பரத்தை கூற்று : சம்பங்கி மனோரஞ்சிதம்

எனது பரத்தை கூற்று கவிதைத்தொகுப்பு தொடர்பாய் சம்பங்கி மனோரஞ்சிதம் அவர்கள் எழுதிய மின்னஞ்சல் அவரது அனுமதியுடன் இங்கே பதிவிடப்படுகிறது:

*******

மதிப்பிற்குரிய எழுத்தாளர் சரவணகார்த்திகேயனுக்கு,

உங்கள் புத்தகம் டிஸ்கவரி புத்தக கடையில் வெளியாகி கொண்டிருக்கும் போது, அந்த புத்தகம் உடனே வேண்டும் என்று வேடியப்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டு இருந்தேன். அகநாழிகையில் திரு.வாசுதேவன், திரு.நேசமித்திரன், திரு.நரசிம் என்று பலரும் ஆவலை கிளப்பிக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு புத்தகம் பேசுபொருளால் சிறக்கும், சொல்பவர்களின் மொழியால் சிறக்கும். எது ஒரு புத்தகத்தை காலத்தின் கையில் கொடுக்கும் என்று சில சமயம் சொல்லி விட முடியாது. உங்கள் தொகுப்பு முன்னுரையால் சிறக்கிறது. சொல்ல வந்த சென்சிட்டிவ் ஆன விஷயத்தை உங்கள் முன்மொழிகள் தாங்கி நிற்கிறது.

வேசிகளும், அலிகளும் இறைவனின் எழுத்து பிழை. வேசிகளை வேசிகளின் பால் நின்று புரிந்து கொள்வதே கடினம். அதை பாட வேண்டும் என்று தோன்றிய நீங்கள் அபூர்வமானவர் தான். சில பதிவுகள் சம காலத்தை பேசுவதால் சிறக்கும். சில பதிவுகள் காலத்தை உடைப்பதால் பேசும். எந்த நாளும் தீரா ரணமல்லவா பரத்தையின் கூற்று. நீங்கள் பேசிய முறையால் அழுந்த பதிகிறது.

எழுத முடிந்த பார்வைக்காக, பெண் மொழிக்காக வணங்குகிறேன்.

.........................நட்புடன்.

No comments: