Posts

Showing posts from October, 2016

ஷ்ருதி ஹாசன் says "Bitch Please!"

Image
ஷ்ருதி ஹாசன் ஒரு 147 விநாடி வீடியோவை எழுதிப் பேசி நடித்திருக்கிறார் (இயக்கம் யார்?). அதன் பெயர் Be The Bitch . ஆங்கிலத்தில் 'Bitch' என்ற சொல் பெண்களை நோக்கிய வசைச் சொல்லாகக் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது (உத்தேசமாய் 15ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து என்கிறார்கள்). இச்சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு பெட்டை நாய் என்பது தான். (அதுவே வசை தான் என்பது வேறு விஷயம்.) ஆனால் அந்த நேரடிப் பொருள் தாண்டி அதன் பயன்பாடு வேறு மாதிரியானது. தமக்குப் பிடிக்காத பெண்களை இழிவு செய்யும் நோக்கில் திமிர் பிடித்தவள் என்ற பொருளில் அச்சொல்லைப் பயன்படுத்துவது வழக்கம். சில நேரம் அதீத காம உணர்ச்சி கொண்ட, ஒழுக்கம் தவறிய பெண் என்ற பொருளிலும் பிரயோகிப்பர். சமீப காலத்தில் இதன் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கீழே க்ராஃபில் காணலாம். இப்படியான பயன்பாட்டைப் பெண்ணியவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருவதும், ஒரு கட்டத்தில் அச்சொல் தங்களை இழிவு செய்யவில்லை என்று சொல்வதும் நடந்திருக்கிறது. ஜோ ஃப்ரீமன் என்ற அமெரிக்கப் பெண்ணியவாதி The BITCH Manifesto என்ற கட்டுரை ஒன்றை 1968ல் எழுதி இருக்கிறார். அதில் Bitch என

கருப்பு மாளிகை [சிறுகதை]

Image
நள்ளிரவின் பூரணை ஆக்ராவின் மீது வெண்ணமுதினைப் பொழிந்து கொண்டிருந்தது. முதுமையும் குளிரும் யமுனை நதியின் மீது துடுப்புப்படகேறியிருந்த ஷாஜஹானை நடுக்கியது. அதை உணர்ந்தாற்போல் ஜஹனாரா பேகம் அவர் உள்ளங்கையைப் பற்றி அழுத்தினாள். ஷாஜஹான் திரும்பி தாடியினுள்ளே வாஞ்சையுடன் புன்னகைத்தார். “ரொம்பக் குளிர்கிறதா, அப்பா?” “உன் அம்மாவுக்காக இதைக் கூட பொறுத்துக் கொள்ள மாட்டேனா!” ஜஹனாரா மேலும் அழுத்தமாய் அவர் கையைப் பற்றிக் கொண்டாள். உண்மையில் அம்மாவுக்காக இந்தக் குளிரை மட்டுமா எதிர்த்துக் கொண்டிருக்கிறார், அதை விட ஆபத்தான வேலையில் உயிரைப் பணயம் வைத்தல்லவா இறங்கி இருக்கிறார்! அதுவும் முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மரித்துப்போய் விட்ட ஒருத்திக்காக! அம்மா மும்தாஜ் தன் பதினாலாவது குழந்தையைப் பெற்றுப் போட்டு விட்டு இறந்த போது முதல் மகளான ஜஹனாராவுக்கு பதினேழு வயது. புனித ரமலான் மாதமது. சிசுவுக்கு ஆபத்து நேருமெனில் கர்ப்பவதி நோன்பிருக்க வேண்டியதில்லை என்பதை மார்க்கம் சுட்டி இருந்தாலும் மும்தாஜ் பிடிவாதமாய்த் தொடர்ந்து நோன்பிருந்தாள். ஏற்கனவே சோகையான பூஞ்சை உட லை விரதத்தின் பாரமும

PARCHED: உலர் பெண்டிர்

Image
Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான் PARCHED படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள், க