Posts

Showing posts from January, 2012

செல்வேந்திரன் எனும் கவிநடையன்

Image
******* " எழுத்தெனும் பெருநோயின் அறிகுறி கவிதை. " - செல்வேந்திரன் ('முடியலத்துவம்' தொகுப்பிலிருந்து - ப.53) ******* முதல் மகவையும், முதல் நூலையும் ஒரு சேரப் பிரசவித்திருக்கும் செல்வேந்திரனுக்கு முதலில் என் வாழ்த்துக்கள்! வாசிப்பின் எளிமை கருதி புத்தக்காட்சியில் வாங்கிய புத்தகங்களுள் நான் முதலில் வாசித்தது செல்வேந்திரனின் முடியலத்துவம் தான். இதே தலைப்பில் அவர் ஆனந்த‌ விகடன் இதழில் சில ஆண்டுகள் முன்பு எழுதிய சிறுகவிதைகள், மற்றும் இன்ன பிற இதழ்கள், வலைப்பதிவு ஆகியவற்றில் எழுதிய கவிதைகளின் மொத்தத் தொகுப்பு தான் இந்நூல். முன்னுரையிலேயே disclaimer போட்டு விடுகிறார் - " இக்கவிதைகள் அச்சுரு கொள்வதால், தமிழிலக்கியத்தில் எனக்கொரு இடம் கிடைத்துவிடுமெனும் ஆவல் எனக்கில்லை ". கடைசிக்கவிதை இப்படி இருக்கிறது - "மொழி / கலைத்து ஆடும் / என் சிறுபிள்ளை / விளையாட்டை / நீ கவிதையென்கிறாய்". கொஞ்ச காலம் முன்பு மின்னரட்டையில் பேசிய போதும் இதே கருத்தைத் தான் சொன்னார். அதாவது அவரது கவிதைகளின் இடம் குறித்து நன்கு அறிந்தே அதைப் புத்தகமாக்க முயற்சியெடுக்காமல் இருந்த

ரஜினி Vs எஸ்ரா : ஒரு விவாதம்

Image
இயல் விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ஒரு பாராட்டு விழாவை உயிர்மை ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். இதன் அழைப்பிதழ் கடந்த இரு நாட்களாக ஃபேஸ்புக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதில் ரஜினியின் படம் எஸ்ராவின் படத்தை விடப் பெரிதாகப் போட்டிருப்பதைக் கண்டித்து எழுத்தாளர் ஞாநி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். அதையொட்டி நிகழ்ந்த விவாதம் இது. ******* Gnani Sankaran கேவலமாக இருக்கிறது. விருது பெற்ற எழுத்தாளன் படத்தை அவனைப் பாராட்ட வருகிற ரஜினி படத்தை விட சின்னதாகப் போடுவதும் அவனை செருப்பால் அடிப்பதும் ஒன்றுதான். Saravanakarthikeyan Chinnadurai ‎ @Gnani Sankaran யாரால் அதிக‌ கூட்டம் கூட்ட முடிகிறது என்ற அளவுகோலின் அடிப்படையிலேயே விளம்பர உருவங்கள் அமைகின்றன. இதிலென்ன பிழையிருக்கிறது? தமிழ்ச்சமூகத்துக்கு, அதன் கலை வளத்துக்கு, ரஜினிகாந்தின் பங்களிப்பைக் காட்டிலும் எஸ்.ராமகிருஷ்ணனுடையது அதிகம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதை நிரூபிக்க வேண்டிய இடம் விளம்பரப்பலகைகள் அல்ல. ஒருவகையில் விளம்பரங்கள் கலர் மிட்டாய் காட்டி குழந்தைகளை இழுக்கு

