Posts

ஒரு முக்கிய(மில்லாத) அறிவிப்பு

வாசகர்களுக்கு, நவம்பர் இறுதி வரை வேறு முக்கிய வேலைகளில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், இத்தளத்தில் புதியதாய் ஏதும் பதிவேற்றம் செய்யப்பட மாட்டாது. மீண்டும் டிசம்பரில் சந்திப்போம். -CSK

படித்தது / பிடித்தது - 80

சாதி... சில குறிப்புகள்! - ஆழியூரான் நன்றி : நடைவண்டி

படித்தது / பிடித்தது - 79

குழந்தைகளின் உலகில்..!!! ஏழுமலையும் ஏழுகடலும் தாண்டி மாயமாய் மறைந்து கிடக்கும் பச்சைத்தீவில் வானம் தொட்டு உயர்ந்து நிற்கும் ஆலமரத்தின் அடியில் புதைந்து கிடக்கிறது ராட்சஷனின் உயிரைத் தாங்கி நிற்கும் மரகத வீணை.. ராஜகுமாரன் அதனைத் தேடி எடுத்து உடைக்க யத்தனித்தபோது.. எங்கிருந்தோ வந்த அப்பாவின் குரல் கேட்டு அம்மா காணாமல் போக.. அசதியில் தூங்கி போகிறது குழந்தை..!! இருந்தும் - எப்போது கதை மீண்டும் தொடங்கப்படுகிறதோ அப்போது தான் கொல்லப்படுவோம் என்பதை அறியாதவனாக குழந்தையின் ஆழ்மன அடுக்குகளில் தீராத வன்மம் கொண்டவனாக அலைந்து கொண்டே இருக்கிறான் ராட்சஷன்..!!! - கார்த்திகைப் பாண்டியன் நன்றி : பொன்னியின் செல்வன்

படித்தது / பிடித்தது - 78

என் ஜன்னலின் வழியே... எப்போதும் திறந்திருக்கும் என் ஜன்னலின் வழியே வெளிச்சத்தைத் தவிரவும் வேறு சில வந்து செல்கின்றன வீட்டுக்கார கிழவியின் சப்தம் கிழவியின் வெள்ளைப் பூனை பூனையின் குட்டிகள் புதிதாக புற்றமைத்திருக்கும் எறும்புக் கூட்டம் கரையான் பூரான் தவிர அவ்வப்போது காற்று கூட வந்து செல்கிறது. ஆனால், ஒரு போதும் வரவேயில்லை என் தனிமையை உடைக்கும் ஒரு பலசாலி! - கிருஷ்ணமூர்த்தி நன்றி : பெயரற்ற யாத்ரீகன்.

படித்தது / பிடித்தது - 77

தகப்பனாக இருப்பது "அப்பா இன்னும் வரலை" எனக்கூறும் மகனின் பொய்யை கேட்டுக்கொண்டிருக்கிறேன். வீட்டினுள் இருந்தபடி. "போயிட்டாருப்பா" என திரும்பும் மகனின் முகம் காண இயலாததாய் இருக்கிறது. கடன்காரனாக இருப்பதையும் விட கொடுமையானது சில நேரம்... தகப்பனாய் இருப்பது. - பா.ராஜாராம் நன்றி : கருவேல நிழல்.....

படித்தது / பிடித்தது - 76

அறை கலவியில் முந்திய விந்துக்கு நடிக்கத் தெரியாத மனைவியை உப்புக் கரையாத தோசைக்கு அறைவேன் அழகாய் இருக்கும் மாணவியை அடிக்கடி அழ வைக்க கையெழுத்து நல்ல காரணம் முதலையின் பற்கள் குறித்த கேள்விக்கு அவளை நான் கடைசியாய் அறைந்தேன் முத்தமிடும் வேட்கை மிக முத்தமும் சிலுவையும் இணை பிரியாதவை முத்தமிட்டு சிலுவையில் அறைந்தாலும் சிலுவையிட்டு முத்தம் பறந்தாலும் பேரறிவாளன் நான் நாடகங்களில் நீண்ட வசனம் பேசும் ஷைலக்கின் பாத்திரம் எனதே கடைசி விருந்து நாடகத்திற்கு உங்களுக்கு அனுமதி இலவசம் ஆண்டோனியோ - நேசமித்ரன் நன்றி : நேசமித்ரன் கவிதைகள்

ஒரு குட்டி பூர்ஷ்வாவின் எண்ணங்கள்

சம்பவம் நிகழ்ந்து சரியாய் இரு வாரங்களுக்குப் பிறகு ரோசா வசந்த் தன் தரப்பை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார். அவற்றில் வெளிப்படும் அவரது எழுத்தின் நடையும், கருத்துக்களின் தீவிரமும், விஷயத்தில் நேரடியாய் சம்மந்தப்படாத என் போன்ற ஒரு மூன்றாம் நபரை மிகவும் வசீகரிக்கக் கூடியவை (தொகுத்து கீழே தந்திருக்கிறேன்). கிட்டதட்ட விருமாண்டி படம் பார்ப்பது போல் இருக்கிறது. அது ரோஷாமன் ; இது 'ரோசா'மன் . காலவரிசைப்படுத்தப்பட்ட ரோசாவின் இடுகைகள் : ஜ்யோவராமிற்கு! முடிவுரை. விவாதம் - 1 சென்ற பதிவு. `தண்ணீ'. நடந்தவை-2. பிண்ணணி. நடந்தவை-1 கொலைகாரக் கும்பல்-1 (title unknown) பின்குறிப்புகள் : தலைப்பில் இருக்கும் 'குட்டி பூர்ஷ்வா' என்பது என்னையே குறிக்கிறது என்று சொல்லி இம்முறை தப்பிக்க விரும்பவில்லை; அது ரோசா தான். வழக்கம் போல் ஜ்யோவ்ராம் / ரோசாவுக்கு ஆதரவாய் / எதிராய் எழுதப்பட்டதல்ல இது. ரோசா தரப்பை தொகுப்பதே பிரதான‌ நோக்கம். முன்பு போலவே, 'ஒரு குட்டி பூர்ஷ்வாவின் எண்ணங்கள்' என்ற இத்தலைப்பும் ரோசா பதிவின் பெயரிலிருந்தே எடுத்தாளப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நான் எழுதுவது 'ஒர...

