ச்சீய்
இந்த 2014 ஆண்டில் அவ்வப்போது சில கட்டுரைகள் தவிர தனி நூல் முயற்சியாய் நான் ஏதும் எழுதவில்லை. சொந்த வாழ்வின் அழுத்தங்களும் புதிய பணிக்கு மாறி இருப்பதும் இதற்கு முக்கியக் காரணங்கள். எழுத ஒப்புக் கொண்ட என் மனதிற்குகந்த ஒரு ப்ரொஜெக்ட்டையும் எழுத முடியவில்லை. பதிப்பிக்கத் தயாராய் மூன்று தொகுப்பு நூல்கள் கையில் இருந்த போதும் பதிப்பிக்க ஆள் இல்லை. தமிழ் வாசிப்புச் சூழல் அப்படி. அதனாலேயே பதிப்பகங்கள் தயங்குகின்றன. இந்நிலையில் தான் வரும் 2015 சென்னைப் புத்தகக் காட்சிக்கு என் பங்களிப்பாய் வருகிறது வெட்கம் விட்டுப் பேசலாம் . வெளியீடு சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் . 2012 - 2013 ஆண்டுகளில் குங்குமம் இதழில் 25 வாரங்கள் வெளியான ச்சீய் பக்கங்கள் தொடரின் தொகுப்பு தான் இது. (நூலுக்கென புதிதாய் எழுதிச் சேர்த்த ஒரு சிறப்பு அத்தியாயமும் உண்டு.) புத்தகத்திற்கு (தொடருக்கே கூட) நான் தீர்மானித்த தலைப்பு ச்சீய் என்பது தான். ஆனால் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் இதர நூல் தலைப்புகளின் ஸ்டைலில் இதைத் தீர்மானித்திருக்கிறார்கள். இத்தலைப்பு எளிமையாய், பொருத்தமானதாய் இருக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது! சமரசத்த