அம்ருதா ஃபிப்ரவரி 2012 இதழில் சென்ற வருட மருத்துவ நொபேல் குறித்து நானெழுதிய விரிவான 5 பக்க கட்டுரை 'யாக்கையின் பிணிப்போர்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
இக்கதை எழுதப்படும் நாளிலிருந்து * ஓராண்டு, ஒரு மாதம், 25 நாட்கள் எதிர்காலத்தில்… தீஸ் ஜனவரி மார்க்கிலிருந்த ‘காந்தி ஸ்மிருதி’ மாலை ஐந்து மணியின் குளிர்ச்சியில் சிலிர்த்திருந்தது. மஹாத்மா நினைவு நாள் என்பதையும் கடந்து ஜனம் அதிகமில்லை. மரணத்தை நோக்கி காந்தி இறுதியாக நடந்து சென்ற பாதையை அடையாளப்படுத்த அவரது பாத ரட்சைகளின் வடிவை சிமெண்ட்டில் புல்வெளி நடுவே பதித்திருந்தனர். அங்கே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் அருகருகே முகம் பார்த்துக் கைப் பிடித்தவாக்கில் நின்றிருக்க, மற்றொரு பெண்மணி சற்று விலகி நின்று அவர்களைப் பார்த்திருந்தார். தன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஐஸ்க்ரீமைக் கண்ட குழந்தை கணக்காக தாராவின் கண்களில் வழியும் காதல் ஈஸ்வரனுக்குப் பிடித்தமானது, பெருமிதமானது. தனது அத்தனை வெற்றிகளையும் பிடித்த பெண்ணின் பாதத்தில் சமர்ப்பித்து அவளது காதலை வென்றெடுப்பதையே ஓர் ஆண் ஆகச் சிறந்த பெருமையாகக் கருதுகிறான்! முலைகள் அழுந்தும் கூச்சமின்றி ஈஸ்வரனைக் கட்டி அணைத்துக் கொண்டாள் தாரா. அவன் பக்கல் கொழுப்பு செழித்த அவளது கன்னத்தில் மென்முத்தமிட்டுச் சொன்னான் - “பயப்படாதே! பத்திரமாப் போயிட்டு வா.” தாரா த...
[முன்குறிப்பு: ஏஐ பற்றி அச்சம் உண்டாக்குவதற்காக இக்கட்டுரையை எழுதவில்லை. அதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஊட்டி, அது கொணரப் போகும் சிக்கல்களை எதிர்கொள்ள நமது மனதைத் தயார் செய்து கொள்ளும் பொருட்டே எழுதுகிறேன்.] “The development of full artificial intelligence could spell the end of the human race.” - Stephen Hawking ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு - துல்லியம் போதாததால் நான் ‘செய்யறிவு’ என்ற சொல்லை ஏற்கவில்லை - பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட காலமாகவே எண்ணம் இருந்தும் ‘ஆண்டான்’ உள்ளிட்ட எழுத்துப் பணிகள் காரணமாக அதைச் செய்யவில்லை. இப்படித் தாமதமாகும் விஷயங்கள் என் ToDo List-ல் இருந்து சில காலம் கழித்து எழுதி விடுவேன் - அப்படிச் சிலவற்றை ஓராண்டு கழித்தும் எழுதி இருக்கிறேன். பொதுவாக ஆரம்பத்தில் எழுத நினைத்ததற்கும் காலங்கடந்து பிற்பாடு எழுதுவதற்கும் பெரிதான வித்தியாசங்கள் ஒன்றும் இராது - நவீனத் தொழில்நுட்பம் ஒன்றைப் பற்றிய கட்டுரை என்றாலும் கூட. ஆனால் ஏஐ பற்றி ஆறு மாதம் முன் எழுத நினைத்த கட்டுரை வேறு, மூன்று மாதம் முன் எழுத யோசித்த போது அதன் உள்ளடக்கம் நிறைய மாறி இருந்தது, இன்று எழ...
“ இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ ” - திருக்குறள் (913) “கன்னிப் பொணம் விழுந்திருச்சு!” ஊர் முழுக்க இதே பேச்சாய் இருந்தது. டீக்கடையில், பொதுக் கழிப்பிடத்தில், வீட்டுத் திண்ணையில், முச்சந்திக் கிணற்றடியில், சீட்டுக் கச்சேரியில், எல்லா இடங்களிலும். “குப்பனுக்கு சொல்லி விட்டாச்சா?” விஷயம் கேள்விப்பட்டவர்களின் முதல் கேள்வி இதுவாகவே இருந்தது. இறந்தது யார்? எப்படிச் சாவு நடந்தது? என்றெல்லாம் பிற்பாடு தான் பேச்சு தொடங்கியது. “சடங்கு எப்ப நடக்குதாம்?” “இதென்னய்யா புதுசாக் கேட்கறீங்க? எப்பவும் போல இன்னிக்கு ராத்திரி தான்.” கண்களில் மின்னும் ஆர்வத்தை மறைத்தபடி மெல்லிய குரலில் கிசுகிசுத்தார்கள். அந்தப் பெரிய வீட்டில் பிணம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டியைச் சுற்றி தரையில் ஏராளமான பெண்கள் ஒப்பாரி வைத்திருக்க, ராமசாமி மட்டும் பிணத்தின் முகத்தைப் பார்க்க வாகாக மரச்சேர் போட்டு அமர்ந்து கொண்டு தோளில் இருந்த துண்டின் முனையைச் சுருட்டி வாய்க்கும் மூக்கிற்கும் மத்தியில் வைத்திருந்தார். ஏற்கனவே அழுதிருப்பதும் இனியும் அழத் தயார் என்பதையும் அது சொல்லியது. அவர் வயதொத்தோர் வந்து பிணத்தை வ...
Comments