தமிழ் சினிமா 2011 : தரவரிசை

சிற‌ந்த படங்கள் ஆரண்ய‌ காண்டம் ஆடுகளம் யுத்தம் செய் வாகை சூட வா பயணம் கோ அவன் இவன் மயக்கம் என்ன‌ நடுநிசி நாய்கள் நல்ல படங்கள் எங்கேயும் எப்போதும் குள்ளநரிக் கூட்டம் மௌனகுரு முரண் ஆண்மை தவறேல் தெய்வத் திருமகள் வானம் அழகர்சாமியின் குதிரை தூங்காநகரம் தேநீர் விடுதி போட்டா போட்டி 50-50 சுமாரான‌ படங்கள் சிறுத்தை போராளி சதுரங்கம் காவலன் வேலாயுதம் தம்பி வெட்டோத்தி சுந்தரம் ரௌத்திரம் ராஜப்பாட்டை காஞ்சனா மங்காத்தா வித்தகன் மோசமான படங்கள் 7-ஆம் அறிவு ரா-ஒன் நூற்றெண்பது வந்தான் வென்றான் ஒஸ்தி டட்டி பிக்ச்சர் பொன்னர் சங்கர் வேலூர் மாவட்டம் நஞ்சுபுரம்

அணுசக்தியும் அறிவுஜீவிகளும்

இரு நாட்களுக்கு முன் ட்விட்டரில் ரோஸாவசந்தும் நானும் அணுசக்தியின் அபாயங்கள் குறித்து (அடியேன் உள்ளிட்ட) அரைகுறை அறிவியல்வாதிகள் கொண்டிருக்கும் மெத்தன‌ நிலைப்பட்டைப் பற்றி நிகழ்த்திய‌ குறுவிவாதம் இது: ******* rozavasanth : அறிவியல் அறிந்த எவருக்கும் அணு உலை ஒப்புமைக்கு அப்பாற்பட்ட ஆபத்து, அணுக்கழிவை சமாளிக்க எந்த வழியும் இல்லை என்பது நிச்சயம் தெரியும். ஆனால் இங்கே அறிவியலுடன் தொடர்பற்ற எளிய மக்கள் அணு உலையை எதிர்த்து போரடுகிறார்கள்; அறிவியல் அறிந்தவர்கள் கூசாமல் பொய் சொல்கின்றனர். writercsk : அபாயம் இல்லவே இல்லன்னு சொல்லலை. ரிஸ்க் எடுத்துத் தான் ஆகனும் என்பது தான் நிலை. நான் கூடங்குளத்தில் வசித்தாலோ, பெங்களூரில் உலை திறக்கப்பட்டாலோ கூட இதையே தான் சொல்வேன். தேசவளர்ச்சிக்காக ரிஸ்க். rozavasanth : ரிஸ்க் எடுப்பது' என்பதில் நிகழ்தகவு உண்டு என்பதால் சாமர்த்திய வாதம்; அணுக்கழிவு விஷயத்தில் சொல்வது அத்தனையும் பச்சை பொய்தானே. writercsk : அத்தனையும் என்று சொல்ல முடியாது. ஆனால் நிறைய மழுப்புகிறார்கள் என ஒப்புக் கொள்கிறேன். rozavasanth : 'பிரச்சனையில்லை, சமாளிக்க முடியும்&

பரத்தை கூற்று : முன்னுரை

எனது பரத்தை கூற்று நூலுக்கு விரிவானதொரு பத்துப்பக்க முன்னுரை எழுதியிருந்தேன். கவிதைகளைச் சிலாகித்த எவரும் அந்த முன்னுரை பற்றிப் பேசாது இருந்ததில்லை. கவிதைகளைப் பிடிக்காதவர்கள் கூட அந்த முன்னுரையை மட்டும் பாராட்டியே மொழிந்தனர். புத்தகத்தின் முக்கியமானதும் தவிர்க்கவியலாததுமான ஓரங்கம் அது. சுஜாதா தன் திருக்குறள் - புதிய உரை க்கு எழுதிய முன்னுரை போல, பௌத்த அய்யனாரின் மேன்ஷன் கவிதைகள் தொகுப்புக்கு பிரபஞ்சன் எழுதிய முன்னுரை போல விரிவாகவும் செறிவாகவும் பரத்தை கூற்று தொகுப்பின் முன்னுரையும் அமைய வேண்டும் என்று திட்டமிட்டே தான் அதிக நேரமும் உழைப்பும் செலவழித்து அதனை எழுதினேன். ஒரு திறமையான வக்கீலின் வாதத்தைப் போல் தான் அதைக் கட்டமைத்தேன். நான் இதுகாறும் எழுதிய கட்டுரைகளில் ஆகச்சிறந்ததென்று பரத்தை கூற்று முன்னுரையையே சொல்வேன். சென்னை புத்தகக் காட்சியையொட்டி தமிழ் பேப்பரில் இந்த முன்னுரை வெளியாகி இருக்கிறது. பரத்தை கூற்று : முன்னுரை - http://www.tamilpaper.net/?p=5284 *******

