Posts

Showing posts from February, 2012

இளம் விமர்சகர்

காவல் கோட்டம் பற்றிய ஒரு கடிதத்துக்கு பதிலெழுதுகையில் எனது விமர்சனத்தைக் குறிப்பிட்டிருந்தார் ஜெயமோகன். காவல்கோட்டமும் தோழர்களும் - http://www.jeyamohan.in/?p=25268 ******* நாவலைப்பற்றி நான் விரிவாக எழுத இரு காரணங்கள். ஒன்று, அதில் இருந்த மார்க்ஸிய முரணியக்கவியல் அணுகுமுறை. அது எனக்கு எப்போதுமே உவப்பானது. ஒவ்வொரு வரலாற்றுச் சக்தியும் நேர் எதிரான இன்னொரு வரலாற்றுச் சக்தியினால் முரண்பட்டு இயக்கப்படுகிறது என்ற மார்க்ஸிய வாய்ப்பாட்டுக்கு மிக விசுவாசமான நாவல் காவல்கோட்டம். மார்க்ஸிய அணுகுமுறையைத்தான் நானும் வரலாற்றில் போட்டுப்பார்ப்பேன், ஆனால் வெங்கடேசன் போல அதை சொல்மாறாத சூத்திரமாகக் கொள்ளமாட்டேன். எனக்கு அது வரலாற்றின் புற விசைகளை மட்டும் அறிய உதவும் ஒரு கருவி மட்டுமே. ஆனாலும் வெறுமே கதைசொல்லுவதற்கு அப்பால் சென்று வரலாறு செயல்படும் விதத்தை எழுத முயன்ற முதல்நாவல் காவல்கோட்டம் என்பது எனக்கு முக்கியமாகப் பட்டது – எப்படி அதைச்செய்திருக்கிறார் என விரிவாக எழுதியிருக்கிறேன். இந்தக் காரணத்தால்தான் மார்க்ஸிய விமர்சகரான ஞானியும் காவல்கோட்டத்தைத் தமிழின் தலைசிறந்த வரலாற்றுநாவல்

தேவதை புராணம் - முன்னுரை

Image
தேவதை புராணம் கவிதைத் தொகுப்பிற்கு நானெழுதிய முன்னுரை இன்று தமிழ் பேப்பர் இதழில் வெளியாகி இருக்கிறது. தேவதை புராணம் - http://www.tamilpaper.net/?p=5541 சென்ற வருடம் இதே தேதியில் தான் இத்தொகுப்பு காதல் புராணம் என்ற பெயரில் தமிழ் பேப்பரில் தினத்தொடராக‌ வெளியாகத் தொடங்கியது. தமிழ் பேப்பரில் வெளியான என் முதல் எழுத்தும் அதுவே. அதாவது இன்றைய காதலர் தினம் தமிழ் பேப்பரில் நான் எழுதத் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதையும் குறிக்கிறது. இந்த ஓராண்டில் ஒரு கவிதைத்தொடர், ஒரு சிறுகதை, ஒரு விஞ்ஞானக்கட்டுரை, ஓர் அஞ்சலிக்குறிப்பு, ஒரு பகடிக்கட்டுரை, ஓர் இலக்கிய விமர்சனம், ஒரு மொழிபெயர்ப்பு, ஓர் ஆய்வுக்கட்டுரை, ஒரு விருதுப்பட்டியல், ஒரு புத்தக முன்னுரை என பல வடிவங்களை சோதித்துப் பார்க்க இந்த எளியனுக்கு தமிழ் பேப்பர் தளமும் களமும் தந்திருக்கிறது. இன்றும் கிட்டதட்ட ஐயாயிரம் பார்வையாளர்களுடன் தமிழ் பேப்பரில் அதிகம் வாசிக்க‌ப்பட்ட கட்டுரையாக எனது எக்ஸைல் விமர்சனக்கட்டுரை இருக்கிறது என்பது மகிழ்ச்சியே (அதற்கு காரணம் அக்கட்டுரையின் திராணியல்ல; சாரு என்கிற ஆளுமையால் உந்தப்பட்ட ரசிக / விரோத மனங்கள் என்ப

