மூன்றாம் தமிழன்

சந்திரசேகர வெங்கட்ராமன் மற்றும் சுப்ரமண்யன் சந்திரசேகருக்கு பின் நோபல் பரிசு வாங்கும் மூன்றாவது தமிழன் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரசாயனத்துக்கான நோபல் பரிசை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விஞ்ஞானிகள் இருவருடன் இணைந்து பெறுகிறார் இவர். உடல் செல்களிலுள்ள‌ ரிபோஸோம்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆராய்ச்சி செய்ததற்காக ("for studies of the structure and function of the ribosome") இவ்விருது என நோபல் கமிட்டியின் அதிகாரப்பூர்வ‌ செய்தி வெளியீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சந்தோஷம், வாழ்த்துக்கள்!

இவர் ஒரு அமெரிக்க குடிமகன். நமக்கெல்லாம் வேறு வழியில்லை.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்