Posts

Showing posts from May, 2010

செகண்ட் இன்னிங்ஸ்

Image
அகநாழிகை : ஜூன் 2010 இதழில் 'சுதந்திரம்' பற்றி‌ மளையாள எழுத்தாளர் பால் ஸக்கரியா ஷோபா வாரியருக்கு (rediff.com) அளித்த‌ நேர்காணல் - மொழிபெயர்ப்பு என்னுடையது - வெளியாகியுள்ளது. உடன் எனது சில கவிதைகளும். மேலும் விவரங்களுக்கு - http://www.aganazhigai.com/2010/05/2010.html

சகா : சில குறிப்புகள் - 12

Image
ச‌கல தேசங்களின் கலாசாரப் பின்புலங்களிலிருந்தும் நம் சகாவுக்கு பெண்வழித் தொடர்புகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதிலொருத்தி சுப்ரியா (பெயரை ஆதி நீடலுக்கு உட்படுத்தி ஆபாசமாக்கி விட வேண்டாம் எனபது சகாவின் தாழ்மையான வேண்டுகோள்!). பன்னிரண்டாம் வகுப்பில் சகாவின் வகுப்புத் தோழியான இவள் பின் இளங்கலை தத்துவ இயல் படிக்க ஜப்பான் சென்று, தொடர்ந்து அங்கேயே அதே துறையில் முதுகலையும் படித்து கடந்த ஆண்டு தான் இந்தியா திரும்பினாள். ஜப்பானிலிருந்த ஐந்து ஆண்டுகளும் தொடர்ந்து மின் அஞ்சல், மின்னாத அஞ்சல் எல்லாவற்றின் உதவியுடனும் சகவுடனான தனது பரிசுத்த நட்பைப் பேணிப் பாதுகாத்து வந்தவள், இந்தியா திரும்பியதும் செய்த முதல் வேலை சகாவை தன் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தது தான். விருந்து என்றால் நீங்கள் நினைப்பது போல் ஆளுயர வாழையிலை இட்டு, தண்ணீர்த்துளி தெளித்து, பொன்னி அரிசிச்சோறு பொங்கி, சாம்பார், குழம்பு, கூட்டு, அவியல், பொறியல், ரசம், தயிர், மோர், அப்பளம், வடை, பாயாசம் சகிதம் பிரமாதப்படுத்தும் நம்மூர்த் தமிழ்ச்சமையல் அல்ல. ஜப்பானிய பாரம்பரிய முறைப்படியிலான சஷிமி மற்றும் சுஷி என்ற வினிகர் தடவ

தமிழ் கௌபாய்

Image
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் . எனக்குத் தெரிந்தவரை, கடந்த 25 ஆண்டுகளில் தமிழில் வெளிவந்திருக்கும் முதல் கௌபாய் படம் இது தான் (கடைசிப் படம் என்ன? - ரஜினி நடித்த தேவரின் தாய் மீது சத்தியம் ?). இது போன்ற மாற்றுக்களங்களில் தான் ராஜாதி ராஜா என்பதை இரண்டாவது முறையாக நிரூபித்திருக்கிறார் சிம்புத்தேவன். டைட்டில் கார்ட் தொடங்கி படம் முழுக்க முழுக்க இஞ்ச் பை இஞ்ச்சாக அவரது அதிரடி அடாவடி அட்டகாச ராஜ்யம் தான். நடிப்பில் ஜொலிப்பவர்கள் நாசரும், எம்.எஸ்.பாஸ்கரும். அப்புறம் அந்த மூன்று அழகான நாயகிகள் (பத்மப்ரியா, லக்ஷ்மி ராய், சந்தியா). அதற்கு அடுத்துத் தான் லாரன்ஸைச் சொல்ல வேண்டும். தவிர‌ மனோரமா, ராகவன் தொடங்கி மௌலி, இளவரசு வரையிலான‌ நட்சத்திரங்கள் எல்லோரைப் பற்றியும் தனித்தனியே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். ஒளிப்பதிவும் (அழகப்பன்), கலை இயக்கமும் (முத்துராஜ்) தான் இந்த பீரியட் படத்தின் தொழில்நுட்ப முதுகெலும்பு. திரைக்கதையும் ஓக்கே. பொதுவாய்ப் பின்னணி இசையில் மிளிரும் சபேஷ்-முரளி (இரும்புக்) கோட்டை விட்டிருக்கிறார்கள்.‌ பாடல்கள் பற்றியும் ஒன்றும் சொல்வதற்கில்லை. தேசிய விருது பெற்ற

