ஐந்து படங்கள் - சிறுவிமர்சனம்
******* அசல் படம் பரவாயில்லை. அஜீத் கம்பீரம்; பாவ்னா அழகு. வசனங்களில் மீண்டும் பழைய சரண் மீண்டிருக்கிறார். பிரபு, யூகி சேது, சுரேஷ், சமீரா ரெட்டி பரிதாபம். செல்வேந்திரன் இப்படத்திற்கு "டொட்டடொய்ங்ங்...!" என்று ஒன்றை வார்த்தை விமர்சனம் எழுதியிருந்ததை மிக ரசித்தேன் (படத்தில் வரும் ஒரு பாடலின் துவக்கம்). அந்த சத்தம் காதுகளுக்குக்கு பிடித்தமானதாய் இருப்பதைப் போல் இப்படமும் கண்களுக்கு பிடித்தமானதாய் இருக்கும் (நல்ல விஷுவல்ஸ் + ஸ்டைலிஷ் மேக்கிங்); மற்றபடி அதைப் போலவே படத்திலும் உள்ளே அர்த்தம் (அதாவது திரைக்கதை) என்று ஒன்றும் பெரிதாய் இல்லை என்பதாக சொல்ல வருகிறார் (என நினைக்கிறேன்). ******* ராம் கோபால் வர்மாவின் Rann (ரணபூமி என்பதாக அர்த்தம் வருகிறது) படம் நன்றாக இருக்கிறது. தொலைக்காட்சி ஊடகங்கள் பரபரப்பான செய்திகளைத் தந்து அதிக டி.ஆர்.பி. ரேட்டிங் பெறுவதற்க்காக செய்யும் கேப்மாரித் தனங்களைப் படம் புட்டுப் புட்டு வைக்கிறது. திருப்பங்களோ, முடிச்சுகளோ இல்லாத சாதாரண ஆனால் நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட திரைக்கதை. RGV படங்களின் ஒளிப்பதிவு தான் பொதுவாய் மிகவும் பேசப்படும் (Of course, i