Posts

Showing posts from December, 2009

தமிழ் திரைப்பட விருதுகள் - 2009

CSK ACADEMY OF MOTION PICTURE ARTS & SCIENCES (TAMIL) AWARDS FOR THE CALENDER YEAR 2009 ---------------------------------------------------------------------------------- ---------- --------- சிறந்த திரைப்படம் - வெண்ணிலா கபடி குழு ---------------------------------------------------------------------------------- ---------- --------- சிறந்த இயக்குநர் - பாலா [ நான் கடவுள் ] சிறந்த திரைக்கதை - சுசீந்தரன் [ வெண்ணிலா கபடி குழு ] சிறந்த வசனம் - சுபா [ அயன் ] சிறந்த கதை - நீரஜ் பாண்டே [ உன்னைப் போல் ஒருவன் ] ---------------------------------------------------------------------------------- ---------- --------- சிறந்த பின்னணி இசை - இளையராஜா [ பழசிராஜா ] சிறந்த ஒளிப்பதிவு - மனோஜ் பரம்ஹம்சா [ ஈரம் ] சிறந்த படத்தொகுப்பு - ஆன்டணி [ அயன் ] ---------------------------------------------------------------------------------- ---------- --------- சிறந்த கலை இயக்கம் - வைரபாலன் [ பொக்கிஷம் ] சிறந்த ஆடை வடிவமைப்பு - சைதன்யா ராவ் [ கந்தசாமி ] சிறந்த ஒப்பனை - [ ந

சந்திரயான் : A TEASER TRAILER

******* விரைவில்...! மிக விரைவில்...! ******* "எதிர்காலத்தில் என் கவிதைகளோ, வலைப்பதிவுகளோ, அல்லது இன்ன பிறவோ தொகுப்பாய் வெளிவர நேருமென்றால் NMH வெளியீடாகவே வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்." - சி.சரவணகார்த்திகேயன் [ 'ஒண்டிக்கட்டை உலகம்' நூல் விமர்சனம் ] ******* இதை எழுதியது சரியாய் ஒரு வருடத்திற்கு முன்பு (18 டிசம்பர், 2008). அப்போது என்ன நினைத்து இப்படி எழுதினேன் என்பது நிச்சயமாய் நினைவில்லை. ஆனால் இப்போது அந்த 'ஆசை' நிறைவேறியிருக்கிறது. " எழுதுபவர் என்கிற படியிலிருந்து எழுத்தாளர் என்னும் படிக்குச் செல்வது ஒரு கட்டம் " என்று எழுத்தாளர் பாரா குறிப்பிடுவதைப் போல எனக்கான அந்த படிநிலை மாற்றம் நான் விரும்பியதைப் போலவே NHM வாயிலாகவே நடந்தேறியிருக்கிறது. ******* நன்றி பத்ரி & பாரா! ******* ஆம். எனது முதல் புத்தகமான ' சந்திரயான் ', நியூ ஹொரைஸான் மீடியா வெளியீடாக (இம்ப்ரிண்ட் கிழக்கு பதிப்பகம் என்று நினைக்கிறேன்) வரும் ஆண்டின் துவக்கத்தில் வெளிவர இருக்கிறது. நாளை தொடங்கவிருக்கும் 33வது சென்னை புத்தகக்காட்சி க்கு - முதல் நாள் இல்லையென்றாலும், பிற

தமிழ் சினிமா 2009 : தரவரிசை

சிறந்த படங்கள் : வெண்ணிலா கபடி குழு அயன் உன்னைப் போல் ஒருவன் ப‌ழசிராஜா ஈரம் பேராண்மை யாவரும் நலம் திருதிரு துறுதுறு ரேனிகுண்டா மாயாண்டி குடும்பத்தார் நல்ல படங்கள் : கந்தசாமி நாடோடிகள் யோகி நான் கடவுள் வாமனன் லாடம் நியூட்டனின் மூன்றாம் விதி கண்டேன் காதலை QUICKGUN முருகன் அச்சமுண்டு! அச்சமுண்டு! சுமாரான‌ படங்கள் : வேலுப்பிரபாகரனின் காதல் கதை நினைத்தாலே இனிக்கும் வேட்டைக்காரன் மலை மலை சிவா மனசுல சக்தி காதல்னா சும்மா இல்லை கார்த்திக் அனிதா மதுரை சம்பவம் மதுரை to தேனி நான் அவன் இல்லை - 2 மோசமான தமிழ் படங்கள் : ப‌சங்க ‌ சர்வம் பொக்கிஷம் ஆதவன் படிக்காதவன் மரியாதை ஆறுமுகம் ஆனந்த தாண்டவம் மோதி விளையாடு வில்லு அடுத்து வருவது : சுமாரான‌ தமிழ் திரைப்படங்கள் - 2009 ...

TWITTER HACKED!

