ் குறித்த ஒரு கருத்தரங்காகவும் இவ்விழா நடந்தது. (என் முதல் கவிதை நூலான 'பரத்தை கூற்று' இங்கே தான் வெளியானது. ஐந்தரை ஆண்டுகள் கழித்து மறுபடி அங்கே.) "தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியில் தமிழ் மொழியின் தற்போதைய நிலை, அடைய வேண்டிய இலக்குகள்" என்ற தலைப்பில் மாலன் சிறப்புரை ஆற்றினார். தமிழ் இணையக்கல்வி கழக உதவி இயக்குனர் தமிழ்ப் பரிதி, நாடகவியலாளர் ஆர். அரவிந்தன், The Wagon இதழ் பதிப்பாசிரியர் சித்தன் பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர். போட்டியையும் நிகழ்வையும் நடத்திய பிரதிலிபி மற்றும் அகம் இதழ் குழுவினருக்கு வாழ்த்துக்கள். தகவல் தொடர்பை ஒருங்கிணைத்த திலீபனுக்கு நன்றி. என் வேண்டுகோளுக்கிணங்க என் கட்டுரையை வாசித்து மதிப்பீடு செய்த அனைவருக்கும் என் அன்பினைப் பதிகிறேன். ஆரம்பத்தில் இப்போட்டியில் கலந்து கொள்வது பற்றி எனக்குத் தயக்கங்க