படித்தது / பிடித்தது - 71

முக நக...

கண்கள் வழி
கரு நாகங்கள்
நெளிந்து விழுந்தன
நாசித்துவாரங்களில்
இரு பூரான்கள்
உள்வெளியாடின
இடக்கையின்
ஆட்காட்டிவிரலில்
அரணையும்
வலக்கையின் விரலிடுக்குகளில்
தேள்கள் நான்கும்
சிரம் தூக்கி மெல்லப்
புறம் பார்த்தன
வெண் பாதங்களில்
விஷ வண்டுகள்
சுருண்டுருண்டன
உதடுகளுக்கிடையில்
மட்டும்
மென் இதழ்கள்
முட்களே இன்றி...

- நர்சிம்

நன்றி: யாவரும் கேளிர்

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்