Posts

Showing posts from October, 2010

எந்திரன் கதை என்னுடையது!

எந்திரன் படத்தின் ஆராதக்கதை மற்றும் காட்சியமைப்புகள் தன்னுடையது என இரண்டு எழுத்தாளர்கள் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் செய்திருக்கின்றனர். கதைத்திருட்டு என்பது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மிக சகஜமான ஒன்று தான் (கமல்ஹாசனின் தசாவதாரம் படமே அப்படித்தான் என்கிறார்கள்). சினிமாக் கதைகளைப் பதிவு செய்யும் இடத்திலேயே இதை வேவு பார்த்து தேவையானவர்களுக்கு சுடச்சுட சேர்ப்பித்து விடுகிறார்கள் எனப் பிரபல எழுத்தாளர் ஒருவர் சொல்லக் கேள்வியுற்றேன். ஆரூர் தமிழ்நாடன் என்பவர் அமுதா தமிழ்நாடன் என்ற பெயரில் உதயம் (ஏப்ரல் 1996) இதழில் எழுதிய‌ ஜூகிபா.. என்ற சிறுகதையையும், பிரபல எழுத்தாளர் ஆர்னிகா நாசர்  மாலைமதி (ஜூலை 13, 1995) இதழில் எழுதிய ரோபோட் தொழிற்சாலை நாவலையும் முன்வைத்து எந்திரன் மேல் இந்தக் கதைத்திருட்டுப் புகாரினை அளித்திருக்கிறார்கள். இதில் தமிழ்நாடனின்  ஜூகிபா.. சிறுகதையை இன்று தான் வலையில் ( 1 , 2 , 3 , 4 ) வாசித்தேன். நாசரின் ரோபோட் தொழிற்சாலை நாவலை அது வெளியான போதே படித்திருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் - ஆம். இவை இரண்டின் வலுவான பாதிப்பு நிச்சயம் எந்திரனில் இருப்பதை மறுக்

பரத்தை கூற்று : அதி பிரதாபன்

பரத்தை கூற்று பற்றி பதிவர் அதி பிரதாபன் ( ஏதோ.com ) எழுதிய‌ BUZZகள் இங்கே: ******* http://www.google.com/buzz/pbeski/aAeMabqQrEG/பரத-த-க-ற-ற-பரத-த பரத்தை கூற்று பரத்தை கூற்று புத்தகத்தின் முதன்மையில், புத்தக ஆசிரியர் எழுதிய பூர்வ பீடிகை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மேலும் அது முடிகையில், இக்கவிதைகள் “Of the Prostitutes, By the Prostitutes, For the Prostitutes” என்ற போதிலும் இவை யாவும் யான் கண்டு கேட்டு கற்றுயிர்த்தவையின் ஞாபகச்சில்லுகளே. மற்றபடி, வேசியைப் பற்றி எழுத உனக்கென்ன தகுதி இருக்கிறது, உனக்கு எப்படி தெரியும் இதெல்லாம், நீ போயிருக்கிறாயா ஒருத்தியிடமாவது, குறந்த பட்சம் சாவித்துவாரம் வழியாகவேனும் பார்த்திருக்கிறாயா போன்ற அறிவுஜீவிக் கேள்விகளையெல்லாம் எளிமையான ஒரு புன்னைகையின் துணையோடு கடந்துபோக உத்தேசித்திருக்கிறேன் என்றிருக்கிறது. இதுவும் பிடித்திருக்கிறது. பின்பு உள்ளே உள்ள பாக்களில் (65), என் போலொருத்தியிடம் போகாமல் நிச்சயம் எழுதியிருக்க முடியாது வாத்ஸாயனன் - காமசூத்திரத்தை என்றிருப்பதுவும் பிடித்திருக்கிறது. ******* http://www.google.com/

சாருவின் தளத்தில் நிழற்படம்

Image
பரத்தை கூற்று புத்த‌க வெளியீட்டு நிகழ்வின் நிழற்படமொன்றினை சாரு நிவேதிதா தன் வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் - அவருக்கு ப்ரியம் தோய்ந்த‌ நன்றிகள்! ******* http://charuonline.com/blog/?p=1112 *******

