கவிதாயினி : IN THE MAKING
எமக்கு என்று சொற்கள் இல்லை. மொழி எம்மை இணைத்துக் கொள்வதுமில்லை. உமது கதைகளில் யாம் இல்லை, எனக்கென்று சரித்திரமில்லை. நீங்கள் கற்றுத் தந்ததே நான் வார்த்ததுத் தந்ததே நிஜம். எனக்கென்று கண்களோ செவிகளோ, கால்களோ இல்லை. அவ்வப்போது நீ இரவலாய் தருவதைத் தவிர. - கனிமொழி [ கருவறை வாசனை தொகுப்பிலிருந்து] சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியான கனிமொழியின் முதல் கவிதைத் தொகுப்பு நூலின் முதல் கவிதை இது. பெண் எழுத்து என்று குறிப்பிடத்தகுந்த ஏதும் இல்லை என்கிற ஆதங்கமே இக்கவிதை. இன்று பல பெண்கள் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தாலும் அவை எல்லாமே நவீன தளத்திலானவை. அடர்த்தியான விஷயங்களை அல்லது சிக்கலான பிரச்சனைகளை எடுத்துத் தீவிரமாய்ப் பேசுபவை. அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் பெண்ணெழுத்தில் ஒரு வெற்றிடம் உண்டு. வெற்றிடம் என்பதை விட ஒரு குறிப்பிட்ட வகைமையில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகள் இல்லை எனலாம். வைரமுத்து பாணி வெகுஜனக் கவிதைகளுக்கும், பசுவய்யா பாணி சீரியஸ் கவிதைகளுக்கும் இடைப்பட்ட ஒன்றுண்டு. இடைநிலைக் கவிதைகள் என இதனை அழைக்க விரும்புகிறேன். இது புதுக்கவிதைக்கு மேல்; நவீனக் கவிதைக்குக