ஓர் எழுத்தாளனின் அரசியல் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்ச் சூழலில் எப்போதும் கலவையான கருத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. அவன் சமகால அரசியலை நேரடியாகப் பேச வேண்டும் என்பது முதல் அரசியல் குறித்து ஏதும் பேசவே கூடாது என்பது வரை அவற்றிடையே பார தூர வித்தியாசங்கள் இருக்கின்றன. இவற்றுக்கு உதாரணமாக உள்ள எழுத்தாளர்களைப் பார்க்கிறோம். மனுஷ்ய புத்திரன், இமையம், சு. வெங்கடேசன், தமிழச்சி, கனிமொழி போன்றோர் கட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கண்மணி குணசேகரன், ஜோ டி க்ரூஸ் போன்றோர் கட்சி உறுப்பினர் இல்லை என்றாலும் தீவிரமான சார்பெடுத்து அரசியல் பேசுகிறார்கள். ஜெயமோகன் மீதும் அரசியல் சார்புள்ளவர் என்ற பார்வை இருக்கிறது. ஆனால் அவர் கிட்டத்தட்ட எல்லாத் தரப்பையும் கடுமையாக எதிர்த்தும் கொஞ்சம் ஆதரித்தும் எழுதியிருக்கிறார். சாரு நிவேதிதா எல்லோரும் வியக்கும் வண்ணம் எப்போதாவது எதையாவது எதிர்த்தோ ஆதரித்தோ எழுதுவார். பெருமாள் முருகன் முற்போக்கு தரப்பு. எஸ். ராமகிருஷ்ணனோ, யுவன் சந்திரசேகரோ என்ன அரசியல் தரப்பென எவருக்கும் தெரியாது. அக்காலத்தில் ஜெயகாந்தன் வெளிப்படையான அரசியல் சார்பு...
Comments
//தமிழில் 5000 பேர் பதிவெழுதுகிறார்கள். அவர்களில் கிட்டதட்ட முந்நூற்று சொச்சம் பேரை மட்டுமே நான் தேர்ந்தெடுத்துப் படிக்கிறேன். அதனால் இதை முழுமையான அல்லது நிரந்தரமான பட்டியலாக கொள்ள இயலாது.//
அவ்வப்போது நாம் நம்மை பற்றி என்ன நினைக்கின்றோம் என்பதை நம்மை அறியாது சில வார்த்தைகள் வழியாக வெளியிட்டு விடுவோம். மேலே உள்ளதில் நீங்கள் மட்டுமே என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தினீர்கள்? அது ரைட்டர் ஜெயகாந்தன் சொன்னது போல் அடக்கம் போன்றதொரு அகம்பாவம். என்னோடு படித்த ஒருவன் பெங்களூரில் இன்று ஹச்.சி.எல்லில் மென்பொருள் துறையில் இருக்கிறான். அவனை எதேச்சையாக நான் சந்திக்க என்னடா செய்ற என்றேன். அதற்கு அவன்,"பெங்களூர்ல ஹச்.சி.எல் ங்குற கம்பெனியில் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்" என்று சொன்னான். ஹச்.சி.எல் என்ற கம்பெனியை நாடே அறியும். ஆனால் அவனோ ஒன்னும் தெரியாதவனைப் போல் ஹச்.சி.எல் என்ற கம்பெனியில் என்று பேசுகிறான். அதுதான் அடக்கம் போன்றதொரு அகம்பாவம்.
எனக்கு நீங்கள் பயன்படுத்தும் அடியேன் என்பதற்கும் சுஜாதா பயன்படுத்திய அடியேனுக்கும் வித்தியாசம் உண்டு என்றே தோன்றுகிறது. சுஜாதவின் அடியேனில் உண்மையாகவே ஒரு பணிவு தெரிந்தது. உங்களது அடியேனில் அடக்கம் போன்றதொரு அகம்பாவமே தெரிகிறது...d...