பரத்தை கூற்று : சம்பங்கி மனோரஞ்சிதம்

எனது பரத்தை கூற்று கவிதைத்தொகுப்பு தொடர்பாய் சம்பங்கி மனோரஞ்சிதம் அவர்கள் எழுதிய மின்னஞ்சல் அவரது அனுமதியுடன் இங்கே பதிவிடப்படுகிறது: ******* மதிப்பிற்குரிய எழுத்தாளர் சரவணகார்த்திகேயனுக்கு, உங்கள் புத்தகம் டிஸ்கவரி புத்தக கடையில் வெளியாகி கொண்டிருக்கும் போது, அந்த புத்தகம் உடனே வேண்டும் என்று வேடியப்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டு இருந்தேன். அகநாழிகையில் திரு.வாசுதேவன், திரு.நேசமித்திரன், திரு.நரசிம் என்று பலரும் ஆவலை கிளப்பிக் கொண்டு இருந்தார்கள். ஒரு புத்தகம் பேசுபொருளால் சிறக்கும், சொல்பவர்களின் மொழியால் சிறக்கும். எது ஒரு புத்தகத்தை காலத்தின் கையில் கொடுக்கும் என்று சில சமயம் சொல்லி விட முடியாது. உங்கள் தொகுப்பு முன்னுரையால் சிறக்கிறது. சொல்ல வந்த சென்சிட்டிவ் ஆன விஷயத்தை உங்கள் முன்மொழிகள் தாங்கி நிற்கிறது. வேசிகளும், அலிகளும் இறைவனின் எழுத்து பிழை. வேசிகளை வேசிகளின் பால் நின்று புரிந்து கொள்வதே கடினம். அதை பாட வேண்டும் என்று தோன்றிய நீங்கள் அபூர்வமானவர் தான். சில பதிவுகள் சம காலத்தை பேசுவதால் சிறக்கும். சில பதிவுகள் காலத்தை உடைப்பதால் பேசும். எந்த நாளும் தீரா ர

பரத்தை கூற்று : லக்ஷ்மி சாஹம்பரி

லக்ஷ்மி சாஹம்பரி என் மிகுபிரியத்திற்குரிய கவிஞ‌ர்களுள் ஒருவர். காலச்சுவடு , வார்த்தை இதழ்களில் அவரது கவிதைகள் பிரசுரம் கண்டிருக்கின்றன. நிலாரசிகன் நிலா விருதுகள் 2008 ல் சிறந்த புதுமுக கவிஞராக லக்ஷ்மியையும் குறிப்பிட்டிருந்தார். அதே போல் எனது படித்தது / பிடித்தது தொடரிலும் அவரது கவிதை இடம்பெற்றிருக்கிறது. தற்போது, நிறைய இடைவெளி விட்டு எழுதுகிறார். எந்த அளவுக்கு எனில், கடைசியாய் ஒரு கவிதையை சென்ற வாரத்தில் எழுதியிருக்கிறார்; அதற்கு முந்தையது சென்ற வருடத்தில்! அவரது அந்த கடைசிக்கவிதை : விடாது பொழியும் / மழை விட்டுச் செல்லக்கூடும் / வானவில்லை / சிலநேரங்களில் / கவிதையையும் . தற்போது அவர் வசிக்கும் பிரதேசத்தில் வருடமொருமுறை தான் விடாது மழை பொழிகிறது போலும். பரத்தை கூற்று படித்து விட்டு அவர் எழுதிய கடிதம் அவரது அனுமதியுடன் இங்கே: ******* அன்பின் CSK , நெடுநாட்களுக்குப்பிறகு , நல்லதொரு வாசிப்பை தந்தது உங்கள் குழந்தை !! வாய்ப்புள்ள களத்தினை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.உங்களின் சில சிந்தனைகள் பிரம்மிக்க வைக்கின்றன - உளமார பாராட்டலாம் !! சில கருத்துக்களை எனக்குச் சொல்லத் தோன்றுகி

பரத்தை கூற்று : சில போஸ்டர்கள்

பரத்தை கூற்று புத்தக வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழை சில நட்புப் பதிவர்கள் தம் வலைப்பதிவுகளில் போஸ்டர் அடித்திருந்தனர். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும். இட்லிவடை - http://idlyvadai.blogspot.com/2010/10/blog-post_14.html விஜய் மகேந்திரன் - http://vijaymahendran.blogspot.com/2010/10/blog-post_13.html யுவகிருஷ்ணா - http://www.luckylookonline.com/2010/10/blog-post_14.html வல்லமை.காம் - http://www.vallamai.com/?p=1093 வல்லமை வலைப்பூ - http://vallamaii.blogspot.com/2010/10/blog-post_13.html இதில் இட்லிவடை யில் மட்டும் என் வேண்டுகோளுக்கிண‌ங்க பதிவிடப்பட்டது. ******* யுவகிருஷ்ணா தன் பங்குக்கு ஒரு சுனாமி அழைப்பையும் விடுத்திருந்தார்: எழுதியவர் யுவகிருஷ்ணா at Thursday, October 14, 2010 பரத்தை கூற்று - அனைவரும் வருக! நண்பரும், படைப்பாளியுமான எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் இப்போது கவிஞராகவும் பீறிட்டுக் கிளம்பியிருக்கிறார். அவரது இரண்டாவது நூல்/முதலாவது கவிதைத் தொகுப்பு 'பரத்தை கூற்று' எதிர்வரும் சனிக்கிழமை (16.10.2010) அன்று மாலை 5 மணியளவில் வெளியிடப்படுகிறது.