புத்தகங்களின் சுயம்வரம்

ஊர் பழையன கழித்துக் கொண்டிருந்த நேரத்தில் நான் புதியன புகுத்திக் கொண்டிருந்தேன். ஆம். நேற்றுத்தான் நான் சென்னைப் புத்தகக்காட்சிக்குச் சென்று வந்தேன். போகி விடுறையாதலால் கூட்டம் கணிசமாய் இருந்தது. சொன்னது போல் சென்ற வார இறுதியில் சென்னை போக முடியாத படிக்கு பல கழுத்து நெரிப்பு அலுவல்கள். அதனால் ஒரே நாளைக்குப் பயணத்திட்டத்தைச் சுருக்கி நேற்று வந்து விட்டு நேற்றே திரும்ப வேண்டியதாயிற்று. சென்ற முறை போலவே இம்முறையும் எடையே பிரதானப் பிரச்சனையாயிற்று. மொத்தம் பத்துப் பாதைகள் கொண்ட புத்தகக்காட்சி அரங்கில் ஆறு பாதைகள் பார்த்து முடித்திருந்த போதே புத்தகப்பை அதீத எடையால் தொங்கிப் போய், மனமும் உற்சாகழந்து சொங்கிப் போய் "முடியல" என்ற நிலைமைக்கு வந்து விட்டேன். காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, கிழக்கு, காவ்யா, க்ரியா, வம்சி, ஆழி, கவிதா, விகடன் ஆகிய முக்கியப் பதிப்பகங்களை அப்போது கடந்திருந்தது மட்டும் தான் ஆறுதல். பிற்பாடு மற்றைய நான்கு பாதைகளை browse மற்றும் செய்து விட்டு குறைந்த கொடுக்கல் வாங்கல்களுடன் வெறியேறினேன். ஆழி பப்ளிஷர்ஸ் ஸ்டாலில் இருந்தவர்கள் பேயோன் பற்றிப் பேசிக் கொண்டிருந்

குடிப்பழக்கம் : ஒரு விவாதம்

Image
இன்று ஃபேஸ்புக்கில் நடிகை ஸ்ருதி ஹாசன் (அல்லது அவரைப் போன்ற ஒரு பெண்) குடித்துக் கொண்டிருக்கும் (அல்லது குடிப்பவர்களுடன் அமர்ந்திருக்கும்) ஒரு படத்தை நான் "இதுல என்ன தப்பு இருக்கு?" என்று கேட்டு பகிர, தொடர்ந்து எழுத்தாளர்கள் ஞாநி, பாஸ்கர் சக்தி இருவருடனும் குடிப்பழக்கம் குறித்து நகழ்த்திய விவாதம் இது: ******* Saravanakarthikeyan Chinnadurai இதுல என்ன தப்பு இருக்கு? Gnani Sankaran அதியமானோடு சேர்ந்து கள் குடித்த அவ்வை தமிழ்ப் பெண்தான். இதுவும் நம்ம மரபுல இருக்கற விஷயம்தான். குடிக்கக்கூடாது என்பது கற்பு மாதிரிதான். ஆண், பெண் இருபாலாருக்கும் அதைப் பொதுவில் வைப்போம். Saravanakarthikeyan Chinnadurai @Gnani Sankaran நான் குடிப்பதில்லை. ஆனால் அதை ஒழுக்கத்தோடு என்றும் சம்மந்தப்படுத்திக் கொண்டதில்லை. நான் குடிக்காமலிருப்பதற்கு காரணங்கள் வேறு. குடிக்கு அடிமையாகக் கூடாது எனப்து வரை புரிகிறது. ஆனால் ஏன் குடிக்கவே கூடாது என்று சொல்லப்படுகிறது எனப் புரியவில்லை. குடிப்பது ஒரு கொண்டாட்டம் என்று சொல்வது எவ்வளவு அறிவீனமோ, அது போன்றது தானே, குடிப்பது ஒழுக்கக்கேடு என்பதும். இன்ற

களவுக்கோட்டம்

சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலுக்கு நான் எழுதிய விமர்சனக் கட்டுரை இன்றைய தமிழ் பேப்பர் இதழில் வெளியாகி இருக்கிறது. நான் படித்ததிலேயே ஆகச்சிறந்த வரலாற்று நாவல் காவல் கோட்டம் என்பது தான் விமர்சனத்தின் ஒன்லைன். சமீபத்திய எனது கட்டுரைகளில் எனக்குப் பிடித்தமானது இது தான். காவல் கோட்டம் – ஓர் அனுபவம் : http://www.tamilpaper.net/?p=5302 " காவல்கோட்டத்திற்கு நிகராக ஏதேனும் ஒரு படைப்பு கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்து அது புறக்கணிக்கப்பட்டதாக ருசுப்பிக்கப்பட்டால் நான் பெறும் விருது பரிசு லட்ச ரூபாயை அந்தப் படைப்பிற்கு தருகிறேன் " என்று சு.வெங்கடேசன் அறிவித்திருப்பதாகத் தெரிகிறது. பதிலுக்கு மனுஷ்யபுத்திரன் " தமிழில் இதுவரை சாகித்ய அகாதமி விருது மறுக்கப்பட்ட எழுத்தாளர்களைவிட வெங்கடேசன் தான் முக்கியமான எழுத்தாளர் என நிரூபித்தால் அவருக்கு நான் ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கிறேன். மேலும் காவல் கோட்டத்தை ஒரு அசலான நாவல் என்று நிரூபித்தால் மேலும் ஒரு இலட்சம் ரூபாய் அளிக்கத் தயாராக இருக்கிறேன் " என்று சொல்லி இருக்கிறார். இதில் மனுஷ்யபுத்திரன் சொல்லும்

பரத்தை கூற்று - ஒரு விளக்கம்

ஒரு புத்தகத்தை எழுதி விட்டு அதற்கு தன்னிலை விளக்கமும் தர நேர்வது அவலம் என்ற போதிலும் இது தமிழ் கூறும் நல்லுலகு என்ற பின்புலத்துடன் சேர்த்துப் பார்க்கையில் இதில் அதிர்ச்சியோ ஆச்சரியமோ ஏதுமில்லை. தவிர அடியாள் வைத்து விளக்கவுரை எழுத வசதியும் ரோஷமும் இடம் தராததால் என் புத்தகத்திற்கு நானே வக்கீலாக ஆஜாராகிறேன். முதலில் பரத்தை கூற்று தொடர்பாய் அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விக்களுக்கு என் பதில்களைப் பார்த்து விடலாம். 1. பரத்தை கூற்று என்பது என்ன? ஒரு கவிதைத்தொகுதி. 2. எவ்வகைக் கவிதைகள் அதில் இருக்கின்றன? பாரதிதாசனும், கண்ணதாசனும், வைரமுத்துவும், வானம்பாடிகளும் எழுதிக் குவித்த புதுக்கவிதை வகைக் கவிதைகள். 3. இன்னமும் கொஞ்சம் விளக்க முடியுமா? ஓர் உடனடிப்புன்னகையோ, ஓர் அதிர்ச்சித்தீற்றலோ, ஒரு கண்ணீர்ச்சுவடோ உத்திரவாதம். வாசிக்கும் அந்தக் கணத்தில் தீப்பொறி போல் ஒரு சிந்தனைத்தெறிப்பை உண்டாக்க வல்லவை இவை. சுவாரஸ்யம் தான் இவற்றின் ஆதார குணம். 4. இவ்வகைக் கவிதைகள் இலக்கியமா? தெரியாது. ஆனால் இவற்றுக்கென்று ஓரிடம் தமிழ் மரபில் நிச்சயம் உண்டு. தவிர தமிழ் சினிமாவில் தரமான பாடல் வரிகள் என ச

3ம் உலகம்

Image
பொதுவாய் நான் இசை விமர்சனம் எழுதுவதில்லை. இசை பற்றி எதுவும் தெரியாது என்பது அதற்கான‌ காரணங்களுள் முதன்மையானது. தவிர எந்த இசையென்றாலும் மனம் தன்னிச்சையாய் இளையராஜாவுடனேயே ஒப்பிட்டுப் பார்த்து இரக்கமின்றி தூக்கிக்கடாசி விளையாடுகிறது. சரி இளையாராஜாவின் பாடல்களுக்காவது எழுதலாம் என்று பார்த்தால் சமீபத்தில் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் சொன்னது போல் அதில் சொல்வதற்கு ஒன்றும் இருப்பதில்லை. "அற்புதம் அதிசயம் அபாரம் அட்டகாசம் அமர்க்களம்" என்றே ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருப்பது கேட்பவர்களுக்கு மட்டுமல்லாமல் சொல்ப‌வனுக்கே சமயங்களில் அலுத்துப் போய் விடுகிறது. இதையெல்லாம் தாண்டி குறிஞ்சி பூத்தாற் போல் ராஜா தவிர்த்த வெளியிடத்திலிருந்து (குறிப்பாகப் புதியவர்கள்) ஏதேனும் நல்லிசை வந்தால் அது குறித்து மட்டும் எழுதுவதை கொள்கை முடிவாக வைத்திருக்கிறேன். அப்படி இதுவரை இரண்டே இரண்டு திரைப்படங்களின் இசைக்கு மட்டும் விமர்சனம் எழுதியிருக்கிறேன். ஒன்று உன்னைப் போல் ஒருவன் ; மற்றது எந்திரன் (சென்ற 2011ம் ஆண்டில் வெளியான‌ நஞ்சுபுரம் , வாகை சூட வா ஆகிய‌ படங்களின் பாடல்கள் பற்றி எழுத விரும்பி, பின் சந்தர

சென்னை புத்தகக் காட்சி : 2012

Image
மற்றுமொரு புத்தாண்டு; மற்றுமொரு புத்தகக்காட்சி; மற்றுமொரு புதுப்புத்தகம்; மற்றுமொரு பதிவழைப்பு; மற்றுமொரு.. நாளை - 05/01/2012 - வியாழக்கிழமை அன்று காட்சி ஆரம்பிக்கிறது. அப்துல் கலாம் வருகை ; தினசரி ஒரு நிகழ்வரங்கு ; சிறுவர் ஓவியப்போட்டி என இம்முறை கலந்து கட்டி களமிறங்கியிருக்கிறார்கள் பப்பாஸியர். மற்ற விவரங்கள் இங்கே: எனது புதிய புத்தகமான தேவதை புராணம் வரும் புதன்கிழமை (11/01/2012) முதல் புத்தகக் காட்சியில் கிடைக்கும் எனத்தெரிகிறது. புத்தகக்காட்சியில் என் புத்தகங்கள் கிடைக்கும்  ஸ்டால்களிவை. குழப்பந்தவிர்க்க‌ குறித்துக்கொள்க‌. தேவதை புராணம் :  கற்பகம் புத்தகாலயம் / Karpagam Puthagalayam - ஸ்டால் எண் : 205-206 / செல் : 96000-63554 பரத்தை கூற்று : நிவேதிதா புத்தகப் பூங்கா / Nivethitha Puthaga Poonga - ஸ்டால் எண் : 326 / செல் : 99945-41010 டிஸ்கவரி புக் பேலஸ் / Discovery Book Palace - ஸ்டால் எண் : 334 / செல் : 99404-46650 சந்திரயான் : கிழக்கு பதிப்பகம் / Kizhakku Pathippagam - ஸ்டால் எண் :  F-007 / செல் : 95000-45608 நியூ ஹொரைசன் மீடியா / New Horizon Media - ஸ்டால் எ

தேவதை புராணம்

Image
"At the touch of love everyone becomes a poet." - Plato தமிழ் பேப்பர் மின்னிதழில் கடந்த ஃபிப்ரவரியில் நானெழுதிய காதல் புராணம் என்ற கவிதைத் தொடர் தற்போது தேவதை புராணம் என்ற பெயரில் புத்தக ஆக்கம் பெறுகிறது. கற்பகம் புத்தகாலயம் இதனை வெளியிடுகிறது. தமிழ் பேப்பரில் வெளியான போது கிடைத்த அதீத‌ வரவேற்பு தான் இதை நூலாக்கும் எண்ணத்தையே தந்தது. இது 150 சிறுகவிதைகள் கொண்ட தொகுப்பு. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் ஆகிய ஏழு பருவங்களில் ஒரு பெண் தன் காதலைப் பற்றியும், காதலனைப் பற்றியும் பேசுவதாய் அமைந்தவை இவை. ஈராயிரம் ஆண்டுகள் பேசின சங்கதி என்பதையெல்லாம் தாண்டி காதலைப் பற்றிப் புதிதாய்ச் சொல்ல இன்னமும் விஷயமிருக்கிறது என்ற நம்பிக்கை தான் தேவதை புராணம் . இது இளைஞர்களுக்கானது; இளைஞிகளுக்கானது. அதாவது உடலிலோ மனதிலோ இளமையைக் கொஞ்சமேனும் தேக்கி வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இதன் உட்கணமேனும் பிடிக்கும். பிடிக்க வேண்டும். காதலின் ரசனையான சுவாரஸ்யம் தான் தேவதை புராணம் தொகுதி . மற்றபடி, "இதெல்லாம் கவிதையே இல்லை" பஜனை கோஷ்டிக்கும் நிறைய வேலை இருக

தமிழ்த் திரைப்பட விருதுகள் – 2011

CSK ACADEMY OF MOTION PICTURE ARTS & SCIENCES சார்பில் 2002 முதல் ஒவ்வொரு வருடமும் தமிழ் திரைப்படங்களுக்கு சில‌ விருதுகள் அறிவித்து வருகிறேன். இது பத்தாவது ஆண்டு. பரவலான வாசகர்களைச் சென்றடையும் எண்ணத்தில் இம்முறை தமிழ் பேப்பர் இணையதளத்தில் விருது முடிவுகளை வெளியிட்டிருக்கிறேன் (இந்தப் பதிவிற்கு காவலன் போஸ்டரைப் போட்டிருக்கும் ஹரன் ப்ரசன்னாவை ஆயுள் முழுக்க ஆட்டோஃபிக்ஷன் வாசித்து வாழ சபிக்கிறேன்). தமிழ்த் திரைப்பட விருதுகள் – 2011 : http://www.tamilpaper.net/?p=5251 ஆரண்ய காண்டம் படத்திற்கு விமர்சனம் எழுதவில்லையே என சிலர் கேட்டிருந்தனர். அதற்கான எனது எளிய‌ பதிலிது.

ஏறக்குறைய படிகம் : வேதியியல் நொபேல் 2011

Image
அம்ருதா - டிசம்பர் 2011 இதழில் வெளியான 2011 வேதியியல் நொபேல் குறித்த‌ எனது கட்டுரையை இங்கே பகிர்கிறேன்: