சில சிந்தனைகள் - 2

ஹாலிவுட் படம் பார்க்கும் ஆர்வக்கோளாறுகளின் கருத்துக்களுக்கு மாறாக 'Luck' இந்திப்படம் எனக்கு மிகப் பிடித்திருந்தது. திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை அனைத்துமே நலம். இது ச‌ஞ்சய் தத் ஸ்பெஷல் என்பேன். ஸ்ருதி is hot.

^^^^^^^^^^^^^^^^^
புதிய‌ தமிழ் கதாநாயகிகளில் 'சிவா மனசுல சக்தி' அனுயா, 'வாமனன்' ப்ரியா, 'நாடோடிகள்' அனன்யா, 'பொய் சொல்லப்போறோம்' பியா, 'காதலில் விழுந்தேன்' சுனைனா ஆகியோர் தேறுகிறார்கள். கொஞ்சமாய் நடிக்கவும் செய்கிறார்கள்.

^^^^^^^^^^^^^^^^^
தமிழைத் தாய்மொழியாய்க் கொண்ட, பிராமணரல்லாத திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் யாரேனும் இருக்கிறார்களா இப்போது? சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஜெயிப்பவர்கள் பிராமணர்களாகவே இருக்கிறார்கள்.

^^^^^^^^^^^^^^^^^
தமிழில் நல்ல இயக்குநர் யார் என்று யாராவது கேட்டால், மணிரத்னம் பெயரை மட்டும் தான் சொல்வேன்; இந்த விஷயத்தில் நான் ஷங்கரைக் கூட சேர்த்திக் கொள்ள மாட்டேன். இப்போது மற்றுமொருவர் தெரிகிறார். அது மிஷ்கின்.

^^^^^^^^^^^^^^^^^
'வாரணம் ஆயிரம்' படத்துக்கு விமர்சனம் எழுதுவது நிறையத் தாமதமாகி கடைசியில் மறந்தே போனேன். அந்தப் படத்தில் அப்படி என்ன இருக்கிறது என எல்லோரும் இப்படிக் கொண்டாடுகிறார்கள் எனப் புரிய‌வில்லை. Bull-shit.

Comments

Keerthi said…
vaaranam aa...review spot on...But kamal is a better director than a director and is some cases way better than Mani R

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்