பரத்தை கூற்று :‍ கிருஷ்ண பிரபு - 2

Image
பரத்தை கூற்று வெளியீடு பற்றி பதிவர் கிருஷ்ண பிரபு வின் பதிவு இது: ******* http://thittivaasal.blogspot.com/2010/10/blog-post_19.html ******* Tuesday, October 19, 2010 Posted by கிருஷ்ண பிரபு at 2:09 AM அகநாழிகை புத்தக வெளியீடு விழா தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாவகே சாரு நிவேதிதா வந்திருந்தார். அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே CSK வந்துவிட்டார். எப்படி இவ்வளவு துல்லியமாக சொல்கிறேன் என்றால் CSK வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே நான் அங்கு இருந்தேன். ஞாயிறன்று முரளி வருவதாகச் சொல்லி இருந்தான். அவனுக்கான புத்தகம் வாங்கவே கொஞ்சம் சீக்கிரம் சென்றிருந்தேன். அதுவும் ஒரு வகையில் நல்லதாகவே அமைந்தது. புதுக்கவிதை எழுதும் 'சா முத்துவேல், யாத்ரா, வேல்கண்ணன், பெஸ்கி' என்று பல நண்பர்களையும் நீண்ட நாள் கழித்து பார்க்கக் கிடைத்தது. சா முத்துவேலுக்கு இளமை திரும்பியிருந்தது. என்னுடைய பொறாமையை மறைக்காமல் அவரிடம் தெரியப்படுத்தினேன். குறித்த நேரத்தை விட கொஞ்சம் தாமதமாக விழா தொடங்கியது. சாரு பேச ஆரம்பித்தார். 'பரத்தை கூற்று' - புத்தகத்தை முதலில் சிறுகதைத் தொ

பரத்தை கூற்று : விழா நிழற்படங்கள் - 2

Image
நன்றி : வினோத் (எ) முத்துராமன் நடராஜன்

பரத்தை கூற்று : விழா நிழற்படங்கள் - 1

Image
நன்றி: அகநாழிகை பொன்.வாசுதேவன்

பரத்தை கூற்று : கேபிள் சங்கர்

பரத்தை கூற்று வெளியீடு பற்றி பதிவர் கேபிள் சங்கரின் பதிவு இது: ******* http://cablesankar.blogspot.com/2010/10/181010.html ******* Oct 18, 2010 கேபிள் சங்கர் கொத்து பரோட்டா-18/10/10 நேற்று அகநாழிகை பதிப்பகத்தின் புத்தக வெளியீடு நடந்தது. காற்றில்லாம புழுங்கி தள்ளியது. சாருதான் வெளியிட்டார். வழக்கமான கவர்சியான சாருவாக இல்லாமல் மொட்டையடித்துக் கொண்டு வந்திருந்தார். அடையாளம் காண சட்டென முடியவில்லை. ஆனால் அவர் பேச்சில் அதே சுவாரஸ்யம். முக்கியமாய் அவர் அந்த கவிதை புத்தகத்தை பற்றி பேசாதது இண்ட்ரஸ்டிங். இன்னொரு முக்கிய விஷயம் சாரு கொஞ்ச வருஷத்துக்கு மேல் ப்ராஸ்டிடியூட்டாக இருந்தாராம். அவரே சொன்னதாக சிலர் சொன்னார்கள் உண்மையா சாரு..? என்று கேட்க வேண்டும.