அவ்வப்போது கிறுக்கியவை

எனக்கு பெண்களின் புத்திசாலித்த‌னத்தின் மேல் எப்போதுமே அத்தனை பிரமாதமான மரியாதையில்லை என்பதை (அதற்கான நியாய தர்க்கங்களும், வரலாற்றுக் காரணங்களும் ஆந்த்ரபோலஜியில் ஒளிந்திருக்கின்றன என்ற போதிலும்) ஆங்காங்கே நேரடியாகவும் மறைமுகமாகவும் பதிவு செய்து வந்திருக்கிறேன். விதிவிலக்குகள் உண்டு - ஒருவர் அம்பை; மற்றவர் பெயர் சொல்லவியலாது. ஆனாலும் அவர்களைப் பிடிக்கவே செய்கிறது. ******* ரோட்டில் எச்சில் துப்புபவர்களைப் பார்த்தால் சிகரெட்டால் சுட வேண்டுனெத் தோன்றுகிறது; பொதுவிடத்தில் புகைப்பவர்களைப் பார்த்தால் நன்கு காறி உமிழ வேண்டுனெத் தோன்றுகிறது. ******* அவன் சிற்றிதழ்களுக்கு ஆயுள் சந்தா செலுத்துபவன் போல் இருந்தான். ******* விளையும் பயிர் முளையிலே தெரியும்; விளையும் உயிர் முலையிலே தெரியும். ******* ஆண் ஒரு பெண்ணை ஒன்று அம்மனாய்ப் பார்க்கிறான்; அல்லது அம்மணமாய். ******* தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச்செய்தியால் (கவனிக்கவும் மரணம் அல்ல; மரணச்செய்தி) மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். இதுவும் கடந்து போகும். ******* முகம் பார்த்துப் புணரும் உயிரினம் மன

சில சிந்தனைகள் - 7

நேற்று ஈரோடு ரயில் சந்திப்பின் முதலாவது நடைமேடையிலிருந்த புத்தகத் தள்ளு வண்டி ஒன்றில் (பெயர் ஹிக்கின்பாத்தம்ஸ்!) எனது ' சந்திரயான் ' புத்தகம் விற்பனைக்கு இருந்தது. புத்தகக்காட்சி, வலைதளம் தவிர்த்து எனது புத்தகம் விற்பனையிலிருப்பதைக் காணும் முதல் வெளியிடம் இது தான். கடைக்காரரிடம் ஒரு மெலிதான புன்னகையுடன் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு (' ஆத்தர் ' என்கிற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தினேன்), மருதனின் ' இரண்டாம் உலகப் போர் ' வாங்கிக் கொண்டு நகர்ந்தேன். " ஈன்ற பொழுதினும் பெரிதுவக்க " என்பது இது தான் போலும். ‌ கிழக்கின் வீச்சும் ரீச்சும் எப்போதும் தனி தான். ******* ரெண்டு தான் நான் படிக்கும் பா.ராகவனின் முதல் ஃபிக்ஷன் எழுத்து. கதையின் முடிவு தவிர்த்து (அது எனக்குப் புரியவில்லை!) நாவல் முழுக்கவே படிப்பதற்கு மிகச்சுகமான அனுபவமாக இருந்தது. கல்லூரி காலத்தில் திரைப்படங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த‌ போது என்னிடம் குறைந்தபட்சம் இருபது திரைக்கதைகளுக்கான ஒன்லைன்கள் இருந்தன. அவற்றில் ஒன்று ஒரு பெண் இரண்டு ஆண்களோடு வாழ்கிறாள் என்று கிட்டதட்ட இதே கதைக்களம் தான்.

பேயோனின் நுண்பதிவுகள்

Image
பேயோன் என்பவர் ட்விட்டர் வாயிலாக எனக்கு அறிமுகம். சும்மா மற்றவர்கள் போல் சாப்பிட்டேன், தூங்கினேன், வாயு பிரித்தேன் என்பதாக‌ இல்லாமல் நிஜமாகவே சுவாரசியமானவை இவரது ட்வீட்டுரைகள். இணையதளத்திலும் அவ்வப்போது எழுதி வருகிறார். சில முக்கியமானவை. குறிப்பாய், சமீபத்தில் இவர் எழுதியிருக்கும் " அடுத்த வாரத் தொடர்ச்சி " என்கிற குறுங்கதை வசீகரமானதொரு முயற்சி. ஜெயமோகன் ஒரு முறை இவரை அறிமுகப்படுத்தி பதிவெழுத ப் போய், அவர் தான் பேயோனோ என சந்தேகப்பட ஆரம்பித்து விட்டனர். எப்படியோ, தற்போது அவரது ஆயிரம் ட்வீட்களின் தொகுப்பு புத்த‌கமாக ஆழி பதிப்பக வெளியீடாக வருகிறது. ட்வீட் என்பதை நுண்பதிவு, துண்டிலக்கியப்பிரதி எனப் பலவாறாக அழைக்கிறார். இதன் மென்புத்த‌க வடிவம் இணையத்திலேயே அவரது தளத்திலேயே கிடைக்கிறது. மேலிருக்கும் புத்த‌கத்தின் அட்டைப்படத்தை அதன் அங்கதத்தைக் கவனியுங்கள். எனக்கு கழிவறையில் அமர்ந்து சுடோகு புதிரவிழ்க்கும் என் சினேகிதன் ஞாபகம் வருகிறது.

சந்திரயான் - FAQs

‘சந்திரயான்’ புத்தகம் : அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் 1. இந்தப் புத்தகம் யாருக்கானது? உண்மையைச் சொல்லப் போனால் எல்லோருக்குமானது - அதாவது தமிழ் வாசிக்கத் தெரிந்த எல்லாருக்குமானது. சந்திரயான் இந்திய அறிவியல் ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு மைல்கல்; ஒரு மகத்தான சாதனை. அதைப் பற்றி அறிந்து+புரிந்து கொள்வது என்பது ஓர் இந்தியப் பிரஜையாக நம் ஒவ்வொருவரின் கடமை+உரிமை. அந்த விஞ்ஞான வெற்றியின் கதையை த‌மிழர்களுக்கு, குறிப்பாய் இளைய சமுதாயத்தினருக்கு எளிய மொழிநடையில் முழுமையாக சுவாரசியமாகச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு முனைந்து எழுதப்பட்டதே இந்நூல். இந்நூலைப் படித்து ஒரு மாணவனேனும் மாணவியேனும் விண்வெளி ஆராய்ச்சியில் தன் வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் அதுவே இதன் வெற்றி. மற்றபடி, எந்த வயதினரும், எந்தப் பாலினரும், எந்தப் பணியினரும் வாசிப்பு சுவாரசியம் அல்லது பொது அறிவு என்கிற இரண்டுள் ஏதாவதைக் காரணம் வைத்து இந்நூலைத் தாரளமாக வாங்கிப் படிக்கலாம். அவற்றிற்கு நான் உத்திரவாதம். 2. இது சந்திரயான் பற்றிய முதல் புத்தகமா? நேர்மையாக பதிலிறுக்க வேண்டுமெனில், இல்லை. ஆனால் இந்தப் புத்தகம் எழுத ஆரம்பித்த போது ச

படித்தது / பிடித்தது - 85

அவ்வப்போது உதித்தவை பலமுறை ஹாரன் அடித்தும் நடுத்தெருவில் உறக்கம் கொண்டிருந்த பிஸ்கட் கலர் நாய் அசைந்த பாடில்லை. ஒரு வழியாய் சைடு வாங்கி பற்பல வார்த்தையால் ட்ரைவர் ஏசி வண்டியைக் கிளப்பிய போது பின்பக்கம் பார்த்தேன் அசையா அந்நாயின் உருவம் கேட்டது “உன் படுக்கை அறையில் நான் நுழைந்தால் நீ வழிவிடுவாயா என்ன?” யார் இடத்தை யார் அபகரித்தார்கள் என்று இடம் சொல்லாதவரை “நாயைக் குழிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும் நக்கித்தான் குடிக்கும்” என்ற பழமொழியும் வாகன சக்கரங்களில் மசிந்த நாயின் குடல் எச்சங்களும் இருக்கத்தான் செய்யும். - இயக்குநர் ராம் நன்றி : காட்சி

சுறாவும் சில சூ..க்களும்

Image
" கதை கேட்கும் போது விஜய் மூளையை எங்கே சூ..க்குள் சுருட்டியா வைத்திருந்தார்? " விஜய்யின் ஐம்பதாவது படமான சுறா வுக்கு வலையில் படிக்கக் கிடைத்த (எதிர்மறை) விமர்சனம் ஒன்றில்‌ வரும் வரி இது. படத்தின் கதை அசட்டுத்தனமானது அல்லது அரதப்பழசு என்பது தான் இது சொல்ல வரும் ஆதார செய்தி. கடந்த பத்து வருடங்களில் விஜய் நடித்த படங்களில் தொன்னூறு சதவிகிதம் ஜனரஞ்சகம் என்று சொல்லப்படும் வணிக சினிமாவின் ஒரே மாதிரியான கதையமைப்பையே கொண்டிருப்பவை. அதாவது ஹீரோயிஸம், செண்டிமெண்ட், காமெடி, பாடல்கள், சண்டைக்காட்சிகள், கொஞ்சம் க்ளாமர் ஆகியவற்றின் விகிதாசாரப்படியிலான காட்சிகளின் கலவை. இதை விஜய்யும் பல்வேறு தருணங்களில் வெளிப்படையாக சொல்லி வந்திருக்கிறார். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், விஜய் மட்டுமல்ல இதற்கு முன்பே எம்.ஜி.ஆர்., ரஜினி ஆகியோர் பின்பற்றி வெற்றி கண்ட அதே பாரம்பரிய முறைமை தான் இது.‌ சுறா படமும் விதிவிலக்கின்றி அதே பாணியைத் தான் பின்பற்றியிருக்கிறது. இதில் அதிர்ச்சிக்குள்ளாகவோ, ஆச்சரியம் காட்டவோ, ஆதங்கப்படவோ என்ன இருக்கிற‌து என்று எனக்கு நிஜமாகவே புரியவில்லை. மேற்கண்ட பிருஷ்ட விமர்சகரைப்