Image
Seems twitter has been hacked by somebody named " Iranian Cyber Army ", just now.. (updated on December 18, 2009, 11:50AM IST) ********************* twitter is back.. (updated on December 18, 2009, 12:30PM IST) ********************* Coverage from TechCruch about the hack.. (updated on December 18, 2009, 04:10PM IST)

சிறந்த த‌மிழ் படங்கள் (1975-2009)

1975 - அபூர்வ ராகங்கள் 1976 - மூன்று முடிச்சு 1977 - பதினாறு வயதினிலே 1978 - அவள் அப்படித்தான் 1979 - உதிரிப்பூக்கள் 1980 - வறுமையின் நிறம் சிகப்பு 1981 - தில்லுமுள்ளு 1982 - மூன்றாம் பிறை 1983 - சலங்கை ஒலி 1984 - தாவணி கனவுகள் 1985 - முதல் மரியாதை 1986 - மெளன ராகம் 1987 - நாயகன் 1988 - அக்னி நட்சத்திரம் 1989 - அபூர்வ ச‌கோதரர்கள் 1990 - அஞ்சலி 1991 - தளபதி 1992 - தேவர் மகன் 1993 - ஜென்டில்மேன் 1994 - மகாநதி 1995 - பம்பாய் 1996 - இந்தியன் 1997 - இருவர் 1998 - உயிரே 1999 - முதல்வன் 2000 - ஹே ராம் 2001 - ஆளவந்தான் 2002 - கன்னத்தில் முத்தமிட்டால்... 2003 - பாய்ஸ் 2004 - விருமாண்டி 2005 - த‌வமாய் தவமிருந்து 2006 - வேட்டையாடு விளையாடு 2007 - பருத்தி வீரன் 2008 - தசாவதாரம் 2009 -

சகா : சில குறிப்புகள் - 10

சகாவுக்கு குறைந்தபட்சம் நூறு ரயில் சினேகங்களாவது இருக்கும் (till now and counting...!) - அத்தனையும் பெண்கள். உடன் பயணிக்கும் ஆண்கள் யாருடனும் - டி.டி.ஆர் உட்பட - அவன் அதிகம் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. அதுவே பெண்ணென்றால் பயணம் முடிவதற்குள் குறைந்தபட்சம் செல்பேசி எண்களாவது பரஸ்பரம் பரிமாறப் பட்டிருக்கும். அதிகபட்சம் எச்சில். அப்படி தான் ஒருத்தி ரயிலிலிருந்து இறங்கும் போது சகாவிடம் "வேணாங்க, அவருக்கு தெரிஞ்சா வெட்டியே போட்ருவாரு" என்றாள், அழும் கைக்குழந்தையை தோளில் சாய்த்து சமாதானப்படுத்திக் கொண்டே. பின்னாலேயே வந்த அந்த‌ 'வெட்டுபவர்' சகாவை விரோதமாய்ப் பார்த்துக் கொண்டே இறங்கிப் போனார். அவள் திரும்பிப் பார்க்கவேயில்லை. சகா த‌ன் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அதில் அழுத்தமாய் ஒட்டியிருந்த அவள் குங்குமம் இன்னமும் காய்ந்திருக்கவில்லை. ********************** இத்த‌னை பெண் சகவாசத்தில் திளைத்திருந்த போதும், சகாவிட‌மிருக்கும் பிரத்யேக குணம் என்னவென்றால், எந்தக் காலத்திலும் யார் பின்னாலும் அவன் அலைந்து திரிந்ததில்லை. எல்லாம் தானாய்க் கனிந்தவை. இப்படிப்பட்ட ஒரு கம்பீர‌ப

I AM BACK!

தலைப்பை பில்லா (2007) ஸ்டைலில் சொல்லிப் பார்த்து, அல்டிமேட் ஸ்டாரை அவமானப்படுத்தாதீர்கள். உடன் என்னையும். I mean it! ******* Marjolein Katsma என்ற ஆசாமியின் iamback.com என்ற வலைதளத்தை மேய்ந்திருக்கிறீர்களா? சரியான ஊர்சுற்றி போலிருக்கிறது. ******* எதனால் பதிவெழுத முடியாதிருந்ததோ, அதே காரணத்தால் பழசிராஜா, 2012, Jail, யோகி படங்களை இன்னும் பார்க்கவில்லை. Have to. ******* இந்நாட்களின் ஒரே ஆறுதல் இளையராஜாவின் Paa . அதுவும் 'Mudhi Mudhi Ittefaq Se' பாடல். ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் Scintillating. ******* 33வது சென்னை புத்த‌க கண்காட்சி இம்முறை கொஞ்சம் முன்னதாகவே நடக்கிறது (30‍ டிசம்பர் 2009 - 10 ஜனவரி 2010, அதே இடம்). ******* ஆம்! அகநாழிகை வெளியீடாக பதிவர் நர்சிமின் முதல் புத்தகம் இந்தப் புத்தகக் காட்சிக்கு வருவதாக அறிகிறேன். மகிழ்ச்சியும் வாழ்த்தும்! ******* பூக்களிலிருந்து சில புத்த‌கங்கள் : மாதவராஜ், பவா. செல்லத்துரை முயற்சியில் பதிவர்களின் படைப்புகள் 3 தொகுப்புக்களாக‌ புத்தக்காட்சிக்கு வருகிறது. ******* ப்ளாக் எழுதாம‌ல் இருந்தது அவஸ்தையாகத் தான் இருந்தது. It's really r