சொற்களைத் தின்பவள்

உனக்கு
"ம்" பிடிக்காது
"OK" பிடிக்காது
"அப்புறம்" பிடிக்காது
அப்புறம் என்னென்னவோ பிடிக்காது.

நிதமொரு சொல்லை உனக்காக 
ஞாபகங்களின் சிடுக்குகளிலிருந்து
சிறகென‌ உதிர்க்கின்றது மனம்.

வெறும் சொற்களை மட்டுமே
ஊன்றுகோலாய்க் கொண்டவனை
சொல்லற்றவனாக்கிப் பார்ப்பதில்
நீ அடையும் சந்தோஷத்தை
வியந்தபடி நொண்டுகிறேன்.

3 comments:

Anonymous said...

எக்சைல் விமர்சனம்-கெடாவெட்டு கண்டின்யூஸ்....

http://vadakkupatti.blogspot.in/2012/05/blog-post.html

parthi said...

பலரின் வாக்குமூலம்..

parthi said...

பலரின் வாக்குமூலம்...