இளம் விமர்சகர்

காவல் கோட்டம் பற்றிய ஒரு கடிதத்துக்கு பதிலெழுதுகையில் எனது விமர்சனத்தைக் குறிப்பிட்டிருந்தார் ஜெயமோகன்.

காவல்கோட்டமும் தோழர்களும் - http://www.jeyamohan.in/?p=25268

*******

நாவலைப்பற்றி நான் விரிவாக எழுத இரு காரணங்கள். ஒன்று, அதில் இருந்த மார்க்ஸிய முரணியக்கவியல் அணுகுமுறை. அது எனக்கு எப்போதுமே உவப்பானது. ஒவ்வொரு வரலாற்றுச் சக்தியும் நேர் எதிரான இன்னொரு வரலாற்றுச் சக்தியினால் முரண்பட்டு இயக்கப்படுகிறது என்ற மார்க்ஸிய வாய்ப்பாட்டுக்கு மிக விசுவாசமான நாவல் காவல்கோட்டம்.

மார்க்ஸிய அணுகுமுறையைத்தான் நானும் வரலாற்றில் போட்டுப்பார்ப்பேன், ஆனால் வெங்கடேசன் போல அதை சொல்மாறாத சூத்திரமாகக் கொள்ளமாட்டேன். எனக்கு அது வரலாற்றின் புற விசைகளை மட்டும் அறிய உதவும் ஒரு கருவி மட்டுமே. ஆனாலும் வெறுமே கதைசொல்லுவதற்கு அப்பால் சென்று வரலாறு செயல்படும் விதத்தை எழுத முயன்ற முதல்நாவல் காவல்கோட்டம் என்பது எனக்கு முக்கியமாகப் பட்டது – எப்படி அதைச்செய்திருக்கிறார் என விரிவாக எழுதியிருக்கிறேன்.

இந்தக் காரணத்தால்தான் மார்க்ஸிய விமர்சகரான ஞானியும் காவல்கோட்டத்தைத் தமிழின் தலைசிறந்த வரலாற்றுநாவல் என்று சொல்கிறார். திராவிடச்சார்புள்ள வரலாற்றாய்வாளரான ஆ.இரா. வெங்கடாசலபதியும் தமிழின் முக்கியமான வரலாற்றுநாவல் என்கிறார். அவர்களையும் இந்துத்துவர் என்று சேர்த்துக்கொடுத்தால் நல்லது. காவல்கோட்டத்தை அப்படிப் புகழ்ந்த இளம் விமர்சகர் பலர் இருக்கிறார்கள். [போகிற போக்கைப்பார்த்தால் தமிழகத்தில் இந்துத்துவர்கள் ஆட்சியையே பிடித்துவிடுவார்கள் போலிருக்கிறதே]

*******

Comments

Popular posts from this blog

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

CSK Diet

2002 குஜராத் - தெகல்கா புலனாய்வு