படித்தது / பிடித்தது - 75

உதிரும் மலர்கள் முறைகளை ஒருங்கிணைப்பவர்கள் ஒவ்வொன்றாக ஞாபகமூட்ட பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள் முடிந்ததும் கூடத்திற்கு அழைத்துவரப்பட்டார்கள் வாழ்த்துச் சொல்ல மேடையேறியவர்கள் சோடியம் விளக்கொளியில் மலர்ந்து உதிர்ந்து கொண்டிருந்தார்கள் புதிய மலர்களைத் தேடித் தேடி பகிர்ந்து கொண்டிருந்த இளைஞர்கள் தாம் ரசித்த தாமரை மொட்டை பாதுகாப்பான அடுக்கில் கனவுக்கென சேமித்துக் கொண்டார்கள் ஒலிப் பெருக்கியின் இரைச்சல் கூடத்தின் சப்தத்தோடு பிணக்கு கொண்டிருந்தது புகைப்படமெடுக்க அழைக்காத கோபத்தில் சாப்பிட மறுத்து ஒரு உறவு முறை வெளிநடப்பு செய்து கொண்டிருந்தது மணம் கொண்டவர்களுடான நெருக்கத்தைக் காட்டிக் கொள்ள முனைந்த நிகழ்வுகள் திரையோடான வாழ்க்கையை நிதர்சனப் படுத்தியது புனைவின் இறுதிக் காட்சியாக மணம்கொண்டவர்களுக்கு ஒரு கூட்டம் திகட்ட திகட்ட பந்தி பரிமாறியது கடைசிப் பந்தியில் அமர்ந்த விழா அமைப்பாளர்கள் விழாவின் கூட்டத்தையும் விருந்தின் சுவையையும் சிலாகித்துக் கொண்டிருந்தார் தூர் நெளிந்த ஈயப்பாத்திரத்தில் மீந்த உணவெடுக்க வந்திருந்த மேலாடையில்லாத பாவாடைச் சிறுமி ஐஸ்கிரீம் மறுக்கப்பட்ட புறக்கணிப்பின் வலியை அ...

சில‌ சிந்தனைகள் - 6

அருண் வைத்யநாதனின் அச்சமுண்டு! அச்சமுண்டு! படம் பரவாயில்லை. குறிப்பிடத்தகுந்த விஷயங்கள் என்றால் ப்ரசன்னா, சினேகா இருவரின் தேர்ந்த நடிப்பு, கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை, மற்றும் அருணின் இயல்பான வசனங்கள். Neat and Clean. ^^^^^^^^^^^^^^^^^ நந்தினியின் திருதிரு துறுதுறு படம் சுவராசியமானதொரு முய‌ற்சி. பெண்களால் மட்டுமே எடுக்க முடிந்த மிகுந்த ரசனைக்குரிய சாஃப்ட் ரொமான்ஸ் இதன் ஸ்பெஷாலிட்டி. அதிலும் ரூபா மிக அழகாக இருக்கிறார். அப்புறம் மெளலி மற்றும் வசன‌ங்கள். ^^^^^^^^^^^^^^^^^ கே.எஸ்.ரவிக்குமாரின் ஆதவன் ஏதோ தேறுகிறது. சூர்யாவுக்கு இது வேண்டாத வேலை. வடிவேலு பரவாயில்லை. தசாவதாரம் போன்ற வித்தியாசங்களுக்குப் பிறகும் தன்னுடைய பழைய மூத்திரத்தை - மன்னிக்கவும் சூத்திரத்தை - மாற்ற மறுக்கிறார் இயக்குநர். ^^^^^^^^^^^^^^^^^ எஸ்.பி.ஜனநாதனின் பேராண்மை நன்றாக இருந்தது. குறிப்பாய் அதன் திரைக்கதை, வசனம் மற்றும் ஒளிப்பதிவு. ஜெயம் ரவியும் அந்த அழகான ஐந்து பெண்டுகளும் கூட நன்றாக நடித்திருந்தனர். இந்த வருடத்தின் குறிப்பிடத் தகுந்ததொரு முயற்சி. ^^^^^^^^^^^^^^^^^ பேராண்மை படத்தில் தலித் கதாநாயகனை மற்ற‌வர்...

படித்தது / பிடித்தது - 74

" காலம் பல நேரங்களில் சிலர் மூலமாக பரீட்சை வைத்து விட்டு பின் பாடத்தை நடத்துகிறது. " - அம்பி (' புடவை ' என்ற இடுகையில்). நன்றி : அம்மாஞ்சி