தேவதை புராணம் - முன்னுரை

தேவதை புராணம் கவிதைத் தொகுப்பிற்கு நானெழுதிய முன்னுரை இன்று தமிழ் பேப்பர் இதழில் வெளியாகி இருக்கிறது.

தேவதை புராணம் - http://www.tamilpaper.net/?p=5541

சென்ற வருடம் இதே தேதியில் தான் இத்தொகுப்பு காதல் புராணம் என்ற பெயரில் தமிழ் பேப்பரில் தினத்தொடராக‌ வெளியாகத் தொடங்கியது. தமிழ் பேப்பரில் வெளியான என் முதல் எழுத்தும் அதுவே.

அதாவது இன்றைய காதலர் தினம் தமிழ் பேப்பரில் நான் எழுதத் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதையும் குறிக்கிறது. இந்த ஓராண்டில் ஒரு கவிதைத்தொடர், ஒரு சிறுகதை, ஒரு விஞ்ஞானக்கட்டுரை, ஓர் அஞ்சலிக்குறிப்பு, ஒரு பகடிக்கட்டுரை, ஓர் இலக்கிய விமர்சனம், ஒரு மொழிபெயர்ப்பு, ஓர் ஆய்வுக்கட்டுரை, ஒரு விருதுப்பட்டியல், ஒரு புத்தக முன்னுரை என பல வடிவங்களை சோதித்துப் பார்க்க இந்த எளியனுக்கு தமிழ் பேப்பர் தளமும் களமும் தந்திருக்கிறது.


இன்றும் கிட்டதட்ட ஐயாயிரம் பார்வையாளர்களுடன் தமிழ் பேப்பரில் அதிகம் வாசிக்க‌ப்பட்ட கட்டுரையாக எனது எக்ஸைல் விமர்சனக்கட்டுரை இருக்கிறது என்பது மகிழ்ச்சியே (அதற்கு காரணம் அக்கட்டுரையின் திராணியல்ல; சாரு என்கிற ஆளுமையால் உந்தப்பட்ட ரசிக / விரோத மனங்கள் என்பதும் புரிவதற்கு சிரமமானதல்ல). ஜெயமோகன் என்ற என் ஆதர்ச நாயகன் என்னைப் பாராட்டிய ஒரு சிறுபொன்கணத்தையும் நல்கியது தமிழ்பேப்பர் தான்.

இதனை சாத்தியப்படுத்திய பா.ராகவன், ஹரன் பிரசன்னா, மருதன் மற்றும் பத்ரி சேஷாத்ரி ஆகியோரை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். உடன் தமிழ் பேப்பர் இணையதளத்தின் தொடர் வாசகர்களையும்.

No comments: