அணுசக்தியும் அறிவுஜீவிகளும்

இரு நாட்களுக்கு முன் ட்விட்டரில் ரோஸாவசந்தும் நானும் அணுசக்தியின் அபாயங்கள் குறித்து (அடியேன் உள்ளிட்ட) அரைகுறை அறிவியல்வாதிகள் கொண்டிருக்கும் மெத்தன‌ நிலைப்பட்டைப் பற்றி நிகழ்த்திய‌ குறுவிவாதம் இது:

*******

rozavasanth : அறிவியல் அறிந்த எவருக்கும் அணு உலை ஒப்புமைக்கு அப்பாற்பட்ட ஆபத்து, அணுக்கழிவை சமாளிக்க எந்த வழியும் இல்லை என்பது நிச்சயம் தெரியும். ஆனால் இங்கே அறிவியலுடன் தொடர்பற்ற எளிய மக்கள் அணு உலையை எதிர்த்து போரடுகிறார்கள்; அறிவியல் அறிந்தவர்கள் கூசாமல் பொய் சொல்கின்றனர்.

writercsk : அபாயம் இல்லவே இல்லன்னு சொல்லலை. ரிஸ்க் எடுத்துத் தான் ஆகனும் என்பது தான் நிலை. நான் கூடங்குளத்தில் வசித்தாலோ, பெங்களூரில் உலை திறக்கப்பட்டாலோ கூட இதையே தான் சொல்வேன். தேசவளர்ச்சிக்காக ரிஸ்க்.

rozavasanth : ரிஸ்க் எடுப்பது' என்பதில் நிகழ்தகவு உண்டு என்பதால் சாமர்த்திய வாதம்; அணுக்கழிவு விஷயத்தில் சொல்வது அத்தனையும் பச்சை பொய்தானே.

writercsk : அத்தனையும் என்று சொல்ல முடியாது. ஆனால் நிறைய மழுப்புகிறார்கள் என ஒப்புக் கொள்கிறேன்.

rozavasanth : 'பிரச்சனையில்லை, சமாளிக்க முடியும்' என்பது தெரிந்தே சொல்லும் பொய்; விளக்கமளிக்கும்போது செய்வது மழுப்பல்.

writercsk : வெடித்துச் சிதறி பேரழிவு நிகழ சிறிய வாய்ப்பு இருக்கிறது, ஆனால் முயற்சிக்கலாம் என்று வெளிப்படையாகச் சொல்லலாம் தான். ஆனால் பொதுஜனம் ஒப்புக்கொள்ளுமா? அதனால் தான் அரசாங்கம் பித்தலாட்டத்தில் இறங்குகிறது.

rozavasanth : அரசங்கத்தை விடுங்கள்; அரசாங்கத்திற்கு வெளியே இருக்கும் கலாமும் அணுக்கழிவு விஷயத்தில் மழுப்பலும், பொய்யும்தானே முன்வைக்கிறார்.

writercsk : இவ்விஷயத்தில் கலாம் அரசாங்கத்தின் ஏஜென்ட் அல்லது பினாமி. ஆனால் அதை ஆன்மசுத்தியோடு செய்கிறார்.

rozavasanth : அணுக்கழிவுகளை சமாளிக்கலாம் என்ற பொய்யை எப்படி ஆன்மசுத்தியோடு சொல்கிறார் என்று விளக்க முடியுமா?

writercsk : பொய்மையும் வாய்மையிடத்து என்ற அடிப்படையிலான சுத்தி.

rozavasanth : ஆனால் இது புரை தீர்த்த நன்மைக்கு பதில் இன்று கொஞ்சம் மின்சாரமும் எதிர்கால சமூகத்திற்கு பெரும் பிரச்சனையும் ஆபத்தையுமே பயக்கும்.

writercsk : கொஞ்சம் அல்ல, அளப்பரிய சக்தி. தேச வளர்ச்சிக்குத் தேவைப்படும் மின்சாரத்துக்கான சுருக்கு வழி.

rozavasanth : நான் கொஞ்சம் என்றது மற்ற மின் உற்பத்தி முறைகளுடன் ஒப்பிட்டு அல்ல; ஏற்படுத்தப்போகும் எதிர்கால பிரச்சனைகளுடன் ஒப்பிட்டு.

