களவுக்கோட்டம்

சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலுக்கு நான் எழுதிய விமர்சனக் கட்டுரை இன்றைய தமிழ் பேப்பர் இதழில் வெளியாகி இருக்கிறது. நான் படித்ததிலேயே ஆகச்சிறந்த வரலாற்று நாவல் காவல் கோட்டம் என்பது தான் விமர்சனத்தின் ஒன்லைன். சமீபத்திய எனது கட்டுரைகளில் எனக்குப் பிடித்தமானது இது தான்.

காவல் கோட்டம் – ஓர் அனுபவம் : http://www.tamilpaper.net/?p=5302

"காவல்கோட்டத்திற்கு நிகராக ஏதேனும் ஒரு படைப்பு கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்து அது புறக்கணிக்கப்பட்டதாக ருசுப்பிக்கப்பட்டால் நான் பெறும் விருது பரிசு லட்ச ரூபாயை அந்தப் படைப்பிற்கு தருகிறேன்" என்று சு.வெங்கடேசன் அறிவித்திருப்பதாகத் தெரிகிறது. பதிலுக்கு மனுஷ்யபுத்திரன் "தமிழில் இதுவரை சாகித்ய அகாதமி விருது மறுக்கப்பட்ட எழுத்தாளர்களைவிட வெங்கடேசன் தான் முக்கியமான எழுத்தாளர் என நிரூபித்தால் அவருக்கு நான் ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கிறேன். மேலும் காவல் கோட்டத்தை ஒரு அசலான நாவல் என்று நிரூபித்தால் மேலும் ஒரு இலட்சம் ரூபாய் அளிக்கத் தயாராக இருக்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார். இதில் மனுஷ்யபுத்திரன் சொல்லும் முதல் லட்சம் ரூபாய் விஷயம் அபத்தமானது என்பதை கட்டுரையிலேயே இவ்வகை விமர்சனங்களை முன்வைத்து விவாதித்திருக்கிறேன்.

சாகித்ய அகாதமி சிறந்த படைப்பாளிகளுக்கான பரிசல்ல; கடந்த மூன்றாண்டுகளில் வெளியானவற்றுள் சிறந்த படைப்புக்கான பரிசு மட்டுமே. அதாவது இப்பரிசு ஒரு படைப்பாளியின் ஒட்டுமொத்த இலக்கிய அந்தஸ்துக்கு அளிக்கப்படும் சான்றிதழ் அல்ல; அவரது ஒரே ஒரு படைப்புக்கு வ‌ழங்கப்படும் அங்கீகாரம் மட்டுமே. மற்றபடி, மனுஷ்யபுத்திரன் இரண்டாவது லட்ச ரூபாயை வெங்கடேசனுக்குத் தர‌ வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்