பரத்தை கூற்று : கார்த்திக்

பரத்தை கூற்று வெளியீடு பற்றி நண்பர் கார்த்திக் கின் பதிவு இது: ******* http://chummaaorublog.wordpress.com/2010/10/17/பரத்தை-கூற்று-–-புத்தக-வெ/ ******* Posted on October 17, 2010 at 11:42 am by Kaarthik Arul பரத்தை கூற்று – புத்தக வெளியீட்டு நிகழ்வு சரவண கார்த்திகேயன் (CSK) எனக்கு 2008-ல் ஆர்க்குட் மூலம் அறிமுகமானார். அறிமுகம் செய்தவர் திரு. சுஜாதா. விந்தையாக உள்ளதா? ஆம் சுஜாதாவின் முதலாம் ஆண்டு அஞ்சலிக்காக ஆர்க்குட் சுஜாதா கம்யூனிட்டியில் ஒரு பதிவிட்டேன். அதில் CSK-வின் பதிவும் இருந்தது. அவர்தான் சுஜாதா Community Owner. உடனே அவரது Profile-ஐப் பார்த்தேன். அதிலிருந்த அவரது வலைத்தள முகவரியைச் சொடுக்கி சில பதிவுகளை வாசித்தேன். மிகவும் ரசித்தேன், வியந்தேன். சுஜாதாவின் எழுத்துகள் போல இருந்ததே காரணம். உடனே அவருக்கு Friend Request கொடுத்தேன். அவரும் அதை accept செய்து நாங்கள் chat செய்தோம். அவர் மனைவி எங்கள் குடும்ப நண்பரின் மகள் மற்றும் என் சிறு வயது தோழி என்று தற்செயலாக தெரிய வந்தது. அதனால் அவருடன் மேலும் நெருக்கம் ஏற்பட்டது. அவர் வலைப்பூவை தொடர்ந்து வாசித்தேன். அவருடைய சில

பரத்தை கூற்று : அதிஷா

பரத்தை கூற்று வெளியீடு பற்றி பத்திரிக்கையாளர் அதிஷா வின் பதிவு இது: ******* http://www.athishaonline.com/2010/10/blog-post_18.html ******* at Monday, October 18, 2010 சொந்த செலவில் சூனியம் - ஏ சாரு ஸ்டோரி இவ்வளவு சீக்கிரமே அவன் எந்த நிகழ்ச்சிக்கும் சென்றதில்லை. அன்றைய தினம் விஜயதசமியாகையால் அலுவலகம் விடுமுறை. குமாஸ்தாயிய மனநிலையின் படி விடுமுறை நாளில் வெளியே சுற்றி நேரத்தை வீணடிக்காமல் மனைவி மக்களோடு செலவில்லாமல் டிவி புதுப்படம் மானாட மயிலாட பார்த்து சுகிப்பவன். இருந்தாலும் இது அதிகம் சந்தித்திராத இணைய நட்புக்காக..இலக்கியத்திற்காக சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டியதாயிருக்கிறது. ஐந்து மணி நிகழ்ச்சிக்கு நான்கு மணிக்கே தயாராகிவிட்டிருந்தான். பெட்ரோல் போட்டு காற்றுப்பிடித்து போகும் வழியில் புகைவிட்டு டிஸ்கவரிபுக் பேலஸை அடைகையிலே நேரம் 4.55. கொடுமை என்னவென்றால் அவனுக்கு முன்பாகவே , பார்வையாளர்கள் வருகைக்கு முன்பாகவே இலக்கிய சூறாவளிகள் வருவதற்கு முன்பாகவே விழாவின் சிறப்பு விருந்தினரான சாருநிவேதிதா வந்துவிட்டிருந்தார். சமகால இலக்கிய பரப்பில் இப்படிப்பட்ட எழுத்தாளர்களும் இருப்

பரத்தை கூற்று : ஜாக்கி சேகர்

பரத்தை கூற்று புத்தக வெளியீட்டு நிகழ்வு பற்றி ஜாக்கி சேகர் அவர்களின் பதிவு: ******* http://jackiesekar.blogspot.com/2010/10/1817102010.html ******* Sunday, October 17, 2010 Posted by ஜாக்கி சேகர் at 8:34 AM மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/17•10•2010) ஆல்பம் நேற்று அகநாழிகை பதிப்பகத்தின் சென்னையில் பரத்தை கூற்று கவிதை புத்தக வெளியிட்டு விழா, கே கே நகர் டிஸ்கவரி புக் பேலசில் நடந்தது... நல்ல கூட்டம்.நான் ஆயுதங்களை எல்லாம் கழுவி பொட்டு வைத்து, படையல் போட்டு கிளம்பி செல்ல நேரமாகிவிட்டது... எழுத்தாளர் சாரு பேசிக்கொண்டு இருந்தார்...அந்த சிறிய ஹாலில் 1000 வாட்ஸ் லைட் போட்டு ஒரு வீடியோகிராபர் நிகழ்வை டேப்பில் திண்னகொடுத்துக்கொண்டு இருந்தார்... அதனால் அத்தனை பேரின் கபாலங்களிலும் வியர்வை வழிந்து ஓடிக்கொண்டு இருந்தது...சாரு அந்த கவிதை புத்தகத்தில் இருக்கும் ஒரு கவிதையை வாசித்தார்... “விரல் தொடுகிறாய் இதழ் தொடுகிறாய் இடை தொடுகிறாய் முலை தொடுகிறாய் பிருஷ்டம் தொடுகிறாய் யோனி தொடுகிறாய் எவனும் மனசு தொட்டதில்லை” ... அதன் பின் அதே புத்தக தொகுப்பில் ஒரு கவிதையை வாசிக்க

பரத்தை கூற்று : வருண்

பரத்தை கூற்று பற்றி பதிவர் வருண் அவர்களின் விமர்சனம் இது : ******* http://timeforsomelove.blogspot.com/2010/10/blog-post_17.html ******* Sunday 17 October 2010 Posted by வருண் at 8:03 AM “பரத்தைக்கூற்று” -ஆம்பளைகளின் அசிங்கக்கூத்து! பரத்தைக்கூற்று பற்றி சில அசிங்கக்கவிதைகளுடன் மாதவராஜின் விமர்சனம் படிக்கும்போது எரிச்சலும் கோபமும் அருவருப்பும்தான் வந்தது. கவிதைகளை ரசிக்கவோ அதைப்படித்து உருகவோ முடியவில்லை! ஒரு பின்னூட்டம் போட்டேன். இன்னும் திருப்தியில்லை! “பரத்தைக்கூற்று” என்றதும் அதைப்பற்றி எழுதியது லீனா மணிமேகலையா? இல்லை ஒரு தமிழச்சியா? இல்லை இன்னொரு தமிழ்ப் பெண்ணா? இல்லைனா ண்களால் வஞ்சிக்கப் பட்ட இன்னொரு பரத்தையா கண்ணீர் வடிக்கிறாள்? நு பார்த்தால் ஏமாற்றம்தான்! “பரத்தைக்கூற்று” என்று பரத்தைகளின் உணர்வுகளை உள்ளப்பூர்வமாக உணர்ந்து அவர்களுக்கு கண்ணீர் வடிப்பவன் போல கவிதை எழுதுபவர்களும் பரத்தையை உருவாக்கி, பரத்தையிடம் படுத்து எந்திரிக்கும், பரத்தையை கூட்டிக்கொடுக்கும் அதே ஆண்கள்தான். “பிரசவ வலி” பத்தி தாய்தான் சொல்லனும்! “பீரியேட்ஸ்” வலி பத்தி பெண்தான் பேசனும்! “பரத்தை

பரத்தை கூற்று : விழா நன்றியுரை

பரத்தை கூற்று – புத்தக வெளியீட்டு நிகழ்வு நன்றியுரை : சி.சரவணகார்த்திகேயன் வணக்கம். உங்கள் முன் உரையாற்ற இவ்விடம் உட்கார்ந்து கொண்டிருக்கும் இக்கணம் என் வாழ்க்கையின் மகத்தான தருணங்களில் ஒன்று. முதல் புணர்ச்சியின் உச்சம் போல், முதல் குழந்தையின் ஸ்பரிசம் போல், முதல் மரணத்தின் வீச்சம் போல் இந்நிகழ்வு என்னைப் பொறுத்தவரை என்றும் மறக்கவே இயலாத பிரத்யேக‌ வினாடிகளின் தொகுப்பாய் வேகமாய்த் துடித்தடிங்கிக் கொண்டிருக்கிறது. அந்த மாய யதார்த்த மயக்கத்தினூடே இந்நன்றியுரையினைத் தொடங்குகிறேன். பெயர் நன்றியுரை என்றிருப்பினும் அது சும்மா பெயருக்கு. உண்மையில் இவ்வுரையின் வரையெல்லையை கொஞ்சம் அகண்டதாக அமைத்துக் கொண்டிருக்கிறேன். அதன் காரணமாய், வழக்கமான‌ நன்றியுரைகளின் அளவினைக் காட்டிலும் சற்றே நீளவிருக்கும் இதனைப் பொறுத்தருள்க‌. முதலில் பரத்தை கூற்று என்ற இக்கவிதைத்தொகுப்பைப் பற்றிய பொதுவான சில சங்கதிகளை அவற்றின் விஷ‌ய சுவாரசியம் கருதிப் பகிர விரும்புகிறேன். அப்புறம், இந்நூலைக் கட்ட உதவிய‌ ஆஞ்சனேயர் முதல் அணிற்பிள்ளை வரை அனைவரையும் இங்கே அடையாளம் காட்டி செய்ந்நன்றியறிய விளைகிறேன். ஐந்தாண்டுகள்