writercsk : அணுக்கழிவு ஆபத்தற்றது என்பது எப்படி அண்டப்புளுகோ அதே போன்றதுதான் அதன் அபாயம் குறித்த மிகைப்படுத்தப்பட்ட பூச்சாண்டிகளும். 

rozavasanth : இல்லை; எல்லா குப்பைகளுமே மிகையான பிரச்சனைதான்; அணுக்கழிவு பூதாகார பிரச்சனை. அணுகழிவை விடுங்கள்; பிளாஸ்டிக மற்றும் எலெக்ட்ரானிக் குப்பைகளை -பெருகும் வேகத்துடன் ஒப்பிட்டு -சமாளிக்க ஒரு வழி கூறுங்கள்.

writercsk : தொழில்நுட்பத்தின் இடையூறுகளை இன்னும் உயரிய தொழில்நுட்பம் கொண்டு அறுக்க வேண்டுமே ஒழிய தொழில்நுட்பத்தையே கைவிடுதல் தகுமா?

rozavasanth : தொழில் நுட்பம் ஒட்டுமொத்த அழிவைத்தரும் என்றால் அதை கைவிடுவதுதான் (விவேகம் மட்டுமல்ல) ஒரே வழி.

writercsk : நான் தான் சொல்கிறேனே, என் ஏரியாவில் அணு உலை வந்தாலும் போராட்ட ஷாமியானாவில் ஒளிய மாட்டேன். வரவேற்கவே செய்வேன்.

rozavasanth : நீங்க உண்மை பேசுவதாக வைத்து கொள்வோம். ஆனால் நீங்க தியாகியாக இருப்பதாற்கு சமூகம் விலை கொடுக்க முடியாதே.

writercsk : ஒட்டுமொத்த சமூகத்தையுமே இந்த தியாகத்தை செய்யக் கோருகிறேன். நாட்டிற்காக, அதன் வளர்ச்சிக்காக.

rozavasanth : உங்க பக்கத்துவீட்டுக்காரன் அலைபேசி கோபுரமில்லா இடத்தில் வீடு பார்த்துக்கொண்டு வேறு மக்களை விலைகொடுக்கச் சொல்பவன்.

writercsk : அவனைத் தான் புரிந்து கொள்ளச் சொல்கிறோம், மாறச் சொல்கிறோம். எந்தத் தொழில்நுட்பப் பிரச்சனைக்கும் விஞ்ஞானத்தில் கட்டாயம் பதிலுண்டு என்பது என் நம்பிக்கை. ஆனால் அந்தத் திறமை இந்தியாவிடம் உண்டா என்பது சந்தேகத்துக்குரியது தான்.

rozavasanth : எல்லா தொழில் நுட்ப பிரச்சனையிலும் விஞ்ஞானத்தினால் விடை காண முடியாது என்பதுதான் இன்றய விஞ்ஞான அறிவு; உங்கள் விஞ்ஞானம் குறித்த மூடநம்பிக்கையை மாற்ற நீங்கள் இன்னும் விஞ்ஞான அறிவு பெற வேண்டியுள்ளது.

writercsk : அதற்காகத் தானே இந்த விவாதமே. ஆனால் விஞ்ஞானம் தான் கடவுள், அதனால் முடியாதது எதுவுமே இல்லை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. தாமதம் வேண்டுமானால் ஆகும். ஆனால் கட்டாயம் பதிலுண்டு.

rozavasanth : அறிவியலுக்கு தொடர்பில்லா பாமரர்கள் (வேறு காரணங்களால்) சரியான அறிவியல் முடிவையும், அறிவியல் (ஓரளவு) அறிந்தவர்கள் விஞ்ஞான மூடநம்பிக்கையையும் வெளிப்படுத்துவதையும்தான் இந்த இழையின் முதல் கீச்சில் சொல்லவந்தேன். என் கருத்துக்கு @writercsk வலு சேர்த்திருக்கிறார்; நன்றி.

******

"அறிவியல் ஓரளவு அறிந்தவன்" என்ற அடையாளத்தைக் காட்டிலும் "அறிவியல் மாணவன்" என்ற அடையாளம் எனக்குப் பொருந்தும் என நினைக்கிறேன். தவிர, அறிவியலை நம்புபவன்; அறிவியலை மட்டும் நம்புபவன்.

Comments

Gopikrishnan said…
அறிவியலை நம்புவது வேறு! அறிவியலாளர்களை நம்புவது வேறு அல்லவா! இந்த உலையால் கிடைக்கும் மின்சாரம் வெகு குறைவு, ஆனால் ஆபத்து மிக அதிகம் என்று விவாதிக்கபடுகிறதே.. ??
Gopikrishnan said…
அறிவியலை நம்புவது வேறு! அறிவியலாளர்களை நம்புவது வேறு அல்லவா! இந்த உலையால் கிடைக்கும் மின்சாரம் வெகு குறைவு, ஆனால் ஆபத்து மிக அதிகம் என்று விவாதிக்கபடுகிறதே.. ??
Sridharbabu said…
Nuclear plant, it has all standard procedures, safety drills and well sophisticated state of art control systems. All the systems are reliable (as per specifications). This is where the problem starts, I am questioning this reliability. Even-though the geology says that the location of the Indian coastal line is well clear of the tectonic plate boundary, still the plate tectonics is not fully studied and still our(world) scientists are not having enough study or research details for the minor fault lines located inside the tectonic plates. All the sophisticated systems for Nuclear plant are well designed and too well advanced with the current research and technology but if anything happens beyond the specifications how the reactor is going to withstand. Think about the catastrophic Mega disaster which we didn't see till now, what happens to the nuclear reactor when such kind of large scale disaster happens. if it happens,

1. Do we have proper technology to control the radiation
2. Do we have proper technology for Nuclear waste treatment
3. Is it possible for you to protect your future generation
4. Is it possible to build a new Home and live peacefully near crippled nuclear power plant.

If a Nuclear plant fails, Just build a concrete around the plant and close it.

If I am not wrong, Half life of a nuclear waste itself is more than 100000years, Why we need to protect the waste for these many years when we don't know any way for how to degrade it.

Any waste can be left alone but not the nuclear waste.

Nuclear disaster cannot be compared with anything as people use to say silly example of plane crash, Tsunami, earthquake or even cyclone Thane's impact.

The height of Tsunami that hit the Fukushima plant was 13m~15m. They made some planning before the construction of the plant and the nuclear plant was well guarded by 10m shield wall for tsunami. They thought 10m is enough to withstand even a catastrophic disaster but it all happened the other way. We cannot say 25m can be more safer for KKNP. The maximum height of tsunami in some places of Northern Japan were 35m unimaginable and I think we Indians became more familiar to tsunami only after the 2004 Indian ocean quake, where the maximum height of tsunami reached in Indonesia was 40m...! And too add, the Fukushima reactor was not directly affected by the Tsunami, the back up generators and other systems which help for the automatic shut down of the reactors were washed away totally by tsunami leaving the giant core alone for its survival, from where the problem raised. I hope, we know the present situation in Japan. 20km radius of valuable land became useless, No entry zone and there are so many other things happening. What ever be the merits of KKNP due to the technology advancements, you never know the negative scenario unless and until if something happens like what happened here in Japan. There can be many technology advancements in KKNP. My small opinion is about the fact in it, once if anything happens in an unimaginable scale, the present technology will not survive beyond its threshold and my strong belief is that the technology invented by human-being is not going to be eternal and also we cannot set a limit for the nature and its forces. This is the place where the technology bends down. we need to have one small thinking, "Nuclear energy nullifies everything". The impact of a nuclear plant disaster cannot be compared with any other man made disasters which is not good for human race. Can this selfish human-beings 100% guarantee the survival of KK (Koodankulam). No and Never...! "There are so many better ways to generate steam............!"
Anonymous said…
Y do they start in Tamil naru? They may try in Delhi ? Bcoz they think tamils like rats for experiments. If some think happened like Japan tsunami India can't control anything , even they can't manage road traffic

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்