லவ் டுடே

ஒரு வார இதழின் காதலர் தின சிறப்பிதழுக்காக‌ எழுதிய குறிப்பு இது. அதில் வெளியாகவில்லை. அதனால் இங்கே . ****** காதல் என்பது கெட்டவார்த்தை என்ற குழந்தைகளின் புரிதலில் தவறேதும் இருப்பதாய்த் தெரியவில்லை. பெரியவர்களானதும்தான் குழம்பி விடுகிறோம்! பதின்மமும், இருபதும், முப்பதும் சேர்ந்தது தான் இளைய தலைமுறை. பதின்மங்களில் பூக்கும் காதலில் பாலினக்கவர்ச்சி பெரும்பங்கு வகிக்கும். இருபதுகளில் உதிக்கும் காதலில் பணமும் பாதுகாப்பும் போட்டி போடும். முப்பதுகளில் முகிழ்க்கும் காதல் ஒப்பீட்டளவில் கொஞ்சமாய் உத்தமம். இளமையில் மெய்க்காதல் என்பது மெய்யைக் காதலிப்பது தான். மெய் பூசிய பொய்க்காதல். இது இன்று நேற்று என்றல்ல; ஆதிகாலந்தொட்டே இப்படித்தான். பொதுவாய் இன்றைய இளம் தலைமுறையினர் காதலையும் ஒரு பண்டமாகவே பார்க்கின்றனர். அரிசி, பருப்பு போல், ஷூ, செருப்பு போல், மின்னணு சாதனம் போல் காதலும் ஒரு பண்டம். தீர்ந்தால் நிரப்புவது, உடைந்தால் வேறொன்று. காதலை எடை போடுகிறார்கள்; இன்னமும் சற்றே உசத்தி வாய்க்காதா என உறங்கும் போதும் ஒருவிழி திறந்தே வைத்திருக்கிறார்கள். வாய்ப்புக்கிடைத்தால் ஆத்மசுத்தியோடு முறித்து வி

Taslima, Meena, Leena & I

Here's a funny serious chat happened between Taslima Nasreen (a Bangladeshi writer, feminist, humanist & activist), Meena Kandasamy (an English poet, writer, translator & activist), Leena Manimekalai (a Tamil film maker, poet & actor) and I in Twitter TL, today. ******* [Taslima Nasreen - @taslimanasreen] [Meena Kandasamy - @meenakandasamy] [Leena Manimekalai - @karuvachy] [Saravanakarthikeyan C - @writercsk] taslimanasreen : I am looking for someone thirty plus who is not a mamas boy or a wife's pet or who can tie his shoelaces by himself. writercsk : @taslimanasreen for? taslimanasreen : Just to have a friendly talk. RT @writercsk for? writercsk : @taslimanasreen unfortunately, am still in my late 20s.. let's wait for 3 more years.. :-) meenakandasamy : @writercsk for your sake @taslimanasreen ma'am might reduce the age-bar! taslimanasreen : @meenakandasamy Just wanted to see whether independent men exist. Or they always need wo

அம்ருதா ‍ - ஃபிப்ரவரி 2012 இதழில்

Image
அம்ருதா ஃபிப்ரவரி 2012 இதழில் சென்ற வருட மருத்துவ‌ நொபேல் குறித்து நானெழுதிய‌ விரிவான 5 பக்க கட்டுரை ' யாக்கையின் பிணிப்போர் ' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

2011 முக்கிய நிகழ்வுகள்

Image
மெல்லினம் ஜனவரி 2012 இதழில் வெளியாகியிருக்கும் என் மற்றொரு படைப்பு 2011ம் ஆண்டில் தமிழகத்தில், இந்தியாவில், உலகத்தில் நடந்த முக்கியமான சம்பவங்கள் குறித்த ஏழு பக்க கட்டுரை. இதுகாறும் அச்சில் வெளியான என் கட்டுரைகளில் கண்களுக்கு மிக அழகானத் தென்படுவது இது தான் - லேஅவுட்காரருக்கு நன்றி!

மெல்லினம் விருதுகள் 2011

Image
மெல்லினம் ஜனவரி 2012 இதழில் எனது இரு படைப்புகள் கவர் ஸ்டோரியாக வெளிவந்துள்ளன. ஒன்று திரைப்படம், இலக்கியம், தொலைக்காட்சி ஆகிய துறைகளில் கடந்த 2011ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான விருதுகள். இவற்றில் இலக்கியத்துக்கான விருதுகள் மட்டும் முழுக்க முழுக்க என் சொந்த ரசனை சார்ந்தவை. இது ஒரு ஜனரஞ்சக இதழில் முன்வைக்கப்படும் பட்டியல் என்ற அடிப்படையில் திரைப்பட விருதுகளில் தேவைக்கேற்ப‌ சில சமரசங்கள் செய்து கொண்டுள்ளேன். தொலைக்காட்சி விருதுகளில் நெடுந்தொடர் தொடர்பானவை மட்டும் என் மனைவியின் வலுவான உள்ளீடுகளுடன் தீர்மானிக்கப்பட்டவை; மற்றவை என்வரையிலானவை.