வயிறு எரிகிறது!
இந்த வேலைக்காரர்கள் பற்றி தனியாய் ஒரு நாவலே எழுதலாம். அவ்வளவு இருக்கிறது. வேலைக்கார்கள் என்றால் வீடுகளில் வேலைக்கு இருக்கும் பெண்கள். இவர்களெல்லாம் ஒரு பொழுதுபோக்கு போல்தான் வீட்டு வேலைக்கு வருகிறார்கள். அன்றைக்கு இஷ்டம் இருந்தால், மூட் இருந்தால் வருவார்கள். இல்லையென்றால் லீவ். மாதத்துக்கு 15 நாட்கள் வந்தாலே அதிகம். கேட்டால் ஊருக்குப் போனேன், விசேஷத்துக்குப் போனேன், துஷ்டிக்குப் போனேன், கோயிலுக்குப் போனேன், சொந்தக்காரர்கள் வந்திருந்தார்கள், உடம்பு சரியில்லை, பேருந்து கூட்டம் / லேட், ரேஷன் கார்ட் ரென்யூவல் என கலர்கலரான காரணங்கள். நம்பித்தானே ஆக வேண்டும். சில நாள் நியாயமான காரணம் இருக்கும் தான். ஏற்கத் தான் வேண்டும். ஆனால் அதற்காக மாதத்தில் பாதி நாட்களா? என் அலுவலகத்தில் இப்படிச் செய்தால் அடுத்த மாதம் சம்பளம் செட்டில் செய்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். நிஜமாகவே அப்படி நடந்திருக்கிறது. ஆனால் இவர்களுக்கோ முதலாளி ஒரு கேனக்கூ.. தானே. எச்சரித்து விட்டு மீண்டும் சேர்த்தும் கொள்வோம். சகித்துக் கொள்வோம். மாதம் பாதி நாள் வேலைக்கு வர முடியாதவர்களுக்கு எதற்கு வேலை? கிடைத்தவரை லாபம். சம்