பரத்தை கூற்று : மாதவராஜ்

தோழர் மாதவராஜ் அவர்களின் பரத்தை கூற்று பற்றிய விமர்சனம் இது: http://mathavaraj.blogspot.com/2010/10/blog-post_16.html ******* Oct 16, 2010 எழுதியவர் மாதவராஜ் எழுதப்பட்டது 5:23 PM ‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’ “எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது நம் பதிவர் சி.சரவணக்கார்த்திகேயனின் ‘பரத்தை கூற்று’. எவற்றையெல்லாம் இங்கே பாடலுடன் கவிஞர் வரிசைப்படுத்திப் பார்க்கத் துணிந்திருக்கிறார் என்பதில் இக்கவிதைத் தொகுப்பின் குரலையும், சுருதியையும் புரிந்திட முடியும். அதுவொன்றும் சட்டென்று யாரும் பிரக்ஞையோடு கடந்திடக்கூடிய புள்ளியல்ல. மயங்கி, முயங்கி, மருகி, உருகி ரசித்துக் கிடந்த ஒரு பாடலை சற்றே நினைவுபடுத்திவிட்டு, இந்த வரிகளை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்களேன். நாம் முணுமுணுத்த வரிகளை எத்தனை பேர் முணுமுணுத்திருப்பர்கள். நாம் கரைந்த இசையில் எத்தனை பேர் மூழ்கி இருப்பார்கள். இப்போது புரிகிறதா, இக்கவிஞர் எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுகிறார், எங்கே நம்மை கடத

பரத்தை கூற்று : சாரு அழைக்கிறார்

பர‌த்தை கூற்று புத்தக வெளியீட்டு நிகழ்வு பற்றிய சாரு நிவேதிதா வின் பதிவு இது: ******* http://charuonline.com/blog/?p=1082 ******* October 12th, 2010 புத்தக வெளியீட்டு விழா “கடந்த‌ ஒன்றரை மாதமாய் பல்வேறு காரணிகளால் தாமதமாகிக் கொண்டிருந்த ‘பரத்தை கூற்று’ புத்தக வெளியீட்டு நிகழ்வு வரும் 16-அக்டோபர்-2010, ச‌னிக்கிழமை அன்று மாலை 5:00 மணி அளவில் சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடக்கிறது – எனது ஆதர்சத் த‌மிழில‌க்கியப்‌ பேராளுமைகளுள் ஒருவரான எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு, சிறப்புரை ஆற்றுகிறார். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் ‘அகநாழிகை’ பொன்.வாசுதேவன் அவர்களுக்கு என் ப்ரியங்கள்” என்று தொடங்குகிறது சரவண கார்த்திகேயனின் புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ். சில காலம் முன்பு சரவண கார்த்திகேயனின் கடிதத்தை வெளியிட்டு என் பதிலையும் எழுதியிருந்தேன். ஞாபகம் இருக்கலாம். இப்போது அவருடைய ’பரத்தை கூற்று’ அகநாழிகை வெளியீடாக வருகிறது. சரவண கார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள். அழைப்பிதழில் என் பெயருக்கு முன்னால் உள்ள எழுத்தாளர் என்ற அடைமொழியை மட்டும் நீக்கியிருக்கலாம்.

பரத்தை கூற்று : கிருஷ்ண பிரபு - 1

பரத்தை கூற்று பற்றி பதிவர் கிருஷ்ண பிரபு அவர்களின் விமர்சனம் இது: *******  http://online-tamil-books.blogspot.com/2010/10/csk.html ******* Monday, October 11, 2010 Posted by கிருஷ்ண பிரபு at 3:15 AM பரத்தை கூற்று - CSK காட்டுப் பூக்களால் தொடுத்த மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு வாலியுடன் துவந்த யுத்தத்தில் இருக்கிறான் சுக்ரீவன். வாலியின் அடி ஒவ்வொன்றும் பாறையென சுக்ரீவன் மேல் விழுந்து கொண்டிருக்கிறது. எங்கிருந்தோ வந்த கூறிய அம்பு வாலியின் தேகத்தைத் துளைத்து இதயத்தைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. அம்பினை எடுத்துப் பார்த்து ராமபாணம் என்று தெரிந்துகொள்கிறான். "மறைவில் இருந்து தாக்குகிறாயே சூரியகுலத்தில் உதித்த உனக்கு இது தகுமா? உன்னுடைய குலத்திற்கே களங்கம் ஏற்படுத்திவிட்டாயே? என்று ராமனைப் பார்த்துப் பொருமுகிறான். "நீ மட்டும் சுக்ரீவனை துரத்திவிட்டு அவனுடைய மனைவியை அனைத்துக் கொண்டாயே அதுமட்டும் ஞாயமா?" என்று ராமன் கேட்கிறான். "ஒரு தார கற்பொழுக்கம் எல்லாம் மனித குலத்திற்குத் தான். வானரர்களுக்கு இல்லை. அதற்காகவா என்னைக் கொன்றாய்..." என்று வாலி கேட்க

பரத்தை கூற்று : புத்தக வெளியீடு

Image
Finally, the wait is (almost) over! கடந்த‌ ஒன்றரை மாதமாய் பல்வேறு காரணிகளால் தாமதமாகிக் கொண்டிருந்த 'பரத்தை கூற்று' புத்தக வெளியீட்டு நிகழ்வு வரும் 16-அக்டோபர்-2010, ச‌னிக்கிழமை அன்று மாலை 5:00 மணி அளவில் சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடக்கிறது - எனது ஆதர்சத் த‌மிழில‌க்கியப்‌ பேராளுமைகளுள் ஒருவரான எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு, சிறப்புரை ஆற்றுகிறார். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் அவர்களுக்கு என் ப்ரியங்கள். செப்டெம்பர் ஆரம்பத்திலேயே மதுரைப் புத்த‌கக் கண்காட்சியில் வைத்து இப்புத்தக வெளியீட்டு நிகழ்வு அரங்கேறியிருக்க வேண்டும் (அப்படி நடந்திருந்தால், " கற்புக்காக ஊரை எரித்த பெண்ணொருத்தி வாழ்ந்த மண்ணில், ஊருக்காக கற்பையே எரிக்கும் பெண்களைப் பற்றிய புத்தகம் வெளியாவது சுவையான முரண் " என்று என் உரையைத் தொடங்கலாம் என்றிருந்தேன்!). இப்போதும் ஒன்றும் குறையில்லை - மிக‌ அம்சமாய் சரஸ்வதி பூஜையன்று வெளியாகிறது. இதிலெல்லாம் மருந்துக்குக் கூட‌ நம்பிக்கையற்ற என் போன்றோர்க்குத் தான் இதெல்லாம் அமைந்து தொலைக்கிற

பரத்தை கூற்று : கிடைக்குமிடங்கள்

பரத்தை கூற்று புத்த‌கம் சென்னை மற்றும் மதுரையில் கிடைக்குமிடங்கள்: நியூ புக்லேண்ட்ஸ் C-52, பேஸ்மெண்ட் தளம், பனகல் பார்க் அருகில், வடக்கு உஸ்மான் ரோடு, தி. நகர், சென்னை - 600017. தொலைபேசி : 044-28158171, 044-28156006, 098402-27776 http://www.newbooklands.com/ டிஸ்கவரி புக் பேலஸ் 6, முதல் தளம், மஹாவீர் காம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, மேற்கு கே.கே. நகர், சென்னை - 600078. தொலைபேசி : 044-65157525, 099404-46650 http://www.discoverybookpalace.com/  உயிர்மை பதிப்பகம் 1/29, சுப்ரமணியன் தெரு, அபிராமபுரம், சென்னை - 600018. தொலைபேசி : 044-24993448 http://www.uyirmmai.com/ பாரதி புக் ஹவுஸ் D-28, மாநகராட்சி வணிக வளாகம், பெரியார் பேருந்து நிலையம் உட்புறம், மதுரை - 625001. தொலைபேசி : 097893-36277 ( புத்தகம் வாங்கக் கடைக்குச் செல்லும் போது அந்தந்தக் கடைகளின் தொலைபேசி எண்களில் பேசி புத்தகத்தின் கையிருப்பு குறித்து விசாரித்தறிந்து பின் செல்லவும் ) ******* சேலம், கோவை, ஈரோடு போன்ற ஸ்தலங்களிலும் புத்த‌கம் கிடைக்கும். தக்கை வெ.பாபு தொலைபேசி : 098651-53007 விஜயா புத்த

படித்தது / பிடித்தது - 90

அப்பா இன்றைக்கும் கனவில் வந்தார் நினைவுக்குள் மிதக்கிற சிகரட் முத்தமும் சாராயம் நெடிக்கிற கச்சான் அல்வா உருண்டையும் இன்றைக்கும் அவரிடமிருந்தது… தாடிமொய்த்த அவர் கன்னத்துக்கு நான் அளிக்கும் முத்தத்தின் விலையாய் கச்சான் அல்வாவைச் சொல்கிறார்… எப்போதும் அவர் இப்படித்தான் வருகிறார்.. நான் வளர்ந்ததை அப்பா அறியாரா இல்லை வளர்ந்த பின்னான அப்பாவை என் கனவுக்குத் தெரியாதா பத்தொன்பது வருடங்கள் கழிந்துவிட்டதென்றும் என் முத்தங்களிற்கான காரணங்களும் அர்த்தங்களும் மாறிப்போயின என்பதையும் அவருக்குச் சொல்வதாய் தீர்மானித்த அன்றைக்கு உணர்ந்தேன் அப்பாவரும் கனவுக்காய் காத்துக்கிடக்கிற குட்டிப்பையன் ஒருவன் எனக்குள் ஒளிந்து கொண்டிருப்பதை - த. அகிலன் நன்றி : ஆனந்த விகடன் , 26.12.2008

பரத்தை கூற்று : ‌கார்த்திகைப் பாண்டியன்

பரத்தை கூற்று பற்றிய பதிவர் ‌கார்த்திகைப் பாண்டியனின் விமர்சனம் இது: ******* http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/10/blog-post.html ******* October 4, 2010 Posted by கார்த்திகைப் பாண்டியன் at 10:15:00 AM பரத்தை கூற்று இன்றைய சமூகத்தில் அடிமை வழக்கங்கள் ஒழிந்து விட்டதாக சொல்கிறோம், ஆனால் அது உண்மையல்ல. அவை இன்றும் இருக்கின்றன, ஆனால் பெண்கள் மட்டுமே அதற்கு ஆட்படுத்தப்படுகிறார்கள்.. அதன் பெயர்தான் விபச்சாரம். - விக்டர் ஹ்யூகோ நண்பனொருவனோடு பேசிக் கொண்டிருந்தேன். அவன் வெகு நாட்களாக ஒரு பெண்ணை ஒருதலையாய்க் காதலித்து வந்தான். "ஏண்டா மாப்ள.. அந்தப் பொண்ணு என்னடா ஆனா? சொன்னியா இல்லையா?" "பச்ச்.. விடுறா மாப்ள.. அது ஒரு ரூட்டுடா.. அதப் பத்திப் பேசாத.." எனக்கு அதிர்ச்சி. "என்னடா.. ஏன் இப்படி சொல்ற.." "அவ வேற யாரையோ லவ் பண்றாளாம்.. தே******" நான் இங்கு என் நண்பன் சொன்னது சரி, தவறு என்பது பற்றி பேச விழையவில்லை. மாறாக அவனது பேச்சில் ஒளிந்திருக்கும் ஒரு பொது புத்தியைப் பற்றியே பேச விழைகிறேன். ஒரு பெண்ணைப் பிடிக்கவில்லை. அவளை

பரத்தை கூற்று : சில BUZZகள்

nesamitran online : இந்தத் தொகுப்பைப் பற்றிய விரிவான பார்வையை வாசித்தால்தான் சொல்லக் கூடும்.வாசிக்கக் கிடைத்த வரிகளில் வலியை எள்ளலுடன் சொல்லியிருக்கிறார். அதிர்ச்சி மதிப்பீடு! narsim 267 : அவசரப்பட்டுட்டீங்களே தல, அல்லது நான் தாமதப்பட்டேன். இந்தப் புத்தகம் குறித்து விரிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த மனுஷன் மீது அப்படி ஒரு ப்ரியம் வந்துவிட்டது. வாழ்க சிஎஸ்கே. கன்னிப் பெண்ணும் கன்னி ஆணும் புணர்தலறிது என்பதில் உயர்த்திய புருவம் இன்னும் இறங்கவில்லை. எழுதிக்கொண்டிருக்கிறேன். என் பதிவில் வரும். vijay mahindaran : thoguppu padithan... vidayasamana muyarchi...kathi mel nadai.... thoguppu nalla irukku padinka nesan.... valthukkal csk....... முழு தொகுப்பையும் படித்துவிட்டேன் ..வித்யாசமான முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை..பரத்தையர் கூற்று பலபேரின் கவனத்தை நிச்சயம் கவரும்.... வால்பையன் : படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது. என்ன வெட்கம், காமம் காணக்கூடாத ஒன்றா என்ன!? nagarajan kadhiresan : 'பரத்தை கூற்று' தொகுப்பின் 'பாலை' பகுதி பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில் வறண்டு